பெங்களூரு: கர்நாடகாவின் 28 தொகுதிகளில் ஏப்ரல் 26 மற்றும் மே 7 என இரண்டு கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடக்க உள்ளது. காங்கிரஸ் எம்.எல்.ஏ., இறந்ததையடுத்து காலியான, யாத்கிர் மாவட்டம், சுர்பூர் சட்டசபை தொகுதிக்கும், மே 7ல் இடைத்தேர்தல் நடப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.லோக்சபா தேர்தல் கால அட்டவணையை தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது. 5.42 கோடி வாக்காளர்கள்
கர்நாடகாவின் 28 லோக்சபா தொகுதிகளுக்கு தேர்தல் நடத்துவது தொடர்பாக, மாநில தலைமை தேர்தல் அதிகாரி மனோஜ் குமார் மீனா, பெங்களூரில் நேற்று விளக்கினார். அவர் கூறியதாவது:கர்நாடகாவில், 2,71,21,407 ஆண்கள்; 2,70,81,748 பெண்கள்; 4,993 திருநங்கையர் என 5,42,08,088 வாக்காளர்கள் உள்ளனர். இது தவிர, 46,412 தபால் வாக்காளர்கள் உள்ளனர்.இதில், 11,24,622 இளம் வாக்காளர்கள்; 3,200 கடல் கடந்து வசிக்கும் வாக்காளர்கள்; 85 வயதுக்கு மேற்பட்டோர் 5,70,168 பேர்; மாற்றுத்திறனாளிகள் 6,12,154 பேர் அடங்குவர். 58 ஆயிரம் ஓட்டுச்சாவடிகள்
அதிக பட்ச வாக்காளர்களை கொண்ட தொகுதியாக, பெங்களூரு வடக்கு தொகுதி உள்ளது. இங்கு, 31,74,098 வாக்காளர்கள் உள்ளனர். குறைந்த வாக்காளர்களை கொண்ட தொகுதியாக உடுப்பி - சிக்கமகளூரு தொகுதி உள்ளது. இங்கு, 15,72,958 வாக்காளர்கள் உள்ளனர்.கடந்த 2019 தேர்தலை ஒப்பிடுகையில், 31,52,916 வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர்.மாநிலம் முழுதும், நகர பகுதிகளில் 21,682 ஓட்டுச்சாவடிகளும்; கிராமப்புறங்களில் 37,152 ஓட்டுச்சாவடிகளும் என 58,834 ஓட்டுச்சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன. 3.63 லட்சம் ஊழியர்கள்
மொத்தம் 1,10,946 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள்; 77,667 கட்டுப்பாட்டு இயந்திரங்கள்; 82,575 விவிபேட் இயந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.தேர்தல் பணிக்கு, 3,63,153 ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அனைவருக்கும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளன.இரண்டாம், மூன்றாம் கட்டங்களில், கர்நாடக தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடக்கிறது. முதல் கட்டம்
கர்நாடகாவை பொறுத்தவரையில், முதல் கட்டமாக, உடுப்பி - சிக்கமகளூரு, ஹாசன், தட்சிண கன்னடா, சித்ரதுர்கா - தனி, துமகூரு, மாண்டியா, மைசூரு, சாம்ராஜ்நகர் - தனி, பெங்களூரு ரூரல், பெங்., வடக்கு, பெங்., மத்திய, பெங்., தெற்கு, சிக்கபல்லாபூர், கோலார் - தனி ஆகிய 14 தொகுதிகளுக்கு, ஏப்ரல் 26ம் தேதி ஓட்டுப்பதிவு நடக்கிறது.இதற்கான வேட்புமனுத் தாக்கல், வரும் 28ம் தேதி துவங்குகிறது. மனுத் தாக்கலுக்கு ஏப்ரல் 4ம் தேதி கடைசி நாள். ஏப்., 5ல் மனுக்கள் பரிசீலிக்கப்படுகின்றன. மனுக்கள் திரும்ப பெறுவதற்கு, ஏப்., 8ம் தேதி கடைசி நாள். ஏப்., 26ம் தேதி ஓட்டுப்பதிவு. இரண்டாம் கட்டம்
இரண்டாம் கட்டமாக, சிக்கோடி, பெலகாவி, பாகல்கோட், விஜயபுரா - தனி, கலபுரகி - தனி, ராய்ச்சூர் - எஸ்.டி., பீதர், கொப்பால், பல்லாரி - எஸ்.டி., ஹாவேரி, தார்வாட், உத்தர கன்னடா, தாவணகெரே, ஷிவமொகா ஆகிய 14 தொகுதிகளுக்கு பொதுத்தேர்தலும்; சமீபத்தில் மறைந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ., ராஜா வெங்கடப்பா நாயக்கின் யாத்கிர் மாவட்டம், சுர்பூர் தொகுதிக்கு சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தலும், மே 7ம் தேதி ஓட்டுப்பதிவு நடக்கிறது.இதற்கான வேட்புமனுத் தாக்கல், ஏப்., 12ம் தேதி துவங்குகிறது. மனுத் தாக்கலுக்கு, ஏப்., 19ம் தேதி கடைசி நாள். ஏப்., 20ம் தேதி, மனுக்கள் பரிசீலிக்கப்படுகின்றன. மனுக்கள் திரும்ப பெறுவதற்கு, ஏப்., 22ம் தேதி கடைசி நாள். மே 7ல் ஓட்டுப்பதிவு.இரண்டு கட்டங்களாக பதிவாகும் ஓட்டுகள், ஜூன் 4ம் தேதி எண்ணப்படுகின்றன. 246 சோதனைச் சாவடிகள்
தேர்தல் முறைகேடுகளை தடுக்க, கர்நாடகாவை ஒட்டி உள்ள தெலுங்கானா, ஆந்திரா, தமிழகம், கேரளா, கோவா, மஹாராஷ்டிரா மாநில எல்லைப்பகுதிகளில், 246 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு, தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.மாநில கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரிகள் வெங்கடேஷ் குமார், கூர்மாராவ் உட்பட உயர் அதிகாரிகள் இருந்தனர்.
வரை படத்தில் நீல வண்ணத்தை ஒட்டி வைப்பதற்கு
..........................................தேர்தல் அட்டவணைவேட்புமனுத் தாக்கல் துவக்கம்: மார்ச் 28மனுத் தாக்கலுக்கு கடைசி நாள்: ஏப்ரல் 4மனுக்கள் பரிசீலனை: ஏப்ரல் 5மனு திரும்பப் பெறுவதற்கு கடைசி நாள்: ஏப்ரல் 8ஓட்டுப்பதிவு: ஏப்ரல் 26ஓட்டு எண்ணிக்கை: ஜூன் 4
வரை படத்தில், ஊதா வண்ணத்தை ஒட்டி வைப்பதற்கு
.........................................வேட்புமனுத் தாக்கல் துவக்கம்: ஏப்ரல் 12மனுத் தாக்கலுக்கு கடைசி நாள்: ஏப்ரல் 19மனுக்கள் பரிசீலனை: ஏப்ரல் 20மனு திரும்பப் பெறுவதற்கு கடைசி நாள்: ஏப்ரல் 22ஓட்டுப்பதிவு: மே 7ஓட்டு எண்ணிக்கை: ஜூன் 4