உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மூடநம்பிக்கையால் தாய், குழந்தை ஊரை விட்டு வெளியே தங்க வைப்பு

மூடநம்பிக்கையால் தாய், குழந்தை ஊரை விட்டு வெளியே தங்க வைப்பு

துமகூரு : மூடநம்பிக்கையால் தாய், பச்சிளம் குழந்தையை ஊருக்குள் அனுமதிக்காமல், ஊருக்கு வெளியே குடிசை அமைத்து தங்க வைத்த கொடுமை நடந்து உள்ளது.நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகியும், கர்நாடகாவின் சில பகுதிகளில் தீண்டாமை, மூடநம்பிக்கை இன்னும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் துமகூரின் சிரா குந்தனஹட்டி கொல்லரஹட்டி கிராமத்தில், குழந்தை பிறந்தவுடன் ஊருக்குள் அழைத்து வந்தால், ஊருக்கு கெட்டது நடக்கும் என்ற மூடநம்பிக்கை இன்னும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் தாயும், பிறந்த குழந்தையும் ஊருக்கு வெளியே, குடிசை அமைத்து தங்க வைக்கப்படுகின்றனர்.கடந்த சில மாதங்களுக்கு முன்பு, குடிசையில் தங்க வைக்கப்பட்ட, பச்சிளம் குழந்தை உடல்நலக்குறைவால் உயிரிழந்தது. இதையடுத்து மூடநம்பிக்கையை கடைபிடிக்க வேண்டாம் என்று கிராம மக்களை, அரசு அதிகாரிகள் எச்சரித்து இருந்தனர். ஆனால் இன்னும் கிராம மக்கள் மாறவில்லை.கிராமத்தில் வசிக்கும் பாலம்மா, 25 என்பவருக்கு, கடந்த மாதம் பெண் குழந்தை பிறந்தது. தாய், குழந்தையை ஊருக்குள் விடாமல், ஊருக்கு வெளியே குடிசை அமைத்து, குடும்பத்தினர் தங்க வைத்து உள்ளனர். இதுபற்றி சிரா தாலுகா நீதிமன்ற நீதிபதி கீதாஞ்சலிக்கு, நேற்று தகவல் கிடைத்தது.உடனடியாக கிராமத்திற்கு சென்ற அவர், பாலம்மாவையும், குழந்தையையும் மீட்டு வீட்டிற்கு அழைத்து சென்றார். தாயும், குழந்தையும் வீட்டில் தான் தங்குவர். அவர்களை வெளியே அனுப்பி வைக்க முயன்றால், நடவடிக்கை எடுக்கப்படும் என்று, பாலம்மா குடும்பத்தினரை நீதிபதி எச்சரித்துவிட்டுச் சென்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை