உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தேர்தல் இரண்டு சித்தாந்தங்களுக்கு இடையிலான சண்டை: அமித்ஷா பேச்சு

தேர்தல் இரண்டு சித்தாந்தங்களுக்கு இடையிலான சண்டை: அமித்ஷா பேச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஹைதராபாத்: இந்த தேர்தல் இரண்டு சித்தாந்தங்களுக்கு இடையிலான சண்டை என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.தெலுங்கானா மாநிலம் செவெல்லாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் அமித்ஷா பேசியதாவது: தெலுங்கானா மாநிலத்தை காங்கிரசால் ஒருபோதும் வளர்ச்சி அடைய வைக்க முடியாது. காங்கிரசும், பாரத் ராஷ்ட்ர சமிதியும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள். இரு கட்சிகளும் தெலுங்கானா மக்களின் பணத்தை கொள்ளையடித்து, தங்கள் பாக்கெட்டுகளை நிரப்பிக் கொண்டுள்ளன. இன்று தெலுங்கானா வருவாய் பற்றாக்குறை உள்ள மாநிலமாக உள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=tqwcjjx0&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

சித்தாந்தங்கள்

இந்த தேர்தல் இரண்டு சித்தாந்தங்களுக்கு இடையிலான சண்டை. நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஒரு பக்கம். ராகுல் தலைமையில் இண்டியா அணி மற்றொரு பக்கம். நாட்டில் வெப்பம் அதிகமாகிவிட்டால், விடுமுறைக்காக ராகுல் தாய்லாந்து செல்கிறார். தீபாவளிக்குக்கூட விடுமுறை எடுத்துக் கொள்ளாமல் நமது ராணுவ வீரர்களுடன் பிரதமர் மோடி கொண்டாடி மகிழ்கிறார்.

யார் பிரதமர் ஆக வேண்டும்?

23 ஆண்டு கால நேர்மையான மற்றும் வெளிப்படையான அரசியல் வாழ்க்கையை பிரதமர் மோடி கழித்துள்ளார். பல தசாப்தங்களாக சட்டப்பிரிவு 370ஐ அப்படியே வைத்திருந்த ஒரு கட்சி ஆட்சிக்கு வர வேண்டுமா? பயங்கரவாதத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க பயப்படும் ஒருவர் பிரதமராக வேண்டுமா? பயங்கரவாதத்துக்கு பதிலடி கொடுக்கத் தெரிந்த ஒருவர் (நரேந்திர மோடி) பிரதமராக இருக்க வேண்டுமா?. இவ்வாறு அமித்ஷா பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

madhumohan
மே 11, 2024 17:10

சித்தாந்தங்களுக்கிடையே என்பது மாறி மதங்களுக்கிடையே என்று ஆகி நீண்ட நாட்களாகிறது


ஆரூர் ரங்
மே 11, 2024 16:28

மும்பைத் தாக்குதலுக்கு சரியான பதிலடி கூட கொடுக்க பயந்த கோழை காங்கிரஸ் நமக்குத் தேவையில்லை.


Syed ghouse basha
மே 11, 2024 19:55

சீனாவிடம் பல ஆயிரம் சதுர கிலோமீட்டரை பறிகொடுத்துவிட்டு சீனாங்கிற வார்த்தையே பத்தாண்டுகாலம் பேசாமல் இருக்கும் கோழை யார் என்று இந்தியமக்களுக்கு தெரியும்


Syed ghouse basha
மே 11, 2024 15:54

ஒன்று நடுநிலையாளர்கள் மற்றொன்று ....இவர்களுக்கிடையே தான் பேட்டி


Syed ghouse basha
மே 11, 2024 15:08

பயங்கர வாத அரசியலை முன்னெடுப்பதே பஜக தானே நீங்க தானே சொன்னீங்க சப்காசாத் சப்கா விகாஸ்னு செய்தீர்களா? மக்களிடையே பகை மூட்டி கலவரம் தூண்டுவது யார் என்று இன்று இந்திய மக்க புரிந்துள்ளார்கள்


மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி