உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மதமாற்ற வழக்கில் கைதான சங்கூர் பாபாவின் ரூ.40 கோடி சொத்துக்கள் பறிமுதல்

மதமாற்ற வழக்கில் கைதான சங்கூர் பாபாவின் ரூ.40 கோடி சொத்துக்கள் பறிமுதல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: மதமாற்ற வழக்கில் கைதான சங்கூர் பாபாவுக்கு சொந்தமான, ரூ.40 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது.உத்தரபிரதேசத்தின் மாதம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் சங்கூர் பாபா என்ற ஜலாலுதீன், என்பவர் மதமாற்றம் உள்ளிட்ட நாச வேலைகளில் ஈடுபட்டு வந்ததாக பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=s7vnjpbo&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஆரம்பத்தில் தர்கா முன்பு வளையல் மற்றும் தாயத்து விற்று வந்த சங்கூர் பாபா, மதமாற்ற செயல்களுக்காக ரூ.500 கோடி வரை வெளிநாடுகளில் பணத்தை பெற்று வந்தது தெரிய வந்தது.இது தொடர்பாக இரு மாநிலங்களில் 14 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். உத்தரபிரதேசத்தில் 12 இடங்களிலும், மஹாராஷ்டிராவின் மும்பையில் உள்ள பந்த்ரா, மஹிம் ஆகிய இரு இடங்களிலும் சோதனை நடந்தது.இந்நிலையில், சங்கூர் பாபாவுக்கு சொந்தமான, மகாராஷ்டிரா, உ.பி.,யில் இருந்த ரூ.40 கோடி மதிப்புள்ள சொத்துக்களை பறிமுதல் செய்து அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. பாபா மற்றும் அவரது நெருங்கிய கூட்டாளிகளுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

என்றும் இந்தியன்
ஜூலை 18, 2025 17:11

தர்கா முன்பு வளையல் மற்றும் தாயத்து விற்று வந்த சங்கூர் பாபா, மதமாற்ற செயல்களுக்காக ரூ.500 கோடி வரை வெளிநாடுகளில் பணத்தை பெற்று வந்தது தெரிய வந்தது.????ஒரு சாதாரண ஏழையிடம் ரூ 500 கோடியா??? சங்கூர் பாபா???முஸ்லீம் ஜலாலுதீனா???


M Ramachandran
ஜூலை 18, 2025 13:17

இன்னும் சிறப்பாக நோண்டினால் அயல் நாட்டு பணம் நிறைய கிடைக்கும். அந்த நாடுகளை நாம் உலகுக்கு அடையாளம் காட்டலாம். இங்கும் சில கருங்காலிகள் மாட்டலாம்


BHARATH
ஜூலை 18, 2025 11:58

தீவிரவாத சொத்து 40 கோடி கம்மி


nisar ahmad
ஜூலை 18, 2025 10:47

பஜகவின் சொத்து மதிப்பு 40 கோடி உயர்வு.


Shekar
ஜூலை 18, 2025 14:08

பாவம், உனக்கு ரெம்ப வலிக்கிதோ. அது ஏன் அங்க அடிச்சா உனக்கு வலிக்குது.


mdg mdg
ஜூலை 18, 2025 10:24

இருக்கவே இருக்கு சுப்ரீம் கோர்ட்டு அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு தடை விதிக்க. நீங்க கவலைப்படாதீங்க. அபிஷேக் ஷிங்வி வைத்து ஒரு கேஸ் போடுங்க.


sekar
ஜூலை 18, 2025 09:29

வழக்கு உடையர்த்துக்குள்ள பாபா டிக்கெட் வாங்கிவிடுவார் லண்டனுக்கு.