காரில் சென்றவர்களை அச்சுறுத்திய யானை
குடகு: சாலையில் சென்ற கார் மீது, காட்டு யானை தாக்குதல் நடத்தியது. அதில் இருந்தவர்கள் அதிர்ஷ்வசமாக உயிர் தப்பினர்.குடகு, விராஜ்பேட்டின் பெளகுந்தா கிராமத்தை சேர்ந்தவர் அஷ்வக். இவர், இதே கிராமத்தில் நியாயவிலை கடை நடத்தி வருகிறார். இவர் தன் குடும்பத்துடன், மைசூருக்கு காரில் புறப்பட்டார்.நேற்று முன்தினம் இரவு, மஜ்ஜிகேஹள்ளி வனப்பகுதியின், திதிமதி அருகில் செல்லும் போது, சாலையில் வேகத்தடை இருந்ததால் காரி-ன் வேகத்தை குறைத்தார். அப்போது திடீரென எதிரே வந்த ஒற்றை காட்டுயானை, காரை தாக்கி சேதப்படுத்தி விட்டு அங்கிருந்து சென்றது. அதில் இருந்தவர்கள் காயமடைந்து, விராஜ்பேட்டின் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று கொண்டு, ஊருக்கு புறப்பட்டனர்.