உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / போலீசை காரில் இழுத்துச் சென்ற போதை டிரைவர்: ஹரியானாவில் துணிகரம்

போலீசை காரில் இழுத்துச் சென்ற போதை டிரைவர்: ஹரியானாவில் துணிகரம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பரிதாபாத்: கார் ஆவணங்களை சோதனை செய்ய வந்த போலீஸ்காரரை, போதையில் இருந்த டிரைவர் ஒருவர் காரில் இழுத்துச் சென்ற துணிகர சம்பவம் ஹரியானாவில் நடந்துள்ளது.ஹரியானா மாநிலம் பரிதாபாத்தின் பல்லப்கார்க் பகுதியில் போதையில் இருந்த கார் டிரைவர் ஒருவர், நடுரோட்டில் வாகனத்தை நிறுத்தியுள்ளார். இதனையடுத்து அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அங்கு பணியில் இருந்த போலீஸ் அதிகாரி ஒருவர், டிரைவரிடம் விசாரணை நடத்தினார். அபராதம் வசூலிக்க ஆவணங்களை காட்டுமாறு கூறியுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.தொடர்ந்து, காருக்குள் சென்று ஆவணங்களை சோதனை செய்ய, அந்த போலீஸ்காரர் காரை பிடித்தபடி உள்ளே எட்டிபார்த்தார். அப்போது கார் டிரைவர் திடீரென கார் ஆக்ஸிலேட்டரை மிதித்தார். கார் கிளம்பியதால், அந்த போலீஸ்காரர் வேகமாக இழுத்துச் செல்லப்பட்டார். உடனடியாக அங்கிருந்தவர்கள் மற்றும் மற்ற போலீஸ் அதிகாரிகள் அவரை மீட்டனர். அந்த கார் டிரைவரை போலீசார் கைது செய்தனர். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

ponssasi
ஜூன் 22, 2024 18:34

அந்த ஓட்டுனரை இவர்களால் தொடக்கூட முடியாது. சில மாதங்களுக்கு முன் ECR பகுதியில் மது போதையில் வந்த மூன்று இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். சில நிமிடங்களில் அவர்களை விடுவிக்க மேலிடத்தில் இருந்து தகவல் வருகிறது, மதுவில் வந்த நபர்கள் கொண்டாட்டத்துடன் அங்கேயே பீர் அருந்திவிட்டு ஒரு வாகனத்தை போலீஸ் மீது மோதி தள்ளி நின்னு டூட்டி பாருங்க சார் என சொல்லிவிட்டு வாகனத்துடன் புறப்பட்டு சென்றனர். பாவம் காவலர்கள் அவமானத்துடன் நின்றனர். இதுதான் இன்றைய காலவர் நிலை


Palanisamy Sekar
ஜூன் 22, 2024 16:41

இதுபோல பல நிகழ்வுகள் நாட்டில் பல இடங்களில் நடந்துகொண்டுதான் உள்ளது. டிராபிக் போலீசாக நடித்த வடிவேலுவை ஊரின் எல்லைக்கே கொண்டு சென்று சுடுகாட்டில் விட்டு சென்ற லாரி போல பல உண்டு. என்ன வெளியே தெரிவதில்லை. வீடியோ எடுக்க ஆளில்லைபோல


nagendhiran
ஜூன் 22, 2024 15:44

எப்படியும் வைத்து செய்வாங்க அந்த ஓட்டுனரை?


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை