உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நுழைவுத் தேர்வுகள் தான் காரணம்; குடியரசு துணை தலைவரின் பேச்சுக்கு காங்கிரஸ் பதிலடி

நுழைவுத் தேர்வுகள் தான் காரணம்; குடியரசு துணை தலைவரின் பேச்சுக்கு காங்கிரஸ் பதிலடி

புதுடில்லி: இந்திய மாணவர்கள் கல்விக்காக வெளிநாடு செல்வது குறித்து குடியரசு துணை தலைவர் விமர்சனம் செய்ததற்கு காங்கிரஸ் பதிலடி கொடுத்துள்ளது. கல்விக்காக மாணவர்கள் வெளிநாடு செல்வது குறித்து பேசிய குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தங்கர், குழந்தைகள் சிறு வயதில் இருந்தே, வெளிநாடுகளுக்கு சென்று கல்வி பயில வேண்டும் என்று கனவு காண்கின்றனர். 2024ல் மட்டும் 1.3 மில்லியன் இந்திய மாணவர்கள் கல்விக்காக வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர். அவர்களின் எதிர்காலம் என்ன என்று மதிப்பிடப்படுகிறது. இதுவே, அவர்கள் இங்கு கல்வி பயின்றால், எதிர்காலம் பிரகாஷமாக இருக்கும் என்பதை புரிந்து கொண்டனர். அதேபோல, நமது மாபெரும் முதலீடுகள் வெளிநாடுகளுக்கு செல்கின்றன. மாணவர்கள் கல்விக்காக வெளிநாடு செல்வது ஒருவகையான நோயாக மாறிவிட்டது, எனக் கூறியிருந்தார். அவரது இந்தப் பேச்சுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், தனது எக்ஸ் தளத்தில் பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது; மாணவர்கள் வெளிநாடு சென்று கல்வி பயிலுவதை புது வியாதி என்று குடியரசு துணை தலைவர் கூறியிருக்கிறார். ஆனால், இது பழைய வியாதி தான். பல ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே வெளிநாடுகளுக்கு சென்று மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். அவர் சொல்வதைப் போல இது வியாதி எல்லாம் கிடையாது. இந்திய முறை நோயால் பாதிக்கப்பட்டதன் அறிகுறியாகத்தான் பார்க்கிறோம். க்யூட் உள்ளிட்ட தேர்வுகளின் நெருக்கடி காரணமாக மாணவர்கள் வெளிநாடுகளுக்கு சென்று கல்வி கற்க ஆர்வம் காட்டுகின்றனர். இங்கு தரமான கல்வி கிடைப்பதில்லை, எனக் குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

K.SRIDHARAN
அக் 26, 2024 00:24

Reservation policy is reason


K.SRIDHARAN
அக் 26, 2024 00:22

நாட்டின் reservation policy ஒரு kaaranam


Devan
அக் 21, 2024 16:44

60 வருடமாக கல்வியை தரமானதாக தர முடியாத காங்கிரஸ் இதை சொல்கிறது. வெளிநாட்டில் தேர்வு எழுதாமலே தேர்ச்சி பெறலாம் என்று சொல்கிறாரா ? இவர்களது கூட்டணி இருண்ட திமுக அதற்கு மேல் இருக்கும் கல்வியையும் தரமற்றதாக ஆக்க முயற்சிக்கிறது.


raja
அக் 21, 2024 10:49

நுழைவு தேர்வில் போதிய மதிப்பெண் எடுக்க முடியாத காரணத்தால் தான் மகளை மலேசியாவில் படிக்க வைத்ததாக இந்நாள் திராவிட எம் பி தயாநிதி மாறன் சொல்லி இருக்கிறார்... இப்போ தவறு நுழைவு தேர்வில் லா இல்லை போதிய மதிப்பெண் எடுக்காத அவரது மகள் மீதா.. சொல்லு தமிழா சொல்லு


raja
அக் 21, 2024 10:45

நுழைவு தேர்வு இல்லாமல் அப்பணின் செல்வாக்கை பயன் படுத்தி தங்க முடியின் மகன் சிதம்பரத்தில் உள்ள பல்கலை கழகத்தில் பெண்கள் விடுதி அருகே அடித்த கூத்துக்கள் அந்த கால கட்டத்தில் படித்த மாணவர்களுக்கு நன்கு தெரியும்... நுழைவு தேர்வு இருந்துந்திருந்தால் தருதலைகளுக்கு கல்லூரியில் இடம் கிடைத்திருக்காது...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை