உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஹேமந்த் சோரன் ஜாமினுக்கு எதிரான அமலாக்கத்துறையின் மனு தள்ளுபடி

ஹேமந்த் சோரன் ஜாமினுக்கு எதிரான அமலாக்கத்துறையின் மனு தள்ளுபடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் ஜாமினுக்கு எதிரான அமலாக்கத் துறையின் மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.நில மோசடியில் தொடர்புடைய பணமோசடி வழக்கில், ஜார்க்கண்ட் முக்தி மோட்சா கட்சி தலைவர் ஹேமந்த் சோரன் கடந்த ஜனவரி மாதம் 31ம் தேதி கைது செய்யப்பட்டார். இதனையடுத்து, அவர் ஜார்க்கண்ட் மாநில ஐகோர்ட்டில் ஜாமின் மனு தாக்கல் செய்தார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=lypftdft&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கடந்த ஜூன் மாதம் 28ம் தேதி ஐகோர்ட் ஜாமின் மனு வழங்கியது. ஐந்து மாதங்களுக்கு பின்னர் சிறையில் இருந்து வெளியே வந்த சோரன் ஜூலை 4ம் தேதி 3வது முறையாக முதல்வராக பதவியேற்றார்.இந்நிலையில் சோரனுக்கு ஜாமின் வழங்கியதை எதிர்த்து அமலாக்கத்துறை சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று (ஜூலை 29) நீதிபதிகள் பி.ஆர் கவை மற்றும் கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. சோரனுக்கு ஜாமின் வழங்கியதை எதிர்த்து அமலாக்கத்துறையின் மேல்முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது. ஹேமந்த் சோரன் வழக்கில் ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் சரியான உத்தரவைத் தான் பிறப்பித்துள்ளது என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

R Kay
ஜூலை 29, 2024 21:09

ஊழலின் ஆணிவேர் பரம்பரை பரம்பரையாய் மக்களை சுரண்டிவரும் குடும்பக்கட்சிகள்


கனோஜ் ஆங்ரே
ஜூலை 29, 2024 19:23

மூக்கொடைப்பு...?


Sathyanarayanan Sathyasekaren
ஜூலை 29, 2024 19:51

கனோஜ் கொத்தடிமை, ஏன் எப்போதும் ஊழல் செய்யும் கொள்ளைக்காரர்களும் சோம்பு தூக்கும் கருத்துக்களை எழுதுகிறாய்? வெட்கமில்லை?


vadivelu
ஜூலை 29, 2024 16:45

பெயில் தானே.. விடுதலை இல்லையே.


Narayanan
ஜூலை 29, 2024 16:20

சட்டம் ஒரு இருட்டு அறைதான்


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி