உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கடவுளாலும் பெங்களூருவை மாற்ற முடியாது: சொல்கிறார் கர்நாடக துணை முதல்வர்

கடவுளாலும் பெங்களூருவை மாற்ற முடியாது: சொல்கிறார் கர்நாடக துணை முதல்வர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரு : '' கடவுள் வந்தாலும் ஒரே நாளில் பெங்களூரு நகரை மாற்ற முடியாது'', என கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார். கர்நாடக தலைநகரான பெங்களூருவில் நாட்டின் முன்னணி மென்பொருள் நிறுவனங்கள் செயல்படுகின்றன. இதனால், அந்நகர் எப்போதும் பரபரப்பாக காணப்படும். கடுமையான போக்குவரத்து நெரிசல் மிக்க நகரமாக காணப்படுகிறது. வாடகையும் விண்ணை முட்டும் அளவுக்கு உள்ளது.இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் பேசியதாவது: ஒரே நாளில் பெங்களூருவை மாற்ற முடியாது. கடவுள் வந்தாலும், அதற்கு சாத்தியம் இல்லை. ஆனால், முறையான திட்டங்கள் வகுத்து அதனை முறையாக செயல்படுத்தினால், மாற்றம் நிச்சயம்.சாலை, பாதசாரிகளுக்கான நடைபாதை அமைத்தல் உள்ளிட்ட நகர்ப்புற கட்டமைப்பு பணிகளில் தரத்தை பராமரிக்க வேண்டும். பேருந்து நிலையங்கள், மெட்ரோ தூண்கள் உள்ளிட்டவற்றில் முறையான தரத்தை கட்டமைக்க அரசு விரும்புகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Subash BV
பிப் 22, 2025 20:56

UNFIT CONGRESS GOVT


venugopal s
பிப் 21, 2025 13:13

இவருக்கு முந்தைய ஆட்சியில் அந்த அளவுக்கு நாசம் செய்து வைத்து உள்ளனரா?


அப்பாவி
பிப் 21, 2025 06:18

50, 60 வருஷமா பா.ஜ வும், காங்கிரசும் ஆண்டு பெங்களூரை நாஸ்தி பண்ணிட்டாங்க. இருவருக்கும் ஊழலில் சரிபங்கு உண்டு.


நிக்கோல்தாம்சன்
பிப் 21, 2025 05:34

தரம் இல்லாத ப்ரோக்கர் கையில் சிக்கினால் என்னாகும் ? என்பதற்கு பெங்களூரு ஒரு உதாரணம்


எவர்கிங்
பிப் 21, 2025 01:23

khan-cross க்கு வாக்களித்தால் அப்படித்தான்


subramanian
பிப் 21, 2025 00:02

சரி, மாற்ற வேண்டிய அவசியம் இருக்கிறது என்று ஒப்புக் கொண்டு விட்டார். இவர்களால் மாற்ற முடியவில்லை. தோல்வியை பெற்று பதவி விலக வேண்டும்.


Ramesh Sargam
பிப் 20, 2025 22:30

ஊழல் இல்லாமல் திட்டங்களை நிறைவேற்றினால் பெங்களூரு மாறும். அதை செய்யவேண்டியது ஆட்சியில் உள்ளவர்கள். கடவுள் இல்லை. உங்கள் கையாலாகாத்தனத்திற்கு கடவுள் மீது பழி சுமத்தாதீர்கள்.


புதிய வீடியோ