உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மும்பையில் மராத்தா இட ஒதுக்கீடு போராட்டம் முடிவுக்கு வந்தது!

மும்பையில் மராத்தா இட ஒதுக்கீடு போராட்டம் முடிவுக்கு வந்தது!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: மும்பையில் நடந்த மராத்தா இட ஒதுக்கீடு போராட்டம், 5 நாட்களுக்கு பிறகு இன்று முடிவுக்கு வந்துள்ளது. தம் கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளதாக, சமூக ஆர்வலர் மனோஜ் ஜாரங்கி இன்று அறிவித்தார்.கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் 10 சதவீதம் இட ஒதுக்கீடு வேண்டும் என்பது மராத்தா சமூகத்தினரின் பல ஆண்டு கோரிக்கையாகும். இதை நிறைவேற்ற கோரி, சமூக ஆர்வலர் மனோஜ் ஜாரங்கி பாட்டீல் உண்ணாவிரத போராட்டத்தில் இறங்கினார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=4l2kodpp&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இவர் தமது ஆதரவாளர்களுடன் ஆசாத் மைதானத்தில் போராட்டத்தை முன்னெடுத்தார். போராட்டம் தீவிரம் அடைந்த நிலையில், மும்பையில் உள்ள தெருக்களில் அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தை கைவிட்டு காலி செய்ய வேண்டும் என்று மும்பை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.இதையடுத்து, நிபந்தனைகளை மீறியதாக கூறி, மராத்தா போராட்டத்தை தொடர மும்பை போலீஸ் அனுமதி மறுத்தது. மேலும் ஆசாத் மைதான வளாகத்தை விட்டு வெளியேறுமாறு போராட்டக்காரர்களுக்கு உத்தரவிட்டது.ஆனால், நீதி கிடைக்கும் வரை உயிரே போனாலும் மைதானத்தை விட்டு வெளியேற மாட்டோம் என்று மனோஜ் ஜராங்கே பாட்டீல் திட்டவட்டமாக தெரிவித்தார். இன்று காலை அவர் மேலும் கூறியதாவது;நீதியையும், கடவுளையும் நாங்கள் நம்புகிறோம். நீதி நிலை நாட்டப்படும் என்று 100 சதவீதம் நம்பிக்கையுடன் இருக்கிறோம். மும்பையில் இப்போது எங்கும் போக்குவரத்து இல்லை.ஆசாத் மைதானத்தில் இருந்து எங்களை வெளியேற்றுவது அரசுக்கு அதிகம் செலவாகும். 2 ஆண்டுகளாக அமைதியாக போராட்டம் நடத்தி வருகிறோம். சட்டத்திற்கு உட்பட்டு போராட்டம் கிடைக்கிறது. கோர்ட் உத்தரவு வந்தவுடன் வாகனங்களை அகற்றி விட்டோம். இவ்வாறு மனோஜ் ஜராங்கே பாட்டீல் தெரிவித்தார். போராட்டம் தீவிரம் அடைந்துள்ளதால் மும்பை நகரில் பதட்டமான சூழல் நிலவுகிறது.இதையடுத்து நிலைமையை பரிசீலனை செய்த மகாராஷ்டிரா அரசு, இட ஒதுக்கீடு தொடர்பான கோரிக்கையை ஏற்றுக்கொள்வதாக கூறியுள்ளது. இதையடுத்து தம் போராட்டம் வெற்றி அடைந்துள்ளதாக மனோஜ் ஜாரங்கி செவ்வாய்க்கிழமை மாலை அறிவித்தார். இதனால் 5 நாட்களாக மும்பையில் நீடித்த பதட்டம் முடிவுக்கு வந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

Subburamu K
செப் 02, 2025 19:40

He is a selfstyled leader, not a reformer or social worker, exploiting caste sentiments.Basically such leaders are hard core criminals only


sankar
செப் 02, 2025 16:28

என்பது ஆண்டு ஆச்சு சுதந்திரம் வாங்கி - இன்னமும் இடஒதுக்கீடு என்றால் முன்னேற்றம் எப்போது ?


Abdul Rahim
செப் 02, 2025 15:48

மகாராஷ்ட்டிரா தேர்தலுக்கு அன்பு இதே மனோஜிடம் வாக்குறுதி அளித்து போராட்டத்தை வாபஸ் பெற செய்தது சங்கிகள் கூட்டம் ஆனால் இன்று பாருங்க இங்கே சங்கிகள் இந்த உயிர் இருக்கவேண்டுமா என எகத்தாள கேள்வி கேட்கிறார்கள் எப்படிப்பட்ட சந்தர்ப்பவாதிகள் ....


தஞ்சை மாமன்னர்
செப் 02, 2025 17:05

மூர்கான் இன்னும் ஒரு சிங்கூர் ஆபரேஷன் செய்து உன்னை போன்ற தாய் நாட்டுக்கு துரோகம் செய்பவனை நாடு கடத்த வேண்டும். உனக்கு இங்கே என்ன வேலை?


patn100krr
செப் 02, 2025 17:14

நீ ஏன் பாலைவனம் குறுக்க வர? இது இந்திய நாட்டில் நடக்கும் பிரச்சினை இதை இந்தியர்கள் நாங்க பார்த்துபோம் . நீ எப்பவும் போல இந்த நாட்டுல சாப்பிட்டுக்கொண்டு அந்த பான்றிஸ்தான் இக்கு வாலாட்டு


GMM
செப் 02, 2025 15:05

இட ஒதுக்கீடு போராட்டத்தில் 10 க்கு மேற்பட்ட சதவீதம் கூட பெறட்டும். பிற சமூக மக்களிடம் பின் தங்கிய மராத்தா சமூக இட ஒதுக்கீடு அவசியம் என்று ஒப்புதல் பெறட்டும். அரசு தயங்காது. திராவிட காங்கிரஸ் கட்சிகள் மற்றும் இட ஒதுக்கீடு எதிர் வினை புரியாமல் வாதம் செய்து வெற்றி கண்ட வழக்கறிஞர் மற்றும் நீதிபதி தான் விடியல் தர வேண்டும். பாதை இல்லாத ஊர் போல் இட ஒதுக்கீடு. அடிப்படை புள்ளி விவரம் இல்லாமல் திராவிடம் கண் மூடி தயாரித்த இட ஒதுக்கீடு மசோதா இடர் தரும் நிலையில் நாட்டை கொண்டு வந்து விட்டது.


Shankar
செப் 02, 2025 14:30

ஜாதிகள் அடிப்படையில் ஒதுக்கீடு செய்வதை அனைத்து துறைகளிலுமிருந்து முற்றிலுமாக தடை செய்யப்படவேண்டும். ஒவ்வொருவருடைய குடும்ப வருவாயை வைத்து ஒதுக்கீடு கொடுத்தால் இல்லாதவர்கள் எந்த ஜாதியினராக இருந்தாலும் முன்னேறுவார்கள்.


Kulandai kannan
செப் 02, 2025 14:13

உலகுள்ளவரை ஊன்றுகோல் தேடும் ஜென்மங்கள். நாடாண்ட சிவாஜி பரம்பரை என்று மார்தட்டுபவர்கள் இட ஒதுக்கீடு கேட்பது ஏற்க முடியாதது.


திகழும் ஓவியம், Ajax Ontario
செப் 02, 2025 13:49

அப்படி ஒரு உயிர் தேவையா? போனால் போகட்டும் போடா இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா...


Murthy
செப் 02, 2025 13:36

EWS என்று 10% தை எளிதாக கொடுத்த பிஜேபி அரசு ஏன் இந்த போராட்டத்தை ஒடுக்க நினைக்கிறது ??.... ஒற்றுமையாக போராடவேண்டும் ......


Mettai* Tamil
செப் 02, 2025 14:20

EWS என்பது ஒரு குறிப்பட்ட பிரிவுக்கு அல்ல .முற்பட்ட பிரிவினர் என்று சொல்லப்படும் 20 க்கும் மேற்பட்ட சமூகத்தில் இருக்கும் ஏழைகளுக்கானது ...


Artist
செப் 02, 2025 14:30

பள்ளிக்குழந்தைகள் சேரும்போது ஜாதி என்ன என்று கேட்காமல் இருந்தாலே இந்த பிரச்னை தீரும்


Artist
செப் 02, 2025 13:22

லீலை


Pats, Kongunadu, Bharat, Hindustan
செப் 02, 2025 13:11

ஏதாவது பிரச்சனை செய்வதற்கென்ற ஊருக்கு ரெண்டு பேர் இந்த மாதிரி இருக்கானுங்க. சொந்த முயற்சியில் உழைத்து முன்னுக்கு வருவோம் என்று எவனும் நினைப்பதில்லை. அடுத்தவனுக்கு இடைஞ்சல் செய்வது, அடித்து பிடுங்குவது, யாரு எக்கேடு கெட்டால் என்ன, நான் மட்டும் நல்லா இருக்கணும் என்று நினைப்பது, நாட்டின் இக்கட்டான சூழ்நிலைகளை பொருட்படுத்தாமல் சுயநலமாக இருப்பது... கொடுமைடா சாமி.


சமீபத்திய செய்தி