உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பா.ஜ.,வில் சேர அழுத்தம்: கெஜ்ரிவால் புது குற்றச்சாட்டு

பா.ஜ.,வில் சேர அழுத்தம்: கெஜ்ரிவால் புது குற்றச்சாட்டு

புதுடில்லி: பா.ஜ.,வில் சேர அழுத்தம் கொடுக்கப்பட்டதாக டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசினார்.

பா.ஜ.,வில் சேர சொல்கிறார்கள்

டில்லியில் புதிய பள்ளி கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டும் விழாவில் கெஜ்ரிவால் பேசியதாவது: என்னை சிறையில் அடைத்தாலும் பள்ளிகள் கட்டப்படும். மக்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படும். மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், எங்களை விடுவிக்கிறோம் என சொல்லி பா.ஜ.,வில் சேரச் சொல்கிறார்கள். நான் பா.ஜ.,வில் சேரமாட்டேன் என்று சொன்னேன். நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை. நாங்கள் தலைவணங்க மாட்டோம்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=se8jhp0l&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

உள்கட்டமைப்பு

டில்லியில் உள்ள அரசு பள்ளிகளுக்கு டில்லி அரசு தனது பட்ஜெட்டில் ஒவ்வொரு ஆண்டும் 40 சதவீதம் செலவிடுகிறது. மணிஷ் சிசோடியாவின் தவறு, அவர் நல்ல பள்ளிகளை கட்டிக் கொடுத்தது தான். சத்யேந்திர ஜெயின் தவறு என்னவென்றால், அவர் நல்ல மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகளை உருவாக்கினார். பள்ளியின் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக மணிஷ் சிசோடியா பாடுபடாமல் இருந்திருந்தால், அவர் கைது செய்யப்பட்டிருக்க மாட்டார். அவர்கள் (பா.ஜ.,வினர்) எல்லா வகையான சதிகளையும் உருவாக்கினர். ஆனால் எங்களைத் தடுக்க முடியவில்லை.

நல்ல கல்வி

பள்ளிகள், ஆம் ஆத்மி கிளினிக்குகள், மருத்துவமனைகள் திறப்பு விழாவுக்குச் நான் செல்லும்போது, மற்ற கட்சிகளைச் சேர்ந்தவர்கள் அங்கு வந்து எதிராக முழக்கங்களை எழுப்புகிறார்கள். தங்கள் குழந்தைகள் நல்ல கல்வியைப் பெறுவார்கள் என்று ஏழைகள் மத்தியில் ஒரு புதிய நம்பிக்கை இருக்கிறது. அரசு நடத்தும் பள்ளிகளில் இது பெரிய விஷயம். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 25 )

குமரி குருவி
பிப் 05, 2024 08:52

அட.. பச்சோந்தி நீ பண்ணிய தப்பு கொஞ்சமாநஞ்சமா..குருவுக்கு துரோகம் பண்ணினே ஊழல் லஞ்சம் இருக்காதுன்னு சொன்னேபிறகு அதுவே முழு நேர வேலையானது..வழக்கு நடவடிக்கை என்றால் பா.ஜ.க.மிரட்டுதுனு பொய் பொய்யாகபேசுறே நயவஞ்சக


Ramesh Sargam
பிப் 05, 2024 07:54

ஓஹோ, பாஜகாவில் சேரவேண்டும் என்கிற எண்ணம் இவருக்கு இருக்கு போல ...


ராஜா
பிப் 05, 2024 04:47

பாஜகவில் சேர்ப்பது இல்லை குறிக்கோள். ஊழல்களுக்கு ஊற்றுக்கண் காங்கிரசோடு சேர விடாமல் அவர் சின்னத்தை வைத்தே அடித்து விரட்டுவதே குறிக்கோள்.


Shankar
பிப் 04, 2024 23:14

எந்த தவறும் செய்யாமல் தான் உங்க துணை முதல்வர் மாசக்கணக்குல கம்பி எண்ணிக்கிட்டு இருக்காரா?


Siva
பிப் 04, 2024 22:16

திராவிட கட்சிகளை மிஞ்சிய கெஜ்ரிவால்.


C.SRIRAM
பிப் 04, 2024 22:07

இந்த உளறலுக்கு அளவே இல்லை . இந்த ஆள் எப்படி அரசு உயர் அதிகாரியாக இருந்தார் என்பதே சந்தேகம் . முதலில் ஒழிக்கப்பட வேண்டிய நபர்


panneer selvam
பிப் 04, 2024 19:37

ha ha .Kejiwal ji , there is a limit of your jokes . have not you seen police waiting at your doorsteps seeking evidence of your accusations of bribing 25 crores to seven of your MLAs ? You do not want to meet them and now one more new accusations which are hard to believe .


Indhuindian
பிப் 04, 2024 19:22

இந்த வுஷல் பெருச்சாளியை சேத்துக்கறதுக்கு பதிலா பேசாம பி ஜே பி ய கலைச்சிடலாம்.


வாய்மையே வெல்லும்
பிப் 05, 2024 06:51

பாஜாகாவை எதற்காக துடைப்பம் பார்த்து பயப்படப்போகுது.. காமெடி பீஸ் கமெண்ட்


VENKATASUBRAMANIAN
பிப் 04, 2024 19:06

நல்ல காமெடி. இவர் என்றுமே உண்மை பேசியதில்லை. ஊழலை ஒழிப்போம் என்று சொல்லி இப்போது ஊழலில் மாட்டியுள்ளார்.


அருண் குமார்
பிப் 04, 2024 18:27

வேற ஒன்னும் இல்லை கொஞ்சம் மன அழுத்தம் அதனால் தான் இப்படி பேசி வருகிறார் கொஞ்சம் டிரீட்மென்ட் எடுத்தால் எல்லாம் சரியா போய்டும்


மேலும் செய்திகள்







புதிய வீடியோ