உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஊழல் வழக்கில் ஜார்க்கண்ட் முதல்வர் கைது

ஊழல் வழக்கில் ஜார்க்கண்ட் முதல்வர் கைது

ராஞ்சி: நில அபகரிப்பு வழக்கில் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், அமலாக்கத் துறை அதிகாரிகளால் நேற்று கைது செய்யப்பட்டார் . போக்குவரத்து அமைச்சர் சம்பாய் சோரன் புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.ஜார்க்கண்டில் போலி ஆவணங்கள் வாயிலாக பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்களை அபகரித்ததாக முதல்வர் ஹேமந்த் சோரன் மீது குற்றச்சாட்டு எழுந்தது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=rolairoa&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

14 பேர் கைது

இது குறித்து, சட்ட விரோத பணப் பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். ஐ.ஏ.எஸ்., அதிகாரி சாவி ரஞ்சன் உட்பட 14 பேரை கைது செய்தனர். விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத் துறை அனுப்பிய ஏழு சம்மன்களை புறக்கணித்த முதல்வர் சோரன், எட்டாவது சம்மனுக்கு பதிலளித்தார். கடந்த 20ம் தேதி ராஞ்சியில் உள்ள வீட்டில் அவரிடம் ஏழு மணி நேரத்துக்கு மேலாக விசாரணை நடத்தினர். ஜனவரி 29 அல்லது 30ல் மீண்டும் ஆஜராகும்படி தெரிவித்தனர்.இதற்கிடையே அவர், ராஞ்சியில் இருந்து டில்லி சென்றார். அப்போது அங்குள்ள அவரது வீட்டில் சோதனை நடத்திய அமலாக்கத் துறை அதிகாரிகள், 36 லட்சம் ரூபாய் ரொக்கம், பி.எம்.டபிள்யூ., கார் மற்றும் சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பான ஆவணங்களை கைப்பற்றினர். அன்று இரவே ஹேமந்த் மாயமானார். யாராலும் தொடர்பு கொள்ள முடியவில்லை.

விசாரணை

அவர் ராஞ்சிக்கு திரும்பி விட்டதாக தகவல் கிடைத்ததும், அமலாக்கத் துறையினர் நேற்று மதியம் 1:20 மணிக்கு முதல்வர் வீட்டுக்கு சென்றனர். இரவு 8:00 மணி வரை விசாரணை நடத்தினர். விசாரணையின் முடிவில், அவர் கைது செய்யப்படுவதாக அறிவித்தனர். உடனே கவர்னர் மாளிகைக்கு சென்ற சோரன், கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணனிடம் ராஜினாமா கடிதம் கொடுத்தார்; போக்குவரத்து அமைச்சர் சம்பாய் சோரனை, முதல்வராக நியமிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

சம்பாய்க்கு ஆதரவு

தெரிவித்து ஆளுங்கட்சியான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் சட்டசபை உறுப்பினர்கள் கையெழுத்திட்ட கடிதத்தையும் கவர்னரிடம் வழங்கினார். பின்னர், ஹேமந்த் சோரனை அமலாக்கத் துறை அதிகாரிகள் அழைத்து சென்றனர்.

போலீசில் புகார்

டில்லியில் நடத்தப்பட்ட சோதனை தொடர்பாக அமலாக்கத் துறை அதிகாரிகள் மீது, ராஞ்சியில் உள்ள எஸ்.சி., - எஸ்.டி., பிரிவு போலீஸ் ஸ்டேஷனில் நேற்று சோரன் புகார் அளித்தார். 'டில்லியில் உள்ள என் வீட்டில் அமலாக்கத் துறையினர் சட்டவிரோதமாகவும், என்னை அவமானப்படுத்தும் வகையிலும் சோதனை நடத்தி உள்ளனர். அங்கு கைப்பற்றிய காரும், பணமும் என்னுடையதே அல்ல. இதனால் நானும் குடும்பத்தினரும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம். அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என புகாரில் கூறியுள்ளார்.

யார் இந்த சம்பாய் சோரன்?

ஹேமந்த் சோரன் அரசில், போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த சம்பாய் சோரன், 67, ஜார்க்கண்ட் புதிய முதல்வராக பதவியேற்க உள்ளார். 1956 நவம்பரில் செரைகேலா - -கர்சவான் மாவட்டத்தின் ஜிலிங்கோரா என்ற கிராமத்தில், விவசாய குடும்பத்தில் பிறந்த சம்பாய் சோரன், ஏழுகுழந்தைகளுக்கு தந்தை. 1991 முதல், கடந்த 30 ஆண்டுகளாக, செரிகேலா சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.,வான இவர், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஷிபு சோரனின் தீவிர விசுவாசி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

M.S.Jayagopal
பிப் 01, 2024 18:54

ஊழல்வாதிகளை எந்த அளவிற்கு வளர விடுகிறோமோ அந்த அளவிற்கு அவர்களை பின்னர் கட்டுப்படுத்துவதும் / தண்டிப்பதும் கடினம்.மக்கள் இதை உணர்ந்து முளையிலேயே அவர்களை கிள்ளி எரிய வேண்டும்.


abdulrahim
பிப் 01, 2024 18:16

48 MLA களின் ஆதரவு கடிதம் கொடுத்தும் இன்னும் பாஜகவின் ஏஜென்ட் கவர்னர் புதிய முதல்வரை பதவி ஏற்க அனுமதி வழங்கவில்லை ஆளும் கூட்டணி உறுப்பினர்களை சந்திக்க அப்பாயிண்ட்மெண்ட் கொடுத்தவர் சந்திக்க சென்றபோது மரியாதை குறைவாக பேசி விரட்டி அடித்திருக்கிறார் , எஜமான் அனுமதி கிடைக்க வேண்டி தட்டி கழித்து கொண்டிருக்கிறார் அதோடு பாஜக குதிரை பேரம் நடத்த அவகாசம் வழங்கி கொண்டுள்ளார் ,இந்த சர்வாதிகாரம் முடிவுறும் காலம் நிச்சயம் வரும் , இன்று பாஜக செய்வது அவர்களுக்கே திருப்பி கொடுக்கப்படும்.


Sridhar
பிப் 01, 2024 14:55

ஒரு கடைந்தெடுத்த குற்றவாளியை கைது செய்வதுகூட இந்த நாட்டில் இவ்வளவு சிரமமாக இருக்குதே இதே போல் இன்னும் மூன்று பேர் பாக்கி எதிர்க்கட்சிகள் எதில் ஒன்றுபடுகிறார்களோ என்னவோ, ஊழல் செய்து அதில் மாட்டிக்கொள்ளும் விஷயத்தில் ஒரே நேர் கோட்டில் இணைகிறார்கள். இதே போன்ற கடுமையான நடவடிக்கைகள் தொடர்ந்தால், இனி ஊழல் செய்வது சாத்தியமல்ல என்ற மனநிலைக்கு இம்மாதிரியான அரசியல்வாதிகள் தள்ளப்படுவார்கள். அப்போது வேறு வழியின்றி ஒன்று இந்த தொழில் வேண்டாம் என்று ஒதுங்கிகொள்ளலாம் அல்லது உண்மையிலேயே மக்களுக்கு சேவை செய்யலாம் என்கிற எண்ணோட்டம் வரலாம். ஆக, ED வருகை நாட்டுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதம்


ஆரூர் ரங்
பிப் 01, 2024 14:20

பட்டியலின ST மக்களின் நிலங்களை போலி ஆவணங்கள் மூலம் பெரிய ஆட்களுக்கு விற்று மாட்டிக் கொண்டார் ஹேமந்த். நம்ம ஊரிலும் பட்டியலின???? பஞ்சமி நிலங்களை திருடி மூலப்பத்திரம் இல்லாமல் அனுபவிக்கிறாங்க. கேட்பாரில்லை . வாக்காளர்களுக்கும் அறிவு குறைவு.


N.Purushothaman
பிப் 01, 2024 12:25

இவர் தந்தை கொலை வழக்கில் இரட்டை ஆயுள் தண்டனை பெற்றவர் ....அதனால் தான் இவர் முதல்வரானார் ....இப்போ இவர் அரசின் சொத்துக்களை தன்னுடைய பெயருக்கு மாற்றி கிட்டத்தட்ட ஆயிரம் கோடி வரை தில்லு முள்ளு செய்துள்ளார் ....யாரை த்தான் நம்புவதோ .....ஊழல்வாதிகள் பாரதத்தின் சாபக்கேடு ....


ஆரூர் ரங்
பிப் 01, 2024 10:32

கெஜரிவால் மாதிரி இலாகா இல்லாத முதல்வராக???? தொடரும் ஐடியா கிடைக்க வில்லையா?


Anand
பிப் 01, 2024 10:17

நாடு விளங்கிடும்...


raghavan
பிப் 01, 2024 09:50

இங்க 30000 கோடிக்கு நடவடிக்கை ஒன்றும் இல்லையா என்று மக்கள் கேட்கிறார்கள்


ديفيد رافائيل
பிப் 01, 2024 08:43

Local police மாதிரி கிடையாது அமலாக்க துறை. தப்பு பண்றதுக்கான வெளியே வர முடியாத அளவுக்கு valid proof வச்சு தான் அமலாக்க துறை arrest பண்ண வர்றாங்க.


VENKATASUBRAMANIAN
பிப் 01, 2024 08:18

திருட்டு கும்பல். இவர்களுக்கு ஓட்டு போட்ட மக்கள் வெட்கப்பட வேண்டும்


மேலும் செய்திகள்









புதிய வீடியோ