உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தற்கொலை செய்த இன்ஜினியர் மனைவி சிறையில் அடைப்பு

தற்கொலை செய்த இன்ஜினியர் மனைவி சிறையில் அடைப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மாரத்தஹள்ளி: தற்கொலை செய்த இன்ஜினியரின் மனைவி, ஹரியானாவில் கைது செய்யப்பட்டார். அவரது தாய், சகோதரருடன் சேர்த்து பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார்.உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் அதுல் சுபாஷ், 34. இவரது மனைவி நிகிதா சிங்கானியா, 32. இந்த தம்பதிக்கு நான்கரை வயதில் மகன் உள்ளார்.கர்நாடகாவின் பெங்களூரு, மாரத்தஹள்ளியில் உள்ள தனியார் நிறுவனத்தில், சாப்ட்வேர் இன்ஜினியராக அதுல் சுபாஷ் பணியாற்றினார்.குடும்ப தகராறில் கணவரும், மனைவியும் பிரிந்தனர். இந்நிலையில் கடந்த 9ம் தேதி இரவு, அதுல் சுபாஷ் தான் வசித்த வீட்டில், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அதற்கு முன் 90 நிமிட வீடியோவை, 'எக்ஸ்' வலைதள பக்கத்தில் வெளியிட்டார்.அந்த வீடியோவில் மனைவி நிகிதா, மாமியார் நிஷா, மைத்துனர் அனுராக் ஆகியோரால், தான் சந்தித்த அவமானங்கள், சித்ரவதைகள் பற்றி உருக்கமாக பேசி இருந்தார். உத்தர பிரதேச நீதிமன்றங்களில் தன் மீது, மனைவி ஒன்பது பொய் வழக்குகள் போட்டு இருப்பதாகவும், அவற்றில் ஒரு வழக்கை தீர்த்து வைக்க, பெண் நீதிபதி லஞ்சம் கேட்டதாகவும் கூறி இருந்தார். அதுலின் தற்கொலை, நாடு முழுதும் பரபரப்பை ஏற்படுத்தியது.இது தொடர்பாக, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். நிகிதா, நிஷா, அனுராக்கை தேடி, உத்தர பிரதேசத்திற்கு மூன்று தனிப்படை போலீசார் சென்றனர். கடந்த 12ம் தேதி இரவு நிஷா, அனுராக் கைது செய்யப்பட்டனர். அவர்களை ஒரு தனிப்படை போலீசார், பெங்களூரு அழைத்து வந்து விசாரித்தனர்.தலைமறைவாக இருந்த நிகிதா, நேற்று முன்தினம் ஹரியானா மாநிலம், குருகிராமில் கைது செய்யப்பட்டார். நேற்று அவர் பெங்களூரு அழைத்து வரப்பட்டார். நிகிதா, நிஷா, அனுராக்கை 14 நாட்கள் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, மூன்று பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

'அஸ்தியை கரைக்க மாட்டோம்'

அதுல் சுபாஷின் தந்தை பவன் குமார் பீஹாரில் வசித்து வருகிறார். அவர் கூறியதாவது:என் மகனை சித்ரவதை செய்து, தற்கொலைக்கு துாண்டியவர்களுக்கு கடுமையான தண்டனை கிடைக்க வேண்டும். சுபாஷின் மனைவி, மாமியாரை கைது செய்த கர்நாடகா போலீசாருக்கு நன்றி. பணத்துக்காக என் மகனை கொடுமைப்படுத்தியுள்ளனர். அவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத் தரும்படி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளேன். என் மகன் தற்கொலைக்கு நீதி கிடைக்கும் வரை, அவனது அஸ்தியை கரைக்க மாட்டேன். என் பேரன் எங்கிருக்கிறான் என தெரிய வில்லை; உயிருடன் இருக்கிறானா என்பதே சந்தேகமாக உள்ளது. போலீசார், அவனை கண்டுபிடித்து என்னிடம் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

ashok kumar
டிச 19, 2024 21:41

ஜீவனாம்சம் வேணும்னு கேக்கிறவர்களுக்கு கட்ட பஞ்சாயத்து தான் சரியான இடம். சட்டம் அனைவருக்கும் சமம்னு சொல்லிட்டு ஆண்களுக்கு கேடு விளைவிக்கிறது. ஆண்களுக்கு தனி சட்டம் இல்லை எனில் வருங்காலத்தில் ஆண் வாரிசு இல்லாமல் போகும். சட்டம் ஜீவனாம்சம் கொடுக்க சொல்வது ஜீவனை உடலில் இருந்து பிரிப்பதாகும்


Sivak
டிச 18, 2024 22:31

அந்த பெண் நீதிபதியை கைது செய்து பணி நீக்கம் செய்யவேண்டும் .... மனைவி மாமியார் ஆகியோரை 10 வருடம் சிறையில் தள்ள வேண்டும் .... கேடு கேட்ட சட்டம் பெண்களுக்கு சாதகமாக தான்உள்ளது ... எல்லாம் ஓட்டு வங்கி செய்யும் வேலை .... இப்படி தாஜா பண்ணி சட்டம் போட்டால் தானே பெண்கள் ஓட்டு கிடைக்கும் ....


பட்டினத்தார் , மலையும் மலை சார்ந்த பகுதி
டிச 16, 2024 13:05

இந்த வழக்கை திசை மாற்ற அந்த நீதிபதியும் உள்ளூர் போலீசாரும் இதற்கும் இலஞ்சம் கேட்பார்கள். சுபாஷிடம் இலஞ்சம் கேட்டு கிடைக்காத ஆத்திரத்தில் அவரது மனைவியிடம் ஜந்து இலட்சம் பதிலாக பத்து இலட்சம் வாங்கி கொள்வார்கள். சுபாஷின் அப்பா அம்மா மீதே பொய் வழக்கு போட்டு அதற்கும் இலஞ்சம் கேட்க தயங்க மாட்டார்கள். எப்படியும் இந்த வழக்கு முடிய ஒரு 20 30 வருடங்கள் ஆகலாம். அதுவரை பொருத்திருந்து பார்க்க வேண்டும். ஊடகங்கள் இன்னும் இரண்டு மூன்று மாதங்களில் இந்த வழக்கையே மறந்து போகும். பிணத்தை கண்டால் கூட ஏதாவது காசு தேறுமா என்று தேடும் உலகம்.


Kasimani Baskaran
டிச 16, 2024 04:26

மூவரும் கிட்டத்தட்ட தீவிரவாதிகள் போலத்தான் இருக்கிறார்கள்.


Iniyan
டிச 16, 2024 03:49

முதலில் லஞ்சம் கேட்ட அந்த நீதிபதியை கைது செய்ய வேண்டும். நீதி துறையின் லட்சணம் இந்த நீதிபதி.


சமீபத்திய செய்தி