உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அங்கீகரிக்கப்படாத 345 அரசியல் கட்சிகள் : பதிவு நீக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை

அங்கீகரிக்கப்படாத 345 அரசியல் கட்சிகள் : பதிவு நீக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை

புதுதில்லி: நாடு முழுவதும் பதிவுசெய்யப்பட்டு, அங்கீகரிக்கப்படாத 345 அரசியல் கட்சிகளின் பதிவுகளை நீக்குவதற்கான நடவடிக்கைகளை தொடங்கி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.இது குறித்து தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளதாவது:குறிப்பிட்ட இந்தக் கட்சிகள் தேர்தல் விதிகளை மீறியதாகவும், தகவல்களை வெளிப்படுத்தாததாகவும் உள்ளன. மேலும் 345 கட்சிகளும் 2019ம் ஆண்டு முதல் கடந்த 6 ஆண்டுகளாக ஒரு தேர்தலில் கூட போட்டியிடவில்லை. இந்தக் கட்சிகளின் அலுவலகங்கள் எங்கும் நேரடியாக அமைந்திருக்கவில்லை. தற்போது, தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்து,அங்கீகரிக்கப்படாத 2,800க்கும் மேற்பட்ட கட்சிகள் அத்தியாவசிய நிபந்தனையை பூர்த்தி செய்யத் தவறிவிட்டதாக எங்களின் கவனத்திற்கு வந்துள்ளது. இந்த கட்சிகளின் பதிவுகளை நீக்கத்திற்கான விளக்கக் கேட்பு அனுப்பப்பட்டுள்ளது.அந்த கட்சிகள் 21 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றால், அவற்றின் பதிவு ரத்து செய்யப்படும்.இவ்வாறு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Ramesh Sargam
ஜூன் 26, 2025 21:35

அங்கீகரிக்கப்பட்டிருந்தாலும், இதுவரையில் ஒரு தேர்தலில் கூட வெற்றிபெறாத அரசியல் கட்சிகளையும் பதிவு நீக்கம் செய்யவேண்டும்.


சமீபத்திய செய்தி