உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / குடிநீர் பற்றாக்குறை: அதிகாரிகள் விடுப்பு எடுக்க தடை

குடிநீர் பற்றாக்குறை: அதிகாரிகள் விடுப்பு எடுக்க தடை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சிம்லா: ஹிமாச்சல பிரதேசத்தில் குடிநீருக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், நீர்வளத் துறை அதிகாரிகள் விடுப்பு எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.ஹிமாச்சலில், முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு தலைமையில், காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு கடந்த சில நாட்களாக குடிநீருக்கு கடும் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் அவதிப்படுகின்றனர். இந்நிலையில், நீர்வளத்துறை அதிகாரிகள் விடுப்பு எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக, ஹிமாச்சல் அரசு நேற்று தெரிவித்துள்ளது.இது குறித்து அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஏற்கனவே விடுப்பில் சென்ற அதிகாரிகளும் பணிக்கு திரும்ப வேண்டும். மாநிலத்தின் தண்ணீர் தட்டுப்பாடு பிரச்னையை தீர்க்க நீர்வளத் துறையின் அனைத்து தலைமை பொறியாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுஉள்ளது.மக்களுக்கு முறையாக குடிநீர் வினியோகம் செய்ய உடனடி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாநிலத்தில் நிலவும் சூழ்நிலையை கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை