உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆட்டோவில் சென்ற முதியவரிடம் துப்பாக்கி முனையில் கொள்ளை

ஆட்டோவில் சென்ற முதியவரிடம் துப்பாக்கி முனையில் கொள்ளை

புதுடில்லி:துப்பாக்கி முனையில் முதியவரிடம் இருந்து, 25 லட்ச ரூபாயை கொள்ளையடித்த இருவரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து, 9 லட்ச ரூபாயை பறிமுதல் செய்துள்ளனர்.கடந்த 5ம் தேதி, சுனில்குமார், 62, என்பவர் சாந்தினி சவுக் பகுதிக்கு செல்வதற்காக, ஆட்டோ ரிக் ஷாவில் சென்று கொண்டிருந்தார். டிராபிக் சிக்னல் ஒன்றில் ஆட்டோ நின்ற போது, அதில் ஏறிய யோகேஷ்குமார் என்ற கல்லு, 33, என்ற ரவுடி, திடீரென துப்பாக்கியை காட்டி, மிரட்டி, அந்த முதியவரிடம் இருந்த பையை பறித்து சென்றார்.அருகில், நின்றிருந்த முகேஷ்குமார் என்பவரின் பைக்கில் ஏறி தப்பினார். அந்த பையில், 5 லட்ச ரூபாய் இருந்ததாக முதலில் புகாரில் கூறிய அந்த நபர், நேற்று அவரிடம் கொள்ளையடித்து தப்பியவனை போலீசார் பிடித்ததும், 25 லட்ச ரூபாயை இழந்து விட்டதாக கூறினார்.இந்நிலையில், விசாரணை மேற்கொண்ட போலீசார், அந்த இருவரிடம் இருந்து, ஒன்பது லட்ச ரூபாயை கைப்பற்றினர். மீதி பணத்தை அவர்கள் செலவழித்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.அந்த முதியவர், 25 லட்ச ரூபாயை, வர்த்தக காரணங்களுக்காக வைத்திருந்தார் என போலீசில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ