உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தேர்தல் கமிஷன் அறிவுறுத்தல்

தேர்தல் கமிஷன் அறிவுறுத்தல்

புதுடில்லி :டில்லியில், தலைமை தேர்தல் கமிஷனர் ராஜிவ் குமார் தலைமையில், தேர்தல் பார்வையாளர்கள், காவல் துறை அதிகாரிகள் பங்கேற்ற கூட்டம் நடந்தது. இதில், சுதந்திரமான மற்றும் நியாயமான முறையில் தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்யும்படி, தேர்தல் பார்வையாளர்களுக்கு கமிஷனர் ராஜிவ் குமார் உத்தரவிட்டார்.தேர்தல் பார்வையாளர்களுக்கு கமிஷன் வழங்கியுள்ள அறிவுறுத்தல்கள்: தேர்தலின் போது எந்தக் கட்சிக்கும் சாதகமாக இருக்கக் கூடாது. மிரட்டல் மற்றும் துாண்டுதல் இல்லாமல் தேர்தல் நடப்பதை தேர்தல் பார்வையாளர்கள் உறுதி செய்ய வேண்டும். களத்தில், தேர்தல் பார்வையாளர்கள் கண்டிப்புடன் நடந்து கொள்ள வேண்டும். அதே வேளையில், கண்ணியமாக இருக்க வேண்டும். ஜி.பி.எஸ்., பொருத்தப்பட்ட வாகனங்களை பயன்படுத்த வேண்டும்.இவ்வாறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ