உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / விவசாயிகளுக்கு சேவை செய்வது பாக்கியம்: பிரதமர் மோடி பெருமிதம்!

விவசாயிகளுக்கு சேவை செய்வது பாக்கியம்: பிரதமர் மோடி பெருமிதம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ''கடினமாக உழைக்கும் விவசாயிகளுக்கு சேவை செய்வது எனக்கு கிடைத்த பாக்கியம்'' என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக, பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: கடந்த 11 ஆண்டுகளில் விசாயிகளுக்காக பா.ஜ., அரசு பல்வேறு வளர்ச்சி திட்டங்களை கொண்டு வந்துள்ளது. அவர்களது வாழ்வில் செழிப்பை உறுதி செய்துள்ளது. கடினமாக உழைக்கும் விவசாயிகளுக்கு சேவை செய்வது எனக்கு கிடைத்த பாக்கியம். விவசாய துறையில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்துள்ளோம். மண் வளம் மற்றும் நீர்ப்பாசனம் போன்ற விஷயங்களில் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம்.அவை பெரிதும் விவசாயிகளுக்கு பயன் அளித்துள்ளன. விவசாயிகள் நலனுக்காக வரும் காலத்தில், எங்களது பணி தொடரும். விவசாயிகளின் கண்ணியம் மற்றும் செழிப்புக்காக நாங்கள் பணியாற்றி உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

spr
ஜூன் 07, 2025 18:18

விவசாயத்தை ஒரு கார்ப்போரேட் நிறுவனம் போல ஆக்கலாம் விவசாயத்திற்கு உதவும் இயந்திரங்களை உற்பத்தி செய்ய ஊக்குவிக்கலாம் . விளைச்சலுக்குப் பயன்படாத நிலங்களை கூட அதனதன் இயல்புக்கு ஏற்ப சீர் செய்து ஏதேனும் ஒரு பொருளை உற்பத்தி செய்ய, குறைந்த கட்டணத்தில் குத்தகைக்கு கொடுக்க வழி செய்யலாம்.ஆறுகளை ஒன்றிணைத்து வீணாகப் போகும் நீரைத் தேக்கி வைத்து நீர்வளத்தைப் பெருக்கலாம்.அதீத மழையால் விளையும் இழப்பைத் தடுக்கலாம்.இதுதான் விவசாயிகளுக்கு உதவும் வழிகள்.இதனைச் செய்யலாமே. வெறுமனே குரல் கொடுப்பதில் பலனில்லை


Neelachandran
ஜூன் 07, 2025 17:46

புகழ்ந்துரைப்பதில் என்ன பயன்.கட்டுபடியாகும் விலையை கொடுக்க வேண்டும்.


நிக்கோல்தாம்சன்
ஜூன் 07, 2025 17:39

ஆக்கமும் இயற்கையை நேசிக்கும் விதத்தில் விவசாய நண்பர்களை இனம் கண்டு முன்னெடுத்து செல்லுங்கள் பிரதமர் அவர்களே


அப்பாவி
ஜூன் 07, 2025 12:34

நாற்று நட்டு, களை பறித்து, அறுவடை செய்து உதவின ஜாக்சன் துரை மாதிரி.


Ramesh Sargam
ஜூன் 07, 2025 12:12

அடுத்து நம் நாட்டை இரவு, பகலாக, வருடம் முழுவதும் எதிரி நாட்டினரிடமிருந்து காப்பாற்றும் ராணுவ வீரர்களுக்கும் நாம் சேவை செய்யவேண்டும், அவர்களை முதலில் மதிக்கவேண்டும்.


RAAJ68
ஜூன் 07, 2025 12:02

விவசாயம் பற்றி பேசும் நீங்கள் சாப்பாட்டு அரிசியின் விலை என்ன என்று தெரியுமா உங்களுக்கு. விலைவாசி பற்றியும் பேசுங்கள்


ஆரூர் ரங்
ஜூன் 07, 2025 12:56

80000 ரூபாய் ஐபோன் மூலம் அரிசி விலை பற்றி கவலைப்படும் உங்களுக்கு ரேஷன் அரிசி முழுவதும் மத்திய அரசால் அளிக்கப்படுவது தெரிந்திருக்காது.


vivek
ஜூன் 07, 2025 12:57

நீ சாப்பிடாமல் பட்டினி கிடக்கிறாயா....அறிவிலி


நாஞ்சில் நாடோடி
ஜூன் 07, 2025 13:24

மத்திய அரசு கொடுக்கும் அரிசியில் ஸ்டிக்கர் ஓட்டுவது திராவிட அரசு ...


MARUTHU PANDIAR
ஜூன் 07, 2025 15:13

ரேஷன் அரிசியானது நெல் கொள்முதல் நிலையம் தொடங்கி அதான் அந்த வாணிப கழகம் வழியாக மக்களுக்கு கிடைக்கும் வரையில் நடக்கும் ஊழல்கள் என்ன, அரிசியின் தரம் எவ்வாறு அதன் மூலம் செயற்கையாக பாதிப்புக்கு உள்ளாகிறது என்பதெல்லாம் தெரியுமா பாஈ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை