உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மகா., அரசு அதிகாரி வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு: ரூ.9 கோடி ரொக்கம்; ரூ.23 கோடி வைர நகைகள் பறிமுதல்

மகா., அரசு அதிகாரி வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு: ரூ.9 கோடி ரொக்கம்; ரூ.23 கோடி வைர நகைகள் பறிமுதல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: மும்பை மற்றும் ஐதராபாத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.32 கோடி மதிப்புள்ள ரொக்கம் மற்றும் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.மகாராஷ்டிரா மாநிலம் வாசை விரார் மாநகராட்சி நகரமைப்பு துணை இயக்குனர் ஒய்.எஸ்.ரெட்டி மீது கட்டுமான அனுமதியில் முறைகேடு, சட்ட விரோத பணப்பரிமாற்ற மோசடி புகார்கள் எழுந்தன. கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம், குப்பை கிடங்குக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தில், சட்ட விரோதமாக கட்டடம் கட்ட அனுமதி வழங்கியதாக, அவர் மீது வழக்கு பதியப்பட்டது.இதையடுத்து அவருக்கு சொந்தமான மும்பை, ஐதராபாத் வீடுகள், உறவினர்கள், நண்பர்கள் வீடுகள் என மொத்தம் 13 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தினர்.இதில், 23.25 கோடி ரூபாய் மதிப்புள்ள வைர நகைகள், 9.04 கோடி ரூபாய் ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. ஏராளமான சொத்து ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடந்து வருவதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

மீனவ நண்பன்
மே 15, 2025 22:27

ED income tax anti corruption துறை எவ்வளவு கண்டுபிடிச்சிர போறாங்க என்கிற தைரியத்தில் தான் லஞ்சம் வாங்கறாங்க


Raghavan
மே 15, 2025 22:10

தெரிந்து எடுத்தது கொஞ்சம் தான். இன்னும் தெரியாமல் எங்கெங்கயோ ஒளித்துவைத்து இருப்பார்கள். அதை வைத்து கவனிக்கவேண்டியவர்களையெல்லாம் கவனித்து வழக்கை ஒன்றும் இல்லமால் செய்து கைப்பற்றப்பணத்தை எல்லாம் சுலபமாக பெற்றுவிடுவார்கள். வழக்கு நடக்கும் ஒரு 20 வருடம். நம் வரிப் பணம் தான் போகும். இதெல்லாம் ஒரு கண்துடைப்பு வேலை.


நிக்கோல்தாம்சன்
மே 15, 2025 21:47

அது எப்படி எங்க போனாலும் இந்த ரெட்டிக்கல் மட்டும் லஞ்சம் வாங்குவதில் கிங் ஆகுறாங்க ?


ராமகிருஷ்ணன்
மே 16, 2025 07:40

உலகிலே லஞ்சம் ஊழல்களில் நெம்பர் ஒன் திமுக மட்டுமே. ரெட்டிகள் பின்னால் வருகிறார்கள்


Ramesh Sargam
மே 15, 2025 20:18

அமைச்சர்கள் வீட்டில் எவ்வளவு கிடைக்கும் பார்த்துக்குங்க.


Raja k
மே 15, 2025 19:58

திராவிட மாடல் ஆட்சியின் அலங்கோலம்,


parthi sj
மே 15, 2025 20:50

yow...athu maharashtra