உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வீட்டு உரிமையாளர்களை தாக்கிய ஊழியர்கள் கைது

வீட்டு உரிமையாளர்களை தாக்கிய ஊழியர்கள் கைது

நொய்டா:அடுக்குமாடி குடியிருப்பில், வீட்டு உரிமையாளர்களைத் தாக்கிய பராமரிப்பு ஊழியர்கள், நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.கிரேட்டர் நொய்டா, பிஸ்ராக் 'ஈகோ டெக் வில்லேஜ் -1' அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் சில வீட்டு உரிமையாளர்களை, அதன் பராமரிப்பு ஊழியர்கள் சரமாரியாகத் தாக்கினர். இந்தக் காட்சிகள், சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதுகுறித்து, விசாரித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், பராமரிப்பு ஊழியர்கள் ரவீந்திரன்,33, சோஹித்,30, சச்சின்,27, மற்றும் விபின், 27, ஆகிய நான்கு பேரை நேற்று கைது செய்தனர்.அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவது தொடர்பாக புகார் செய்த, வீட்டு உரிமையாளர்களுக்கும் பராமரிப்பு ஊழியர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் இந்த தாக்குதல் நடந்திருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி