உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சிறுமியை பலாத்காரம் செய்தவர் என்கவுன்டர்

சிறுமியை பலாத்காரம் செய்தவர் என்கவுன்டர்

பெங்களூரு : கர்நாடக மாநிலம் கொப்பாலை சேர்ந்த இளம்பெண் ஒருவர், ஹூப்பள்ளி பகுதியில் வீட்டு வேலை செய்து வந்தார். இவர், தினமும் தன், 5 வயது பெண் குழந்தையுடன் வேலைக்கு செல்வது வழக்கம்.நேற்று காலை வழக்கம் போல வீட்டு வேலைக்கு வந்தார். தன் குழந்தையை வீதியில் விளையாட விட்டு, வீட்டிற்குள் வேலை செய்து கொண்டிருந்தார். விளையாடி கொண்டிருந்த சிறுமியை, அங்கு வந்த மர்ம நபர் ஒருவர், சாக்லேட் கொடுத்து துாக்கி சென்று அருகில் இருந்த ஷெட்டுக்குள் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.சிறுமி கத்தி கூச்சலிட்டு உள்ளார். சத்தத்தை கேட்ட சிலர் ஷெட்டிற்குள் சென்று பார்த்தபோது, சிறுமி இறந்து கிடந்தார். கூட்டத்தினரை பார்த்ததும் மர்ம நபர் தப்பி ஓடிவிட்டார். ஆத்திரமடைந்த அப்பகுதியினர், போலீஸ் நிலையம் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையில், சிறுமியை வாலிபர் துாக்கி செல்லும் காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தன. விசாரணையில், அந்த நபர் பீஹாரை சேர்ந்த ரித்தேஷ் குமார், 35, என்றும், அப்பகுதியில் கூலித்தொழிலாளியாக வேலை செய்து வந்ததும் தெரிந்தது.அப்பகுதியில் உள்ள ஒரு பாழடைந்த வீட்டில் ரித்தேஷ் பதுங்கி இருப்பது தெரிந்தது. அவரை, போலீசார் கைது செய்ய முயற்சித்தனர். ஆனால், அந்நபர், போலீசாரை கற்களால் தாக்க துவங்கினார்.இதனால், எஸ்.ஐ., அன்னபூர்ணா அவரது காலிலும், முதுகிலும் சுட்டார். இதில், ரித்தேஷ் சுருண்டு விழுந்து உயிரிழந்தார். சம்பவம் நடந்து 12 மணி நேரத்திற்குள், குற்றவாளி, 'என்கவுன்டர்' செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Balakrishnan karuppannan
ஏப் 18, 2025 20:08

தமிழ் நாட்டுல பலாத்கார வழக்குனா அன்னைக்கே பெயில் கிடைச்சிருக்கும்


Raa
ஏப் 18, 2025 09:56

அங்க இல்லாததினால் பிடிக்க முடியவில்லை.


NIyayanidhi
ஏப் 15, 2025 07:47

அதே போன்று தமிழகத்தில் அண்ணா பல்கலைக் கழக வளாகத்தினுள் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட நபர் ஏன் இன்னும் என்கவுன்டர் செய்யப்படவில்லை? மாறாக போற்றிப் பாதுகாக்கப் படுகிறான்? எந்த சாரை காப்பாற்ற???


Ramesh Sargam
ஏப் 14, 2025 18:38

என்கவுண்டர் சரியான தண்டனை.


தமிழன்
ஏப் 14, 2025 08:42

சூப்பர் இதுதான் போலிஸ் தமிழ்நாட்டிலும் இப்படி 5 பேரை செய்தால் அரிப்பெடுத்து திரியும் ....களுக்கு கொஞ்சமாவது பயம் வரும் ஆனால் இதில் ஒரு ஆபத்தும் உள்ளது சீண்டிய ... சரிபார்த்து என்கவுண்டர் செய்ய வேண்டும் தவறான ஆளை என்கவுண்டர் செய்துவிடக் கூடாது


visu
ஏப் 14, 2025 08:32

கற்களால் தாக்கியதேர்க்கு என்கவுண்டர் ஆ ஆக அவரை பிடிக்க முயற்சிக்கவேயில்லை


ravi subramanian
ஏப் 14, 2025 08:17

Well done Karnataka police.


ஜெய்ஹிந்த்புரம்
ஏப் 14, 2025 04:53

பீஹாரை சேர்ந்த ரித்தேஷ் குமார், 35.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை