உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / முயற்சி திருவினையாக்கும்; சோதனைகளை வென்று சாதனையாக மாற்றிய கபிலன்!

முயற்சி திருவினையாக்கும்; சோதனைகளை வென்று சாதனையாக மாற்றிய கபிலன்!

டேராடூன்: மதுரையை சேர்ந்த பொறியியல் பட்டதாரி கபிலன், வாழ்க்கையில் பல்வேறு சோதனைகளை எதிர்கொண்ட போதிலும், விடாமுயற்சியுடன் போராடி வென்று, ராணுவத்தில் அதிகாரியாக உயர்ந்துள்ளார்.உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள இந்திய ராணுவ அகாடமியில், பயிற்சி முடித்த 456 புதிய ராணுவ அதிகாரிகள் அணிவகுப்பு நடந்தது. அப்போது ஒரு நெகிழ்ச்சி சம்பவம் நடந்து உள்ளது. அதன் விபரம் வருமாறு: மதுரைக்கு அருகிலுள்ள மேலூரில் ஒரு சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர் தான் கபிலன். பெற்றோர் கூலி வேலை பார்த்து வந்தனர். அரசு பள்ளியில் படித்த கபிலன், தன் முயற்சியால் அண்ணா பல்கலைக்கழகத்தில் சிவில் இன்ஜினியரிங் பட்டம் பெற்றார். அவருக்கு ராணுவத்தில் அதிகாரியாக சேர வேண்டும் என்பது தீராத வேட்கை. அதற்காக தொடர்ந்து முயற்சித்தார். ஒவ்வொரு முறையும் அவருக்கு சோதனைகள் வந்து கொண்டே இருந்தன. அவரது தாயாருக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது. சிகிச்சை அளித்தும் பலன் இன்றி அவர் உயிரிழந்தார். கூலி வேலை பார்த்து வந்த தந்தைக்கு பக்கவாதம் பாதிப்பு ஏற்பட்டது. சக்கர நாற்காலியில் மட்டுமே நடமாடும் நிலைக்கு தள்ளப்பட்டார் தந்தை. அவருக்கு சிகிச்சை அளிப்பதுடன், குடும்பத்தை கவனித்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டார் கபிலன். இப்படி பலப்பல சோதனைகளையும் எதிர்கொண்ட அவர், அனைத்தையும் வெற்றி கொண்டு ராணுவ சேர்க்கை தேர்வில் வெற்றி பெற்றார். டேராடூன் ராணுவ அகாடமி பயிற்சி நிறைவு விழாவில், சக்கர நாற்காலியில் வந்திருந்த தந்தை, இறந்து போன தாயாரின் பிரேம் செய்யப்பட்ட புகைப்படத்துடன் தன் வெற்றியை கொண்டாடினார் கபிலன்.இது குறித்து, லெப்டினன்ட் கபிலன் கூறியதாவது: தைரியம் என்னை ஊக்குவிக்கிறது. நான் பல முறை தோல்வியுற்றேன். ஆனால் நான் ராணுவத்தில் சேர வேண்டும் என்று நான் பிடிவாதமாக இருந்தேன். நான் அதைச் தற்போது செய்தேன். இது எனது தனிப்பட்ட வெற்றி மட்டுமல்ல; இது இந்திய ராணுவத்தில் சேர விரும்பும் ஒவ்வொருவருக்கும் சொந்தமானது. தினமும் 100 ரூபாய் சம்பாதித்த ஒரு தினக்கூலித் தொழிலாளியின் மகனான என்னைப் போன்ற ஒருவரால் அதைச் செய்ய முடியும் என்றால், அனைவராலும் முடியும்.நான் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வேலைக்குச் செல்வேன், வீடு திரும்பிய பிறகு, மாலை 6 முதல் இரவு 10 மணி வரை படிப்பேன். இவர் அவர் கூறினார். அதுமட்டுமின்றி கபிலனின் இளைய சகோதரர், இனியவன், சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Subramanian
டிச 16, 2024 08:42

வாழ்த்துகள். பாராட்டுகள்


janarthanan ja
டிச 16, 2024 05:25

காங்கிரதுலேஷன்ஸ்


N Annamalai
டிச 15, 2024 21:57

நீங்கள் என்றும் முன் உதாரணமாக இருப்பீர்கள் .வாழ்த்துக்கள் அடுத்த சிகரத்தை தொட .


Sankar Ramu
டிச 15, 2024 17:39

இலவசத்தை நம்பி இல்லாமல் உழைப்பால் உயர்ந்த கபிலன். வாழ்த்துக்கள்.


அ. மயில்சாமி
டிச 15, 2024 15:21

தடைகள் எத்தனை வந்தாலும், மனஉறுதி மட்டும் இருந்தால் போதும், குறிக்கோளை அடைய ... மாணவர்களுக்கு நல்ல முன்னுதாரணம். வாழ்த்துகள்???


Rpalni
டிச 15, 2024 15:09

திருட்டு த்ரவிஷ கொள்ளை கூட்டத்தை நம்பாமல் வாழ்க்கையில் வெற்றி பெற வாழ்த்துக்கள்


Kumar Kumzi
டிச 15, 2024 14:14

உங்களின் கடின உழைப்பும் நாட்டுப்பற்றும் உங்களை மென்மேலும் உயற்றும் அத்தோடு உங்கள் பெற்றோர்களின் கனவும் நிறைவேற வாழ்த்துக்கள்


Oru Indiyan
டிச 15, 2024 11:38

மிக சிறந்த உதாரணம். வாழ்த்துக்கள் கபிலன்.


Muthu Mib
டிச 15, 2024 11:05

Iron man with strong mental will power.. Kabilan. congratulations...


Bahurudeen Ali Ahamed
டிச 15, 2024 10:57

வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் கபிலன், மென்மேலும் உயர்ந்து தலைமைப்பதவிகளை அலங்கரிக்கவேண்டும்


புதிய வீடியோ