உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கீ கொடுத்தால் ஆடும் பொம்மையாக தேர்தல் கமிஷன்: பீஹாரில் ராகுல் நடைபயணத்தில் ஸ்டாலின் பேச்சு

கீ கொடுத்தால் ஆடும் பொம்மையாக தேர்தல் கமிஷன்: பீஹாரில் ராகுல் நடைபயணத்தில் ஸ்டாலின் பேச்சு

சென்னை: ''பீஹார் சட்டசபை தேர்தலில், ராகுல், தேஜஸ்வி வெற்றி பெற்ற பின் நடக்கும் வெற்றி விழா கூட்டத்தில், நிச்சயமாக நானும் பங்கேற்பேன்'' என முதல்வர் ஸ்டாலின் பேசினார். பீஹார் மாநிலத்தில், லோக்சபா எதிர்க்கட்சித்தலைவர் ராகுல் தலைமையில், தேர்தல் கமிஷன் நடவடிக்கைகளை கண்டித்து நடந்த நடைபயணத்தில், முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று பேசியதாவது: கருணாநிதியும்,- லாலு பிரசாத்தும் மிக நெருக்கமான நண்பர்கள். எத்தனையோ வழக்குகள், மிரட்டல்கள் வந்தாலும், லாலு பா.ஜ.,விற்கு பயப்படாமல் அரசியல் செய்தவர். அந்த காரணத்தால், இந்தியாவின் மிகப்பெரிய அரசியல் தலைவர்களில் ஒருவராக உயர்ந்து நிற்கிறார். அப்பாவுக்கு தப்பாது பிறந்த பிள்ளையாக தேஜஸ்வி உழைத்து கொண்டிருக்கிறார். இந்தியாவின் ஜனநாயகத்துக்கு ஆபத்து வரும்போதெல்லாம் அதற்கான போர்க்குரலை, பீஹார் எழுப்பி உள்ளது. இதுதான் வரலாறு. ஜெயப்பிரகாஷ் நாராயணன், ஜனநாயகத்தின் குரலை, சோசலிசத்தின் குரலை எதிரொலித்தார். அதற்காக மக்கள் சக்தியை திரட்டினார். அதைத்தான் ராகுலும், தேஜஸ்வியும் செய்து கொண்டிருக்கின்றனர். அவர்கள் செல்லும் இடம் எல்லாம், மக்கள் - கடல் போல திரண்டு வருகின்றனர். தேஜஸ்வி கார் ஓட்ட, அதில் ராகுல் பயணம் செய்த காட்சியை பார்த்தேன். உங்களின் நட்பு, அரசியல் நட்பு கிடையாது. இரண்டு உடன்பிறப்புகளின் நட்பு. ஜனநாயகத்தை காக்க,- மக்கள் நலனுக்காக ஒன்று சேர்ந்திருக்கிறீர்கள். பீஹார் தேர்தலில், உங்களுக்கு வெற்றியை பெற்றுத்தர இருப்பதே இந்த நட்பு தான். பா.ஜ.,வின் துரோக அரசியல் தோற்க போகிறது. தேர்தலுக்கு முன்பே உங்களின் வெற்றி உறுதியாகிவிட்டது. அதனால்தான், இந்த வெற்றியை தடுக்க பார்க்கின்றனர். நியாயமாக,- முறைப்படி ஓட்டுப்பதிவு நடந்தால், பா.ஜ., கூட்டணி தோற்றுவிடும். எனவே, மக்களை ஓட்டளிக்க விடாமல் தடுக்கின்றனர். தேர்தல் கமிஷனை 'கீ' கொடுத்தால் ஆடும் பொம்மையாக மாற்றி விட்டனர். மொத்தமாக, 65 லட்சம் பேரை, வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கியது, ஜனநாயகப் படுகொலை. சொந்த மண்ணில், பிறந்து வாழ்ந்த மக்களை, வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவதைவிட, பயங்கரவாதம் இருக்க முடியுமா? அனைத்து அடையாள அட்டைகளை வைத்திருந்தாலும், அவர்களை முகவரி இல்லாதவர்கள் போன்று ஆக்குவது அழித்தொழிப்பு தானே. ராகுலும், தேஜஸ்வியும் பெற இருக்கும் வெற்றியை தடுக்க முடியாத பா.ஜ., கொல்லைப்புறம் வழியாக இந்த வேலையை பார்க்கிறது. இதற்கு எதிராக, அவர்கள் முன்னெடுத்துள்ள போராட்டத்தை வாழ்த்த வந்தேன். தேர்தல் கமிஷனின் ஓட்டு திருட்டு மோசடிகளை, ராகுல் அம்பலப்படுத்தி கொண்டிருக்கிறார். அவர் உறுதிமொழிப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்; மன்னிப்பு கேட்க வேண்டும் என, தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் சொல்கிறார். இந்த மிரட்டலுக்கெல்லாம் ராகுல் பயப்பட மாட்டார். அவர் வார்த்தைகளிலும்,- கண்களிலும் எப்போதும் பயம் இருக்காது. அவர் அரசியலுக்காக,- மேடைகளுக்காக பேசுபவர் கிடையாது. ஒவ்வொரு வார்த்தையையும் மிகுந்த கவனத்துடன் பேசுபவர். மக்களின் ஓட்டுரிமையை பறிக்கும், பா.ஜ.,வின் அதிகாரத்தை, மக்கள் நிச்சயமாக பறிப்பர். கடந்த 2024 லோக்சபா தேர்தலில், 'இண்டி' கூட்டணிக்கான அடித்தளத்தை, பாட்னாவில் தான் விதைத்தோம். எங்களுக்கு சமமான அரசியல் எதிரிகளே இல்லை; எதிர்க்கட்சிகள் ஒன்று சேர மாட்டார்கள் என நினைத்த பா.ஜ.,வின் கர்வத்தை தகர்த்த இடம்தான் பீஹார். மக்கள் சக்திக்கு முன், எப்படிப்பட்ட சர்வாதிகாரியும் மண்டியிட்டுதான் ஆக வேண்டும் என்பதை மீண்டும் பீஹார் நிரூபிக்க வேண்டும். பீஹாரில் பெறப்போகும் வெற்றி தான், 'இண்டி' கூட்டணியின் அடுத்தடுத்த வெற்றிகளுக்கு அடித்தளமாக அமைய இருக்கிறது. பீஹார் சட்டசபை தேர்தலில், நீங்கள் வெற்றி பெற்ற பின் நடக்கும் வெற்றிவிழா கூட்டத்திலும், நிச்சயமாக நான் பங்கேற்பேன். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார். தேர்தல் கமிஷனுக்கு எதிரான யாத்திரையில் பங்கேற்க, பீஹார் சென்ற முதல்வர் ஸ்டாலினை கட்டித்தழுவி லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் வரவேற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 28 )

Narayanan
ஆக 29, 2025 10:21

பிஹாரில் எல்லா திருடர்களும் ஒரே மேடையில் இருந்திருக்கிறார்கள் . ஒரு சுனாமி வந்திருக்கலாம் .வரவில்லையே


Narayanan
ஆக 29, 2025 10:19

திமுக 40 சீட் பெற்றது தேர்தல் கமிஷன் மூலமாக இல்லை என்பதை ஸ்டாலின் ஒத்துக்கொள்கிறார். இவர்களால் பேட்டி மாற்றப்பட்டு வெற்றியை நிர்ணயம் செய்து கொண்டார்கள். 2 மாதம் ஓட்டு பெட்டி இவர்களின் போலீஸ் கட்டுப்பாட்டில் இருந்தது, கரண்ட் இல்லாமல் செய்து காமிராவை வேலை செய்யாமல் இருக்க செய்து பெட்டியை மாற்றி வெற்றி பெற்றார்கள். தேர்தல் ஆணையம் பிஜேபி யின் கட்டுப்பாட்டில் இருந்திருந்தால் இரட்டை படை எம் பி க்களை வைத்திருந்த காங்கிரஸ் எப்படி 100 எம்பிக்களை பெற்று இருக்க முடியும்??? பிஜேபிக்கு 400 எம் பி சீட்டுக்களை அல்லவா தேர்தல் கமிஷன் கொடுத்திருக்க வேண்டும் வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்றெல்லாம் ஸ்டாலின் பேசக்கூடாது . ராகுலையும் பேச கூடாது என்று சொல்லி வையுங்கள் .


பேசும் தமிழன்
ஆக 28, 2025 19:35

சாவி கொடுத்தால் தேர்தல் ஆணையம் செயல்படும் என்றால்.... நீங்கள் 40 க்கு 40 தொகுதியில் வெற்றி பெற்று இருக்க முடியாதே..... பொய் சொல்லலாம்..... ஆனால் ஏக்கர் கணக்கில் சொல்ல கூடாது !!!


ப.சாமி
ஆக 28, 2025 13:11

கீ கொடுத்தால் ஆடும் பொம்மையாக காவல்துறை.அமலாக்கத்துறை.லஞ்ச ஒழிப்புத்துறை இப்படி பல....


நிக்கோல்தாம்சன்
ஆக 28, 2025 11:27

அந்த பிகாரிகளை திட்டிய ஸ்டாலின் இன்று... இல்லை என்றால் மன்னிப்பு கேட்டுவிடட்டும் அந்த மக்களிடம்


SUBBU,MADURAI
ஆக 28, 2025 09:35

Their only identity : Son of Rajiv Gandhi -Son of Karunanidhi -Son of Lalu Yadav Theyre standing on the stage vehicle today, and tomorrow theyll be d by their children. Meanwhile, those cheering for them will remain at the very same place.


Ganapathy
ஆக 28, 2025 09:19

தனது ஆட்சியில் ஒரு முதல்வனாக மக்களின் விமர்சனத்தைத் தாங்காமல் கிழவிகளை கைது செய்யும் வீரமும்...


Vishnu kumar
ஆக 28, 2025 09:10

அப்போ தமிழ்நாடு தேர்தல் ல கூட இதே மாதிரி தான் ஸ்டாலின் ஜெயித்தார்கள் போல, கோவை ல அண்ணாமலை விட திமுக நிறைய ஓட்டு வாங்கினார்கள் அப்போ கூட நிறைய பேர் அவங்க ஓட்டு காண னு புகார் சொன்னாங்க, அப்போ தெரியல இப்போ தெரியுது, இந்த மதவாத திமுக எப்பிடி ஜெயித்தார்கள்னு...


Kanagaraj M
ஆக 28, 2025 08:22

தமிழ்நாட்டு பொம்மை பீகார் சென்று key பெற்று பேசுகிறது....


தர்மராஜ் தங்கரத்தினம்
ஆக 28, 2025 08:03

தேர்தல் கமிஷன் மிகவும் பொறுமை காக்கிறது ...... காரணம் தெரியவில்லை ......


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை