உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ராகுலுக்கு தேர்தல் கமிஷனர் கண்டிப்பு: கேள்விக்கு இன்னும் பதில் வரவில்லை என்கிறது காங்கிரஸ்

ராகுலுக்கு தேர்தல் கமிஷனர் கண்டிப்பு: கேள்விக்கு இன்னும் பதில் வரவில்லை என்கிறது காங்கிரஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: தேர்தல் கமிஷனர் பேட்டி தொடர்பாக பதிலளித்துள்ள காங்கிரஸ்,'' ராகுலின் பேட்டி குறித்து இன்னும் பதிலளிக்கப்படவில்லை, '' எனத் தெரிவித்துள்ளது.டில்லியில் நிருபர்களை சந்தித்த தலைமைத் தேர்தல் கமிஷனர் ஞானேஸ்வர் குமார், '' ஓட்டுத் திருட்டு தொடர்பாக புகார் தெரிவித்த ராகுல் சத்தியப் பிரமாணத்தில் கையெழுத்து போட வேண்டும். அல்லது மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும், '' எனத் தெரிவித்து இருந்தார்.இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட பதிவில் கூறியதாவது: இன்று ராகுல் பேரணி துவக்கிய பிறகு நிருபர்களைச் சந்தித்த தேர்தல் கமிஷனர்கள், ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி இடையே வேறுபாடு காட்டப்படவில்லை எனக்கூறியுள்ளார். இது நகைப்புக்குரியது. ராகுல் எழுப்பிய கேள்விகளில் ஒன்றுக்குக் கூட பதில் அளிக்கப்படவில்லை. தேர்தல் கமிஷனின் திறமையின்மை மட்டுமல்லாமல், ஒரு தலைபட்சமான செயல்பாடு அம்பலப்பட்டுள்ளது எனக்கூறியுள்ளார்.காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங் கூறியதாவது: நேர்மையான மற்றும் சுதந்திரமான தேர்தல் நடத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டியது தேர்தல் கமிஷனின் அரசியல் சாசன கடமை. வாக்காளர் பட்டியல் குறித்த நகல் பாஜவிடம் உள்ளது. காங்கிரசிடம் வழங்கப்படாதது ஏன்? இந்த கேள்வியை மனதில் வைத்தே, பீஹாரில் ராகுல் யாத்திரை மேற்கொண்டு உள்ளார், என்றார்.காங்கிரசின் மூத்த தலைவர் பவன் கேரா கூறுகையில், தேர்தல் கமிஷனால் இறந்தவர்கள் என அறிவிக்கப்பட்டவர்கள் ராகுலுடன் தேநீர் அருந்துகின்றனர். இதற்காக தேர்தல் கமிஷனர்கள் வெட்கப்பட்டார்களா? நாங்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்க வேண்டும்.ஆறு தொகுதி வாக்காளர் பட்டியல் குறித்த விவரங்கள் பாஜ எம்பி அனுராக் தாக்கூருக்கு கிடைத்தது எப்படி?எங்களுக்கு பதில் கிடைக்கவில்லை. அவர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும். அவருக்கும் பாஜவுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டதா? தேர்தல் கமிஷனர் பாஜ ஏஜென்ட் போல் செயல்படுகிறார்.அரசியல்சாசனத்தை பாதுகாக்க நாங்கள் இங்கு இருக்கிறோம். எஜமானார்கள் பயப்படும் போது தேர்தல் கமிஷனர்களும் பயப்படுகின்றனர். தவறு செய்தவர்கள் பயப்படுகின்றனர். ஜனநாயகம் மீது தாக்குதல் நடத்துபவர்கள் பயப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

N.Purushothaman
ஆக 20, 2025 07:03

பொறுப்பில்லாத பொய்யை மட்டுமே நம்பி அரசியல் செய்யும் ஒருத்தர் எதிர்க்கட்சி தலைவராக இருப்பது பாரதத்தின் துர்பாக்கியம் ....


V Venkatachalam
ஆக 18, 2025 11:55

ராகுல் கானின் பாரத் ஜ ஜோடோ யாத்ரா ஜுட் யாத்ராவா ஆனப்புறம் ஏதாவது பண்ணித்தான் ஆகோணும். அட்லீஸ்ட் கத்தணும்கிற நெலமக்கு கான் கிராஸ் தள்ளப்பட்டு இருக்கு. சோனியாவுக்கு வாலாட்டும் தலைவன்களுக்கும் என்ன செய்வது ன்னு புரியல. எதையாவது அள்ளி வுட்டு மக்களை பீதியிலேயே வச்சிக்கலாம்ன்னு முடிவு பண்ணி கல்லெறிய ஆரம்பிச்சி வச்சிருக்கானுங்க. அந்த கற்கள் அவனுங்க தலயிலேயே விழப்போகுது.


Rajasekar Jayaraman
ஆக 18, 2025 09:35

கேள்வியே சரி இல்லை அறிவு உள்ளவர்கள் இது போல் கேள்வியை மட்டும் கேட்க மாட்டார்கள் எழுத்துப்பூர்வமாக கடிதம் கொடுத்து அதற்கு பதிலை தேடுவார்கள் இது அமெரிக்காவின் ஜார்ஜ் சோறசின் வன்மமான இந்தியாவை அழிக்கும் திட்டத்துக்கு உடந்தையாக இருக்கும் கான் கிரஸ்.


vbs manian
ஆக 18, 2025 09:03

தேர்தல் கமிஷன் மீது கண் மூடி தாக்குதல் நடத்தும் காங்கிரஸ் வோட்டர்களின் போட்டோ வயது மற்றும் தனி நபர் விவரங்களை பொது வெளியில் அவர்கள் சம்மதம் இன்றி வெளியிடுகிறது. இது தனி மனித உரிமை மீறல். அருவருப்பானது கண்டிக்க பட வேண்டியது. தேர்தல் கமிஷன் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.


N.Purushothaman
ஆக 18, 2025 08:55

அரசியல் கட்சிகள் செயல்பாடுகளுக்கு வரைமுறை இல்லாமல் போனது மிக ஆபத்தான ஒன்று ...சட்டத்தில் உள்ள மிகப்பெரிய ஓட்டை..சமீபகாலமாக சட்ட விரோத செயல்பாட்டை எல்லாம் நியாயப்படுத்தும் கீழ்த்தரமான நிலைக்கு அரசியல் கட்சிகள் சென்று உள்ளது ஜனநாயத்தை கேலி கூத்தாக்கும் அருவருக்கத்தக்க செயல் ...முதலில் ஓட்டு இயந்திரம் ,தற்போது தேர்தல் ஆணையம் என எதிலும் இவர்களுக்கு நம்பிக்கை இல்லை எனில் அரசியலை விட்டு விலகலாமே ..


S.V.Srinivasan
ஆக 18, 2025 08:30

பாவம் ராஹுலு, அவரும் மோடிக்கு எதிரா என்னென்னவோ தில்லாலங்கடி வேலையெல்லாம் பண்ணி பார்க்கிறார் . ஆனா எல்லாம் அவருக்கே ஆப்பு அடிக்குது.


vadivelu
ஆக 18, 2025 06:37

ஒரே பதில்தான். யாராய் இருந்தாலும் கையொப்பம் இட்டு கேட்க வேண்டும். காற்றில் பேச கூடாதாம்.


தாமரை மலர்கிறது
ஆக 18, 2025 05:23

ராகுலின் உளறலுக்கெல்லாம் பதில் சொல்லிக்கொண்டிருந்தால், தேர்தல் கமிஷன் எந்த வேலையும் செய்ய முடியாது. ஜெயிக்க முடியாத ராகுல் தேர்தல் கமிஷன் மீது கோபத்தை காட்டுகிறார். நாட்டின் இலட்சியத்தை திசைதிருப்புகிறார். சீனா போன்று நெடுங்கால திட்டங்கள் இயற்றி இந்தியா வேகமாக வளர ஒரு கட்சி ஆட்சி தான் தேவை. தேர்தல் கமிஷனே தேவை இல்லாத ஆணி தான். தேவை இல்லாத தேர்தல்கள் இலவசத்தை ஊக்குவிக்கிறது. வோட்டிற்கு பணம் கொடுப்பதற்காக தமிழகத்தில் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. இந்தியாவிற்கு தேவை ஆர் எஸ் எஸ் அமைப்பும் பிஜேபி மட்டும் தான்.


Kasimani Baskaran
ஆக 18, 2025 04:05

வெளிநாட்டினரை தாராளமாக உள்ளே விட்டு அவைகளை வைத்து ஜெயித்து வந்த காங்கிரசுக்கு உண்மை ஆத்திரத்தை வரவழைக்கிறது. சோரோஸின் உதவியாளர்களை வைத்து இந்தியாவை கையகப்படுத்தி விட முடியும் என்று நம்புகிறார்கள்.


Ramesh Sargam
ஆக 17, 2025 23:08

காங்கிரஸ் தலைவர்களிடையே 2026 தேர்தல் தோல்வி பயம் தெரிய ஆரம்பித்துவிட்டது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை