உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பல மடங்கு உயர்கிறது கலால் வரி: பிப்ரவரி 1 முதல் சிகரெட் விலை அதிகரிக்கும்!

பல மடங்கு உயர்கிறது கலால் வரி: பிப்ரவரி 1 முதல் சிகரெட் விலை அதிகரிக்கும்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நமது நிருபர்

சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் மீதான கூடுதல் கலால் வரி சட்டத்திருத்தம் பிப்ரவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.நடந்து முடிந்த குளிர்கால கூட்டத்தொடரில், கலால் திருத்த மசோதா - 2025ஐ மத்திய அரசு நிறைவேற்றியது. சிகரெட், சுருட்டு, ஹூக்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் மீதான வரிகளை அதிகரிப்பதே இதன் நோக்கம். தற்போதைய சட்டத்தின்படி, சிகரெட்டுகளின் நீளம் மற்றும் வகையை பொறுத்து, 1,000 சிகரெட்டுகளுக்கு, 200 முதல் 735 ரூபாய் வரை கலால் வரி விதிக்கப்படுகிறது.இந்நிலையில் இன்று (ஜனவரி 01) புகையிலை பொருட்களுக்கு கூடுதல் வரி விதிப்பு பிப்ரவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக மத்திய அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது. இதனால் பிப்ரவரி 1 தேதி முதல் சிகரெட் விலை கணிசமாக உயருகிறது. 1,000 சிகரெட்களுக்கு ரூ.2,050 முதல் ரூ.8,500 வரை கூடுதல் கலால் வரி விதிக்கப்பட்டு உள்ளது.அதேபோல, மெல்லும் புகையிலை மீதான வரி, 25 சதவீதத்தில் இருந்து, 100; ஹூக்கா புகையிலை வரி, 25 சதவீதத்தில் இருந்து, 40; பைப் மற்றும் சிகரெட்டுகளுக்கான புகை கலவைகள் மீதான வரி, 60 சதவீதத்தில் இருந்து 325 சதவீதமாக அதிகரிக்க உள்ளது.இந்த விலை உயர்வு, கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. புகைப்பழக்கத்தை கைவிட உதவும் என ஒரு தரப்பினரும், சட்ட விரோத விற்பனை அதிகரிக்கும் என, மற்றொரு தரப்பினரும் சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

chennai sivakumar
ஜன 01, 2026 22:24

Already the quality of cigarettes have come down. Cigarette mfg companies afraid of revising the prices upwards have reduced the quality by a different mix of Tobacco. Now with the new increase in excuse the quality will definitely further detoriate and the prices would go up. So a smoker who is supposed to get cancer in 10 years will get in 7 years itself


சிட்டுக்குருவி
ஜன 01, 2026 20:08

அப்படியே சாராயத்திற்கும் 200 சதவிகிதம் விதித்திருக்கவேண்டும் .


சுந்தரம் விஸ்வநாதன்
ஜன 01, 2026 17:56

விமான நிலையங்களில் கஸ்டம்ஸ் அதிகாரிகள் காட்டில் இனி பணமழைதான்


Vasan
ஜன 01, 2026 17:17

Cigarette smoking is injurious to lungs. Smokers will continue to smoke despite extra levy of tax on it.


ஆசாமி
ஜன 01, 2026 18:45

same as people who drink “sub standard” liquor despite it being injurious to health. Funnily enough it’s the government which is selling liquor


தியாகு
ஜன 01, 2026 17:13

சிகரெட் விலை ஏறினாலும் டுமிழ்நாட்டு மக்களுக்கு கவலையில்லை, ஏன்னா தெருவுக்கு தெரு கஞ்சா மலிவு விலையில் கிடைக்கிறதே.


Suppan
ஜன 01, 2026 16:21

புகையிலை லாகிரி வஸ்துவாக உபயோகப்படுகிறது. இதைத் தவிர பல்வேறு உபயோகங்கள் உள்ளன. இது ஒரு கிருமி நாசினி, மற்ற பயிர்களுக்குப் பாதுகாப்பு, எலிக்கு எமன். ஹோமோயோபதியில் இது முக்கிய மருந்தாக உபயோகப்படுகிறது. எல்லாவற்றையும் விட இது ஒரு பணப்பயிராதலால் இதைத்தடை செய்வது மிகக்கடினம். .


Rameshmoorthy
ஜன 01, 2026 15:35

Good move , pan Parag should be banned as people make dirty of public places by spitting every where. I know government gets money but for public health it should be banned first


கூத்தாடி வாக்கியம்
ஜன 01, 2026 15:34

அட அந்த எழவ தடை செஞ்சுட்டு போநா என்ன


prakash
ஜன 01, 2026 15:19

Direct ah sell panathane, offline market thaane sell agum , ithuku politicians and govt officials m than maraimuga support apuram maraimuga varumanam


Saai Sundharamurthy AVK
ஜன 01, 2026 14:50

அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற வெளிநாட்டு சிகெரெட்டுகளை பயன்படுத்துவோருக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும். ஏற்கனவே அவை விலை அதிகம். நல்ல விஷயம் தான்.....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை