உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் 2 பேர் என்கவுன்டர்; ராணுவம் அதிரடி

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் 2 பேர் என்கவுன்டர்; ராணுவம் அதிரடி

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் எல்லை பகுதியில் ஊடுருவ முயன்ற 2 பயங்கரவாதிகளை இந்திய ராணுவத்தினர் சுட்டுக்கொன்றனர்.ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நேற்று நடத்திய தாக்குதலில், நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து, இந்த சம்பவத்தை தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பஹல்காமுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். மேலும், அங்கு தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், எல்லைகளிலும் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டது. இந்த நிலையில், பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள சின்னாறு எல்லை பகுதியில் பாகிஸ்தானில் இருந்து 2 அல்லது 3 பேர் கொண்ட பயங்கரவாத கும்பல் இந்திய எல்லை பகுதிக்குள் ஊடுருவ முயன்றுள்ளனர். இதனை கண்ட ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இது குறித்து ராணுவம் தரப்பில் கூறுகையில், 'எல்லையில் தொடர்ந்து கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இன்று இரு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். நிறைய ஆயுதங்களும், வெடிபொருட்களும் பயங்கரவாதிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது,' எனக் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Raj
ஏப் 23, 2025 13:08

குறைந்தது 200 பேர்களாவது வேட்டையாட பட வேண்டும்


Kundalakesi
ஏப் 23, 2025 12:11

காஷ்மீர் சுற்றுலா இன்னமும் பிரபலமடைய வேண்டும். உள்ளூர் மக்கள் வருமானம் தடை பட்டாள் தானே மக்கள் தீவிர வாதத்திற்கு பணம் தருவார்கள்


Ramesh Sargam
ஏப் 23, 2025 12:08

அங்கு பதுங்கியிருக்கும் அத்தனை தீவிரவாதிகளையும், அவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் அனைத்து தேசதுரோகிகளையும் இரக்கமில்லாமல் சுட்டுத்தள்ளவேண்டும். இனியும் பொறுமை, அகிம்சை உதவாது.


Venkateswaran Rajaram
ஏப் 23, 2025 11:35

இஸ்ரேல் மாதிரி நாமும் பாகிஸ்தானை மொத்தமாக நிர்மூலமாக்கிவிடவேண்டும் ...இல்லையேல் நாம் ஆகிவிடுவோம்


chennai sivakumar
ஏப் 23, 2025 11:24

Only shooting is the solution


Apposthalan samlin
ஏப் 23, 2025 10:37

ராணுவம் அதிரடியாம் அக்னீவீரர்கள் ராணுவம் இப்படித்தான் இருக்கும் எவலோவோ தொழில் நுட்பம் வந்து விட்டது இன்னும் தீவிர வாதிகளால் சாவு இந்தியா வில் தான் இஸ்ரேல் மாதிரி தாக்குதல் கிடையாது ஒப்பந்த ராணுவ வீரர்களை வைத்து குருவி கூட சுட முடியாது .


தர்மராஜ் தங்கரத்தினம்
ஏப் 23, 2025 11:51

போ குப்பையே ....


M R Radha
ஏப் 23, 2025 15:52

திருட்டு த்ரவிஷ சொம்பு, கோவையில் சிலிண்டர் குண்டு வைத்த போது குவார்ட்டர் அடித்து ஓசி பிரியாணி சுவைத்துக் கொண்டிருந்தாயா?


Sudha
ஏப் 23, 2025 10:24

போதாது 200 பேர் சுட்டுக்கொல்ல பட வேண்டும்


Barakat Ali
ஏப் 23, 2025 09:55

நம்பிட்டோம் ........ சமாதானமாயிட்டோம் ..........


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை