உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த டிஆர்டிஓ மேலாளர் கைது

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த டிஆர்டிஓ மேலாளர் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஜெய்பூர்: பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்புக்கு உளவு பார்த்த டிஆர்டிஓ ஒப்பந்த மேலாளரை உளவுத்துறையினர் கைது செய்துள்ளனர்.இதுபற்றிய விவரம் வருமாறு; ஜெய்சால்மரில் சந்தன் பீல்ட் துப்பாக்கிச்சூடு பயிற்சி மையம் செயல்படுகிறது. இதன் அருகே மத்திய பாதுகாப்பு மேம்பாடு மற்றும் ஆராய்ச்சி மையத்தின் விருந்தினர் மாளிகை உள்ளது. இதன் மேலாளராக தற்காலிக அடிப்படையில் மகேந்திர பிரசாத் (32) என்பவர் பணியாற்றி வருகிறார். உத்தரகாண்ட மாநிலம், பால்யூனைச் சேர்ந்தவர். இவர், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்புக்கு உளவு பார்ப்பதாக சந்தேகம் எழுந்தது. ரகசிய தகவல்களை சமூக ஊடகம் மூலம் அந்நாட்டுக்கு பகிர்ந்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதன்பேரில், அவரின் நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணித்தனர். ரகசியமாக நடைபெற்ற இந்த கண்காணிப்பு நடவடிக்கையில், மகேந்திர பிரசாத் ஏவுகணை, ஆயுத சோதனைகளுக்காக துப்பாக்கிச்சூடு மையத்திற்கு வரும் டிஆர்டிஓ விஞ்ஞானிகள், ராணுவ அதிகாரிகள் நடமாட்டத்தை ஐஎஸ்ஐ அமைப்புக்கு பகிர்ந்ததை கண்டறிந்தனர்.இதையடுத்து, அவரை ராஜஸ்தான் உளவுத்துறை போலீசார், ஜெய்பூரில் உள்ள மத்திய புலனாய்வு விசாரணை மையத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தினர். அவரின் செல்போனை கைப்பற்றி தொழில்நுட்ப ரீதியாக பல்வேறு ஆய்வுகளுக்கு உட்படுத்தினர். அப்போது இந்திய ராணுவம் மற்றும் டிஆர்டிஓ பற்றிய முக்கிய தகவல்களை அவர் ஐஎஸ்ஐக்கு பகிர்ந்து, உளவு வேலை பார்த்ததை கண்டறிந்தனர். இதையடுத்து, மகேந்திர பிரசாத்தை அவர்கள் கைது செய்தனர்.இதுகுறித்து ஜெய்பூர் சிஐடி இன்ஸ்பெக்டர் விஷ்ணுகாந்த் கூறியதாவது: மகேந்திர பிரசாத்திடம் நடைபெற்ற விசாரணையில், அவர் பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தது கண்டறியப்பட்டுள்ளது. அவரை கைது செய்துள்ளோம். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி முழு விசாரணைக்கு உட்படுத்த உள்ளோம். அடுத்த கட்ட விசாரணை தொடரும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

ram
ஆக 13, 2025 15:59

இதுபோல ஆட்களை enquiry செய்த பிறகு encounter செய்து விடலாம்.


KOVAIKARAN
ஆக 13, 2025 12:26

DRDO Defense Ministry ன் கீழ் வருகிறது. எனவே இந்த தேச துரோகியை ராணுவ கோர்ட் சட்டங்களில் படி விசாரித்து தண்டனை வழங்க வேண்டும். இவனுக்கு எதிராக மாவட்ட, மாகாண அல்லது உச்ச நீதிமன்றகளுக்குச் சென்றால் வழக்கு வருடக்கணக்கில் நடக்கும். இறுதியில் உச்சநீதிமன்றம் அவனை விடுதலை செய்துவிடலாம்.


தர்மராஜ் தங்கரத்தினம்
ஆக 13, 2025 10:52

ஆபரேஷன் சிந்தூர் மூலமாக எப்போது DRDO வின் திறமை வெளிப்பட்டது அப்போதே விழித்துக்கொண்டு நமது உளவுத்துறையினர் கண்காணித்திருப்பார்கள்... ஹாட்ஸ் ஆப் அமித் ஷா ஜி ......


saravan
ஆக 13, 2025 10:46

நீமன்றம் போனா அவங்களுக்கு ரிவார்டு தான் கொடுக்காது உடனே ஜாமீன் கொடுத்து வெளியே விட்டுவிடும் தேசிய பாதுகாப்பு ஆட்டத்தில் அடையுங்கள் தப்ப முயன்றால் சுட்டுப் பிடிக்கவும்


ramesh
ஆக 13, 2025 10:05

இந்துவான இவன் ஒரு தேச துரோகி. பணத்துக்காக இந்துவான இவன் முஸ்லீம் நாட்டுக்கு தேச ரகசியத்தை விற்பவன். இவன் பொதுமக்கள் முன்னிலையில் கல் எரிந்து கொல்ல வேண்டும்


V RAMASWAMY
ஆக 13, 2025 09:35

கைது செய்வது, விசாரணை, சிறை வாசம், ஜாமீன், இப்படியே வாழ்நாள் பூராவும் வீணடிக்காமல், தேசத்திற்கு விரோதமாக அவமதிப்பு செய்து பேசுவது, தேச துரோகம் முதலியன செய்யும் கயவர்கள் யாராவதிருந்தாலும் சவூதி அரேபியா முதலிய நாட்டில் தீர்ப்பு வழங்குவது போல் உடனே தீர்த்துக் கட்டிவிடவேண்டும்.


Kalyanaraman
ஆக 13, 2025 09:14

நம்ம ஊர் நீதிமன்றங்கள் இவன் இறக்கும் வரை கேஸ் ஜவ்வாக நடந்து கொண்டே இருக்கும். இருந்தபின் கேசை முடித்து விடுவார்கள். இந்த கேவலமான நீதிமன்றங்கள் என்று தான் திருந்த போகிறதோ நாட்டின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய முட்டுக் கட்டையே இந்த நீதிமன்றங்கள் தான் என்றால் மிகை இல்லை. மக்களின் வரிப்பணம் வீணாகிறது.


Gopal
ஆக 13, 2025 09:10

இவனை சுட்டு கொல்ல வேண்டும். DRDO ஒரு முக்கியமான அமைப்பு.


Rathna
ஆக 13, 2025 09:07

Facebook போலி பெண்கள் மூலமாக, சிறு பணம் மூலமாக பாகிஸ்தானிய மூர்க்கன் வலை விரித்து இருப்பான். இப்போது வாழ்க்கை காலி. அனுபவி.


chennai sivakumar
ஆக 13, 2025 09:05

விசாரணையாவது வெங்காயமாவது. நேரே கண்ணை கைகளை காட்டு AK47 கொண்டு அனுப்பி விடவும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை