உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ராஜ் தாக்கரே உடன் கை கோர்க்கிறார் ஏக்நாத் ஷிண்டே

ராஜ் தாக்கரே உடன் கை கோர்க்கிறார் ஏக்நாத் ஷிண்டே

மும்பை: மஹாராஷ்டிராவில் உள்ள கல்யாண்- டோம்பிவ்லி மாநகராட்சி மேயர் பதவியை கைப்பற்ற ராஜ் தாக்கரேயின் மஹாராஷ்டிரா நவநிர்மான் சேனா கட்சியுடன் துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனா கட்சி கூட்டணி அமைக்க திட்டமிட்டு வருகிறது.மஹாராஷ்டிராவில் சமீபத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில், பாஜ கூட்டணி மும்பை மாநகராட்சி உள்ளிட்ட முக்கிய மாநகராட்சிகளை கைப்பற்றி உள்ளது. இந்த தேர்தலில் உத்தவ் தாக்கரேயின் சிவசேனா மற்றும் ராஜ்தாக்கரேயின் மஹாராஷ்டிரா நவ நிர்மான் சேனா கட்சி கூட்டணி அமைத்தது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=9k1lhkuk&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பாஜ கூட்டணி கைப்பற்றிய மாநகராட்சிகளில் கல்யாண் - டோம்பிவ்லி மாநகராட்சியும் ஒன்று. இங்கு மேயர் பதவியை கைப்பற்ற 62 கவுன்சிலர்களின் ஆதரவு தேவை. அதில் பாஜ 50, ஏக்நாத் ஷிண்டே தரப்பு 53 இடங்களில் வெற்றி பெற்றது. மேயர் பதவிக்கு இரு கட்சிகளும் உரிமை கோருவதால், கூட்டணியில் இழுபறி நீடிக்கிறது.இந்நிலையில், மேயர் பதவியை கைப்பற்ற, மஹாராஷ்டிரா நவநிர்மான் சேனா கட்சியுடன் கூட்டணி வைக்க ஏக்நாத் ஷிண்டே தரப்பு முடிவு செய்துள்ளது. அக்கட்சிக்கு 5 கவுன்சிலர்கள் உள்ளனர். மேயர் பதவியை கைப்பற்ற இன்னும் 4 பேரின் ஆதரவு தேவைப்படுகிறது. இது தொடர்பாக இரு கட்சிகளின் மூத்த நிர்வாகிகள் சந்தித்து பேசி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

R K Raman
ஜன 26, 2026 14:09

கல்யாணைக் கொடுத்து மும்பையை வாங்க வேண்டும் என்ற சாதுர்யம் இல்லை பா ஜ க வுக்கு


KR india
ஜன 21, 2026 18:53

பா.ஜ.க.வினரே நீங்கள் தவறு செய்கிறீர்கள். ஏற்கனவே, முதல்வர் பதவியை திரு. ஏக்நாத் ஷிண்டே, மிகுந்த கடினமான, மனத்துடன், விருப்பமில்லாமல், விட்டுக் கொடுத்துள்ளார். மேலும், மேலும் அவரை ஏமாற்றினால், எப்போது வேண்டுமானாலும் , அவர் பா.ஜ.க விற்கு எதிராக திரும்ப வாய்ப்புண்டு என்பதை அவரது முகமே சொல்கிறது. மேயர் பதவியை அவரது கட்சிக்கு விட்டு கொடுப்பது தான் , பாரதீய ஜனதாவுக்கு நல்லது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை