உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஓட்டு திருட்டு என்ற சொல்லை பயன்படுத்தி இழிவுபடுத்தக்கூடாது: தேர்தல் கமிஷன்

ஓட்டு திருட்டு என்ற சொல்லை பயன்படுத்தி இழிவுபடுத்தக்கூடாது: தேர்தல் கமிஷன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ஓட்டு திருட்டு என்ற சொல்லை பயன்படுத்தி வாக்காளர்களை இழிவுபடுத்த கூடாது என தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.இது குறித்து தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஓட்டு திருட்டு என்ற சொல்லை பயன்படுத்தி வாக்காளர்களை இழிவுபடுத்த கூடாது. தவறான கதையை புனைவது கோடிக்கணக்கான இந்திய வாக்காளர்கள் மீதான தாக்குதல் ஆகும். இது லட்சக்கணக்கான தேர்தல் கமிஷன் ஊழியர்களின் நேர்மை மீதான தாக்குதல். தேர்தலில் ஒருவர் 2 முறை ஓட்டளித்ததற்கான ஆதாரம் இருந்தால், பிரமாண பத்திரத்துடன் தேர்தல் கமிஷனிடம் புகார் தெரவிக்கலாம். 1951-52ல் இந்தியாவின் முதல் தேர்தலில் இருந்து ஒரு நபர் ஒரு ஓட்டு நடைமுறை உள்ளது. இவ்வாறு தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !