உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பாக்.,கில் நிலநடுக்கம்: டில்லியிலும் உணரப்பட்டது

பாக்.,கில் நிலநடுக்கம்: டில்லியிலும் உணரப்பட்டது

புதுடில்லி: பாகிஸ்தானில் 5.8 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கம், டில்லியிலும் உணரப்பட்டது.பாகிஸ்தானில் இன்று மதியம் 12:58 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.8 ஆக பதிவானது. அந்நாட்டில் உள்ள பஞ்சாப் மற்றும் கைபர் பக்துன்க்வா ஆகிய மாகாணங்களில் உணரப்பட்டது. இதனால் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் சேதம் குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை.இதன் காரணமாக ஏற்பட்ட நில அதிர்வு நமது தலைநகர் டில்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் உணரப்பட்டது. இதனால், பாதிப்பு ஏதும் இல்லை என்றாலும் மக்கள் மத்தியில் லேசான அச்ச உணர்வை ஏற்படுத்தியது.ஆப்கானிஸ்தானிலும் நில அதிர்வு உணரப்பட்டதாக தெரிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ