உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 14 பிளாட் வேண்டாம்: கணவர் தான் வேண்டும்: சித்தராமையா மனைவி ‛முடாவிற்கு கடிதம்

14 பிளாட் வேண்டாம்: கணவர் தான் வேண்டும்: சித்தராமையா மனைவி ‛முடாவிற்கு கடிதம்

பெங்களூரு : 'முடா' முறைகேடு வழக்கில், முதல்வர் சித்தராமையா மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், தனக்கு ஒதுக்கிய 14 வீட்டு மனைகளை ‛முடா' விடம் ஒப்படைக்க மனைவி பார்வதி முடிவு செய்து கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது..கர்நாடக முதல்வர் சித்தராமையா, 76. இவரது மனைவி பார்வதி. இவருக்கு சொந்தமான 3.16 ஏக்கர் நிலத்தை லே -- அவுட் அமைப்பதற்காக, 'முடா' எனப்படும் மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் கையகப்படுத்தியது. இதற்கு பதிலாக, மைசூரு நகரின் மையப் பகுதியான விஜயநகரில் 14 வீட்டுமனைகள் வழங்கப்பட்டன.அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி மனைவிக்கு வீட்டுமனை வாங்கிக் கொடுத்ததாக முதல்வர் மீது, மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் ஸ்நேகமயி கிருஷ்ணா வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கில் சித்தராமையா, பார்வதி, முதல்வரின் மைத்துனர் மல்லிகார்ஜுன சுவாமி, நிலத்தை விற்ற தேவராஜ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்ய, மைசூரு லோக் ஆயுக்தாவுக்கு நீதிபதி கடந்த மாதம் 25ம் தேதி உத்தரவிட்டார். 26ம் தேதி முதல்வர் உட்பட நான்கு பேர் மீது, 17 பிரிவுகளில் வழக்கு பதிவானது.இந்நிலையில், முதல்வர் மீது மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றத்தில் புகார் அளித்த சமூக ஆர்வலர் ஸ்நேகமயி கிருஷ்ணா, முடா வழக்கில் சட்டவிரோதமாக பணப் பரிமாற்றம் நடந்திருப்பதாகக் கூறி, கடந்த 28ம் தேதி அமலாக்கத் துறைக்கு அவர் புகார் செய்தார்.அந்த புகாரின்படி, சித்தராமையா மீது சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ், அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது.விசாரணைக்கு ஆஜராகும்படி கூடிய விரைவில் அவருக்கு நோட்டீஸ் அனுப்பவும் வாய்ப்புள்ளது. இது, கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நிலத்தை ஒப்படைக்க பார்வதி முடிவு

இந்நிலையில் சித்தராமையா மனைவி பார்வதி ‛முடா'விற்கு கடிதம் எழுதினார். அதில் 14 வீட்டுமனைகளையும் ‛முடா'விடம் ஒப்படைக்க தயாராக உள்ளதாகவும் கடிதத்தில் கூறியுள்ளார். தனக்கு கணவர் தான் முக்கியம், நிலம் பெரிதல்ல எனவும் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

ஆரூர் ரங்
அக் 01, 2024 14:16

டான்சி நிலத்தை திருப்பிக் கொடுத்த ஜெயா முதல் அப்போ அவரது சீடராக இருந்த சந்தில் பாலாஜி வரை செய்த அறத பழசான பூமர் டெக்னிக். இவருக்கு கணவர் முக்கியம். அதனை விட அவர் பதவியில் நீடிப்பது முக்கியம்.


nv
அக் 01, 2024 12:51

நம்ம செந்தில் பாலாஜி அறிவுரை குடுத்தாங்க? இனி எல்லோரும் பிடிபட்டால் திருடின ஜாமானை திருப்பி கொடுத்தால் போதும்? எதுக்கு போலீஸ், நீதிபதி??


பேசும் தமிழன்
அக் 01, 2024 08:08

இது எப்படி இருக்கு என்றால்.... திருடிய ஒருவன் மாட்டி கொண்டு விட்டதால்.... திருடிய பொருட்களை திருப்பி தந்து விடுகிறேன் என்று கூறுவது போல் இருக்கிறது.... அதனால் செய்த குற்றம் இல்லை என்று ஆகிவிடுமா !!!


sridhar
அக் 01, 2024 07:20

பிரச்சினை என்று வந்தவுடன் வாங்கிய லஞ்சப்பணத்தை திருப்பிக்கொடுத்து நல்லவன் ஆன அணில் செந்தில் தான் நினைவுக்கு வருகிறார் . வெட்கம் கெட்டவங்க .


ரெட்டை வாலு ரெங்குடு
அக் 01, 2024 06:28

கருங்குண்டு மல்லிகை பூ கார்கே நாட்டு பிரதமர் மோடி ஐயா மீது தான் சம்பந்தமே இல்லாத விடயத்துக்கு கூட கோவம் வரும் மயங்கி மேடையிலே வீழ்ந்தாலும் மோடி பாட்டுதான் எப்பவும் . கூடவே சுத்துற நொள்ளை சித்தய்ய உள்ளடி வேலை செஞ்சு காசடிச்சாலும் கண்டுக்கிடமாட்டார் இது காசுகொடுக்கிற எசமான் ராவுளின் மீது ஆணை ..


Kasimani Baskaran
அக் 01, 2024 05:37

செபா கோட்பாடு போல தெரிகிறது. லஞ்சம் வாங்கி இடம் கொடுப்போம். வெளியே தெரிந்தால் பணத்தை திரும்பக்கொடுத்து உத்தமராகிவிடுவோம். மானங்கெட்டதுகள்


நிக்கோல்தாம்சன்
அக் 01, 2024 05:02

கணவர் பதவியில் இருந்தால் இது போன்று இன்னமும் சம்பாரித்து கொள்வேன் , இந்த பதினாலும் வேண்டாம் என்று நினைத்திருப்பாரோ?


J.V. Iyer
அக் 01, 2024 03:02

வாங்கிய ஆட்டைபோட்ட எல்லா சொத்துக்களையும் திரும்ப கொடுத்தால், அணில் பாலாஜியைப்போல தியாகி ஆகலாம். உங்களுக்கு பதவி மட்டும் அல்ல, பதக்கமும் காத்திருக்கும்.


rao
அக் 01, 2024 01:04

Fearing arrest in the case ,his wife has decided to return the sites allotted to her.


Davamani Arumuga Gounder
அக் 01, 2024 00:53

தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆட்சியில் வேலை கொடுப்பதற்கு இலஞ்சம் பெற்றதை இலஞ்சம் கொடுத்தவர்களிடமே திருப்பி வழங்கியது போல நீங்களும் திரும்ப வழங்கி விடுங்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை