உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பாகிஸ்தானுடன் இனி பேச்சே இல்லை: இழுத்து மூடினார் ஜெய்சங்கர்

பாகிஸ்தானுடன் இனி பேச்சே இல்லை: இழுத்து மூடினார் ஜெய்சங்கர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பாகிஸ்தானுடன் இனி பேச்சுவார்த்தை நடத்தப்படாது என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.புதுடில்லியில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் அவர் பேசியதாவது: பாகிஸ்தானுடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்திய காலம் முடிந்து விட்டது. இனிமேல் அந்நாட்டின் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் எதிர்வினை இருக்கும். பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒரு சேர நடக்காது என்பதில் உறுதியாக இருக்கிறோம். காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து 370 வது பிரிவு நீக்கப்பட்டு விட்டது. எனவே பாகிஸ்தானுடன் எந்த மாதிரியான உறவை பற்றி நாம் சிந்திக்க வேண்டும் என்பதே பிரச்னை. இந்தியா செயலற்ற நாடு கிடையாது. எந்த ஒரு நிகழ்வு நேர்மறையாகவோ அல்லது எதிர்மறையாகவோ இருந்தாலும், அதற்கு நாம் எதிர்வினை ஆற்றுவோம்.பாகிஸ்தானில், பயங்கரவாதம் என்பது தொழில்முறையாக மாறிவிட்டது. இத்தகைய அச்சுறுத்தலை நாம் எதிர்கொள்ளும் நிலையில் இல்லை. இந்தியாவை பேச்சுவார்த்தைக்கு கொண்டு வருவதற்கு எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தனது செயல்திட்டமாக வைத்து உள்ளது. ஆனால், இந்த நிபந்தனையை ஏற்க முடியாது என்பதில் நாம் உறுதியாக இருந்து பாகிஸ்தானின் கொள்கையை செயலற்றதாக்கி விட்டோம். இவ்வாறு ஜெய்சங்கர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Duruvesan
ஆக 30, 2024 20:12

தமிழனின் கெத்து, இங்கே ஒருத்தர் 370 நீக்கதுக்கு எதிரா போராட்டம் பண்ண கெளம்பிட்டு கைதுன்னு சொன்ன உடனே மூடிக்கிட்டார், மெரினாவில் உண்ணும் விரதம் இருப்பாரு


S.L.Narasimman
ஆக 30, 2024 20:11

நாமும் அங்கே போக வேண்டாம். அந்த தீவிரவாதிகளையும் உயிரோடு நம் எல்லை தாண்டி வரவிடவேண்டாம். துணிந்து நடவடிக்கை எடுத்து ஓழிக்க வேண்டும்.


Duruvesan
ஆக 30, 2024 20:10

இண்டி கூட்டணிக்கு கசக்கும்


தமிழ்வேள்
ஆக 30, 2024 19:59

பாக்கிஸ்தானின் இந்திய பங்காளி மாமன் மச்சான் சகலை என்று பாரதத்தில் பெருச்சாளி வேலை பார்க்கும் புள்ளி கும்பலின் கதையை எப்போது முடிக்க போகிறீர்கள்? இந்த கும்பலை ஒழித்தால் பாகிஸ்தானின் திமிர் குறையும்... பிரியாணி மற்றும் பொம்மனாட்டிக்கு விலைபோன டிக்கெட்டுகள் லோக்கல் மூர்க்க அடிமைகள்.


Ramasamy
ஆக 30, 2024 19:41

அருமையானா பதில்


KRISHNAN R
ஆக 30, 2024 19:33

இந்தியாவில் நேரடி பிரச்சினை செய்ய முடியாது... காஷ்மீர் மூலம் குளிர் காய்ந்தது போதும்


அப்பாவி
ஆக 30, 2024 18:58

அது சரி... பாகிஸ்தான் அழைப்பை ஏற்று ஜீ அங்கே போவாரா மாட்டாரா?


Hari
ஆக 30, 2024 21:31

Appaviyaga irukalam... Kozhaiyaga irunka koodathu... Puriyutha komaali appavi


SANKAR
செப் 29, 2024 06:55

இவரெல்லாம் அப்பாவி இல்லைங்க..பாகிஸ்தானுக்கு வால் பிடிப்பவர்நக்கல் நையாண்டி


Amruta Putran
ஆக 30, 2024 18:52

Great Super Assertive


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை