உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஐயப்ப பக்தர்களுக்கு எருமேலி, புல்மேடு பாதைகள் திறப்பு

ஐயப்ப பக்தர்களுக்கு எருமேலி, புல்மேடு பாதைகள் திறப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சபரிமலை : கனமழை காரணமாக மூடப்பட்ட குமுளி - புல்மேடு, எருமேலி - கரிமலை பெருவழிப்பாதைகள் நேற்று காலை திறக்கப்பட்டன. பக்தர்கள் இவ்வழியாக சபரிமலை வரத்தொடங்கியுள்ளனர்.நவ. 30 முதல் நேற்று முன்தினம் காலை வரை பெய்த பெருமழை காரணமாக காட்டுப்பாதைகளான குமுளி - சத்திரம், - புல்மேடு, எருமேலி முக்குளி - கரிமலை பாதைகள் தற்காலிகமாக மூடப்பட்டன. நேற்று முன்தினம் காலை 8:00 மணிக்கு பின்னர் சபரிமலை பாதைகளில் மழை இல்லை. இதனால்நேற்று காலை 8:00 மணி முதல் இந்த பாதைகளில் பக்தர்கள் நடந்து செல்ல அனுமதிக்கப்பட்டனர். புல்மேடு பாதையில் நேற்று மதியம் ஒரு மணி வரை 581 பக்தர்கள் வந்தனர். இவற்றில் வனத்துறை மற்றும் போலீசாரின் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.பக்தர்களின் வசதிக்காக கேரள அரசு போக்குவரத்துக் கழகம் நிலக்கல் - -பம்பை செயின் சர்வீஸ் மற்றும் தொலைதுார சர்வீஸ்களை நடத்தி வருகிறது. கடந்த 18 நாட்களில் பம்பை -- நிலக்கல் இடையே 43 ஆயிரத்து 242 சர்வீஸ்களையும், 8 ஆயிரத்து 657 தொலைதுார சர்வீஸ்களையும் இயக்கி உள்ளது. இதன் மூலம் போக்குவரத்து கழகத்தின் தினசரி வருமானம் 46 லட்சம் ரூபாயாக உள்ளது. தினமும் 90 ஆயிரம் பக்தர்கள் இச் சேவையை பயன்படுத்துகின்றனர். தொலைதுாரப் பயணிகளின் வசதிக்காக பம்பை திருவேணியில் இருந்து பஸ் ஸ்டாண்ட் வரை பக்தர்கள் இலவசமாக அழைத்துச் செல்லப்படுகின்றனர்.பக்தர்களுக்கு உடல்நிலைக்குறைவு ஏற்படும் பட்சத்தில் அவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்க சன்னிதானம் அரசு மருத்துவமனையில் நவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த 18 நாட்களில் இங்கு 23 ஆயிரத்து 28 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். ஒரே நேரத்தில் 10 டாக்டர்கள் பணியில் இருக்கின்றனர்.பாம்பு கடி சிகிச்சைக்கான மருந்துகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை