சிறுவன் ஓட்டிய கார் மோதி முதியவர் காயம்
புதுடில்லி:சிறுவன் ஓட்டிச் சென்ற கார் மோதி, 72 வயது முதியவர் காயமடைந்தார்.ரோஹினியில் நேற்று முன் தினம் மாலை 5:30 மணிக்கு, தேவேந்தர்,72, என்பவர் ஸ்கூட்டரில் சென்றார். திடீரென ஒரு கார், ஸ்கூட்டர் மீது மோதியது. சரிந்து விழுந்த தேவேந்தர் பலத்த காயம் அடைந்தார். தகவல் அறிந்து வந்த போலீசார், தேவேந்தரை மீட்டு பி.எஸ்.ஏ., மருத்துவமனையில் சேர்த்தனர். அவரது உடல்நிலை சீராக இருப்பதாக டாக்டர்கள் கூறினர்.இதற்கிடையில், ஸ்கூட்டர் மீது மோதிய காரை 16 வயது சிறுவன் ஓட்டி வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.