வாசகர்கள் கருத்துகள் ( 2 )
தெலுங்கன்கள் முன்னேற்றக் கழகம் ஈரோட்டில் கள்ள வாக்குகளும் இட்டு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் வெற்றியிட்டியுள்ளளாங்களே?
ஏன்,நீங்கள் ஜெயித்தால் ஓட்டிங் மெஷின் சந்தேகமில்லை, தோற்றால் ஓட்டிங் மெஷின் சந்தேகம்?
தாவணகெரே: 'மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் குளறுபடி நடந்திருக்கலாம். மஹாராஷ்டிராவில் ஆடிய அதே ஆட்டத்தை, டில்லியிலும் ஆடியுள்ளனர்,'' என காங்கிரஸ் - எம்.பி., பிரியங்கா ஜார்கிஹோளி தெரிவித்தார்.தாவணகெரேவில் நேற்று அவர் அளித்த பேட்டி:டில்லியில் பா.ஜ., வெற்றி பெற்றது, சந்தேகத்துக்கு இடம் அளிக்கிறது. அக்கட்சியின் வெற்றிக்கு மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் காரணமாக இருக்கலாம். இதற்கு முன்பு மஹாராஷ்டிராவில், இது போன்று நடந்தது. அங்கு ஆடிய ஆட்டத்தை, இப்போது டில்லியிலும் ஆடியுள்ளனர் என, தோன்றுகிறது.இதுகுறித்து, எங்கள் தலைவர் ராகுல், என்ன சொல்கிறார் என பார்க்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.மாநில உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் கூறியதாவது:டில்லி சட்டசபை தேர்தலில், என்ன காரணத்தால் இத்தகைய முடிவு வெளியானது என்பது தெரியவில்லை. இது குறித்து, காங்கிரஸ் மேலிட தலைவர்கள் ஆலோசிப்பர். ஒவ்வொரு தேர்தலும் மாறுபட்டதாக இருக்கும்.கூட்டணி அனைத்து காலங்களிலும், ஒரே விதமாக இருக்காது. லோக்சபா தேர்தலுக்கும், சட்டசபை தேர்தலுக்கும் வித்தியாசம் இருக்கும். எங்கள் கட்சிக்கு பின்னடைவு ஏற்பட, என்ன காரணம் என்பதை, தன்னாய்வு செய்து கொள்வோம். கர்நாடகாவிலும் இது குறித்து ஆலோசிப்போம்.இவ்வாறு அவர் கூறினார்.
தெலுங்கன்கள் முன்னேற்றக் கழகம் ஈரோட்டில் கள்ள வாக்குகளும் இட்டு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் வெற்றியிட்டியுள்ளளாங்களே?
ஏன்,நீங்கள் ஜெயித்தால் ஓட்டிங் மெஷின் சந்தேகமில்லை, தோற்றால் ஓட்டிங் மெஷின் சந்தேகம்?