உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பதவி உயர்வுக்காக தண்டவாள கொக்கிகளை கழற்றி நாடகமாடிய ஊழியர்கள் கைது

பதவி உயர்வுக்காக தண்டவாள கொக்கிகளை கழற்றி நாடகமாடிய ஊழியர்கள் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சூரத் : குஜராத்தில், பதவி உயர்வுக்கு ஆசைப்பட்ட ரயில்வே ஊழியர்கள் மூவர், தாங்களே ரயில் தண்டவாள கொக்கிகளை கழற்றி விட்டு, ரயிலை எச்சரித்து நிறுத்தியது விசாரணையில் தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.குஜராத் மாநிலம், சூரத் மாவட்டம் கிம் ரயில் நிலையம் அருகே சமீபத்தில், 1 கி.மீ., நீளத்துக்கு தண்டவாளத்தில் இருந்த கொக்கிகள் மற்றும் தண்டவாளத்தை இணைக்கும், 'பிஷ்பிளேட்' எனப்படும் இரும்பு கிளிப் ஆகியவை கழற்றப்பட்டு இருந்தன. இதை கண்டுபிடித்த பணியில் இருந்த டிராக்மேன் சுபாஷ் போதர் உள்ளிட்ட மூன்று ஊழியர்கள், ரயில் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். இதனால் பெரும் ரயில் விபத்து தடுக்கப்பட்டது. உரிய நேரத்தில் தகவல் தந்த அவர்களுக்கு பாராட்டு குவிந்தது.இதன் பின்னணியில் நாசவேலை காரணமாக இருக்கலாம் என்பதால், வழக்கு என்.ஐ.ஏ.,வுக்கு மாற்றப்பட்டது. அவர்கள் டிராக்மேன் சுபாஷ் போதரிடம் விசாரணை நடத்தியபோது, முன்னுக்கு பின் முரணனான தகவல்களை கூறியுள்ளார். சந்தேகமடைந்த போலீசார், கொக்கிகள் கழற்றப்பட்டிருப்பது குறித்து டிராக்மேன் தகவல் தருவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன், அதே வழித்தடத்தில் சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலின் லோகோ பைலட்டுகளிடம் விசாரித்தனர். அவர்கள், தங்கள் ரயில் கடக்கும் போது கொக்கிகள் கழற்றப்பட்டதாக தெரியவில்லை என்றனர். உரிய கருவிகள் இருந்தால் மட்டுமே இவ்வளவு விரைவாக கொக்கிகளை கழற்ற முடியும் என்பதால் டிராக்மேன் உட்பட பணியில் இருந்த மூவரையும் பிடித்து விசாரித்ததில், கொக்கிகளை கழற்றியதை ஒப்புக்கொண்டனர். நாசவேலையை தடுத்ததற்காக பதவி உயர்வு, பரிசு, புகழ் கிடைக்கும் என கருதி, இந்த செயலில் ஈடுபட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Ramesh Kumar
செப் 25, 2024 20:00

Bad habits by Railway employees


K.Thangarajan
செப் 25, 2024 10:27

தமிழ்நாட்டில் பரமக்குடி அருகே 420 கொக்கிகளை கழற்றியது யார் நடவடிக்கை என்னாச்சு?


Tetra
செப் 30, 2024 20:23

போய் பேச்சு. விடியல் இல்லயா


VENKATASUBRAMANIAN
செப் 25, 2024 08:27

இதுபோன்று எல்லா இடங்களிலும் நடக்கும். ஆனால் விஞ்ஞான ஊழல் செய்பவர்கள் உள்ளனர். அதனால் காட்டவில்லை. ஒருநாள் இவர்களும் மாட்டுவார்கள்


Yogeshvar
செப் 25, 2024 08:24

ஊழியர்கள் பெயர்?


தர்மராஜ் தங்கரத்தினம்
செப் 25, 2024 10:31

நீங்க நினைச்ச மாதிரி முதல்ல நானும் நினைச்சேன் ..... ஆனா அந்த கும்பல் விபத்துக்கு முன்னாடி அவ்வளவு ஈஸியா சிக்க மாட்டாங்க ..... ஈடுபட்டா சக்ஸஸ் ரேட் அதிகம் ..... இதோ பெயர்கள் ....... Subhash Poddar, Manish Mistry, and Shubham Jaiswal உபயம் இந்தியா டுடே .....


amuthan
செப் 25, 2024 07:15

சம்பவம் குஜராத்தில் நடந்துள்ளது திராவிட மாடல் என்று குறை கூற முடியாது.


Dharmavaan
செப் 25, 2024 09:05

த்ரவிட மாடலில் எல்லாம் மூடி மறைக்கப்படுகிறது குஜராத்தில் நேர்மை இருக்கிறது


kannan
செப் 25, 2024 05:39

வேலியே பயிரை மேய்கின்றன


Kasimani Baskaran
செப் 25, 2024 05:24

நாசவேலை செய்த இதுகளுக்கு அரசு சம்பளம் என்பது வெட்கக்கேடானது. வேலையை விட்டு தூங்குவதே சரியான தண்டனையாக இருக்கும்.


chennai sivakumar
செப் 25, 2024 04:54

பதவி,பணம் படுத்தும் பாடு. இவர்களை இரக்கமே இல்லாமல் அரபு நாடுகள்/ வட கொரியா போல மேல் உலகத்திற்கு அனுப்ப வேண்டும்


A Viswanathan
செப் 25, 2024 14:21

இது அந்நியாயம் அல்லவா. உன்னுடைய பதவி உயர்வுக்கு அப்பாவி மக்களின் உயிரை ஏன் எடுக்கிறாய்.


புதிய வீடியோ