உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மின்சாரம் பாய்ந்து ஊழியர் உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து ஊழியர் உயிரிழப்பு

குருகிராம்:ஹரியானாவில், மின்சாரம் பாய்ந்து மின்வாரிய ஊழியர் உயிரிழந்தார்.ஹரியானா மாநிலம் பட்டோடி அருகே மிர்சாபூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தேஜ்பால்,42. தெற்கு ஹரியானா பிஜிலி வித்ரன் மின்வாரிய அலுவலகத்தில், வயர்மேன். சிக்கந்தர்பூர் பாதா கிராமத்தில் நேற்று முன் தினம், பழுதடைந்த மின் கம்பியை சீரமைக்க டிரான்ஸ்பார்மரில் ஏறினார். அப்போது, எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து, தேஜ்பால் தூக்கி வீசப்பட்டார். உடல் கருகி அதே இடத்தில் உயிரிழந்தார்.மின்துறை அதிகாரிகளின் அலட்சியத்தால் இந்த விபத்து ஏற்பட்டதாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டினர். தேஜ்பால் தந்தை கொடுத்த புகார்படி, மின்சார துறை அதிகாரிகள் மீது, கெர்கி தவுலா வழக்குப் பதிவு செய்துள்ளனர்.மின்மாற்றியில் இரண்டு நிமிடங்களே தேஜ்பால் இருந்தபோதும், யாரோ ஒருவர் மின்வினியோகம் செய்ததால், தேஜ்பால் மீது மின்சாரம் பாய்ந்தது போலீஸ் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை