உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பதவியேற்பு விழா ஏற்பாடுகள் தீவிரம்; மஹா., முதல்வரை அறிவிப்பதில் தான் தாமதம்

பதவியேற்பு விழா ஏற்பாடுகள் தீவிரம்; மஹா., முதல்வரை அறிவிப்பதில் தான் தாமதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை : மஹாராஷ்டிராவில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் ஆளும் மஹாயுதி கூட்டணி, 288 தொகுதிகளில், 230ல் வென்றது. இதில், பா.ஜ., மட்டும் 132ல் வென்று தனிப்பெரும் கட்சியாக உள்ளது. முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா, 57 இடங்களிலும், துணை முதல்வர் அஜித் பவாரின் தேசியவாத காங்., 41 இடங்களிலும் வென்றன.தேர்தல் முடிவுகள் வெளியாகி, 10 நாட்களை கடந்தும், முதல்வர் பதவிக்கான போட்டி நிலவுவதால், புதிய அரசு அமைவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. தனிப்பெரும் கட்சி என்பதால், முதல்வர் பதவியை பா.ஜ., கேட்கிறது. ஆனால், கூட்டணி தர்மம், கவுரவ பிரச்னை உள்ளிட்ட காரணங்களை காட்டி, ஏக்நாத் ஷிண்டேயே முதல்வராக தொடர வேண்டும் என்று சிவசேனா வலியுறுத்தி வருகிறது.இதற்கிடையே, பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் மும்பையில் இன்று நடக்க உள்ளது. இந்தக் கூட்டத்தில், கட்சியின் சட்டசபை தலைவர், அதாவது முதல்வர் தேர்ந்தெடுக்கப்படுவார் என கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து, மஹாயுதி கட்சிகளின் கூட்டம் நடத்தப்பட்டு, கவர்னர் ராதாகிருஷ்ணனை சந்தித்து, ஆட்சி அமைக்க உரிமை கோருவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. பதவியேற்பு விழா நாளை நடைபெறும் என்று பா.ஜ., ஏற்கனவே அறிவித்துள்ளது. மும்பை ஆசாத் மைதானத்தில், பதவியேற்பு விழாவுக்கான மேடை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில், தானே மாவட்டத்தில் இருந்து மும்பைக்கு திரும்பிய காபந்து முதல்வர் ஏக்நாத் ஷிண்டேயை, நேற்று இரவு சந்தித்த பா.ஜ., மூத்த தலைவர் தேவேந்திர பட்னவிஸ், உடல்நலம் குறித்து விசாரித்தார். ஒரு மணி நேரத்துக்கும் மேல் இந்த சந்திப்பு நடந்தது. அப்போது, துணை முதல்வர் பதவியை ஏற்க தயாராக இருப்பதாக பட்னவிசிடம் ஷிண்டே கூறியதாகக் கூறப்படுகிறது. முதல்வர் பதவிக்கு கடும் போட்டி நிலவும் நிலையில், ஷிண்டே - பட்னவிஸ் சந்திப்பு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

MADHAVAN
டிச 04, 2024 12:41

இந்த பிஜேபி சங்கிங்கதான் போன வருஷம் கர்நாடக முதல்வரை தேர்ந்தெடுக்க முடியாம காங்கிரஸ் திணறுதுன்னு, பீ சப்பி கட்சி தோத்துப்போன பொறாமைல கதறி கதறி ஊளைவிட்டுச்சுங்க,


வைகுண்டேஸ்வரன்
டிச 04, 2024 12:20

எத்தனை பதவி கிடைத்தாலும் சிலருக்கு திருப்தி இல்லை என்று நேத்து அமைச்சர் கட்கரி பேசினார். ஆனால் முதல்வர், பசையுள்ள துறைகளைத் தர பாஜக மறுக்கிறது. இதைச் சொன்னால் கொத்தடிமை, திமுக என்று பாஜக ஆதரவுக் கூட்டம் கூவுவது செம அறிவிலித்தனம்.


venugopal s
டிச 04, 2024 09:15

கல்யாண தேதி, முகூர்த்தம், மண்டபம், சாப்பாடு, ஐயர் எல்லாம் தயார், மாப்பிள்ளை மட்டும் தான் யார் என்று முடிவாகவில்லை!


பாமரன்
டிச 04, 2024 08:34

ராவுல போயி ஒடம்பு எப்படி இருக்குன்னு ஒரு மணி நேரம் சாரிச்சிட்டு வந்தாப்லயாம்...


பாமரன்
டிச 04, 2024 08:32

ஸோ சேட்...


VENKATASUBRAMANIAN
டிச 04, 2024 07:51

கூட்டணி தர்மம் கடைபிக்கிறார்கள். மரியாதை கொடுக்கிறார்கள். ஆனால் இங்கே திமுக என்ன செய்கிறது. தனிபெருபான்மை பெற்றாலும் கூட்டணி கட்சிகளை விட்டு கொடுக்காமல் உள்ளனர். இங்கே கொத்தடிமைகள் உள்ளனர்.இதுதான் வித்தியாசம்


Indian
டிச 04, 2024 09:16

உன் கருத்து தான் கொத்தடிமை கருத்து ஆக உள்ளது .


Ramaraj P
டிச 04, 2024 07:34

தோல்வி அதுவும் எதிர்கட்சி தலைவராகக் கூட முடியாத வரலாற்று தோல்வி அடைந்தும் புத்தியில்லாத உ. பி. கடந்த மூன்று ஆண்டுகள் எந்த கூட்டணி ஆட்சி செய்தது.


Raj
டிச 04, 2024 04:25

வெற்றி பெற்றும் பயன் இல்லை, 10 நாட்களுக்கு மேலாகியும் ஒரு மாநில முதலமைச்சரை தேர்வு செய்ய முடியவில்லை, பின்பு எப்படி 5 ஆண்டு கால ஆட்சி? வாக்களித்த மக்களின் நம்பிக்கை?


புதிய வீடியோ