உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரூ.15 கோடி கொள்ளை தம்பதியை பிடிக்க தீவிரம்

ரூ.15 கோடி கொள்ளை தம்பதியை பிடிக்க தீவிரம்

விஜயநகர்:

விஜயநகரைச் சேர்ந்தவர் சுரேந்திர குமார் ஜெயின். ஹொசஹள்ளியில் நகைக்கடை நடத்தி வருகிறார். ஏழு மாதங்களுக்கு முன்பு, இவரது வீட்டில், நம் அண்டை நாடான நேபாளத்தைச் சேர்ந்த நம்ராஜ், செக்யூரிட்டியாக பணியில் சேர்ந்தார். அவருடன் அவரது மனைவியும் வந்திருந்தார். இருவரும் தன் வீட்டின் வளாகத்தில் உள்ள சிறிய அறையை, சுரேந்திர குமார் ஜெயின் கொடுத்தார்.

நம்ராஜ் மனைவி, உரிமையாளர் வீட்டில் பணிப்பெண்ணாக வேலை செய்து வந்தார். நவ., 1ம் தேதி குஜராத்தில் நடந்த ஆன்மிக நிகழ்ச்சியில் பங்கேற்க, சுரேந்திர குமார் ஜெயின், தன் குடும்பத்தினருடன் சென்றிருந்தார். நவ., 7ல் திரும்பி வந்தபோது, வீட்டில் 15.15 கோடி ரூபாய் மற்றும் தங்க நகைகளை திருடு போனது தெரிய வந்தது.விஜயநகர் போலீசில், நேபாள தம்பதி மீது புகார் அளித்திருந்தார். அதற்குள், இத்தம்பதி, பஸ், ரயில் மூலம் நேபாளம் சென்றுவிட்டனர்.அவர்களை கைது செய்ய இன்டர்போல் அதிகாரிகளின் உதவியை, பெங்களூரு போலீசார் நாடி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி