மேலும் செய்திகள்
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
3 hour(s) ago | 1
கன்டெய்னரில் கடத்திய ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்
3 hour(s) ago
நிரூபித்துள்ளோம்!
3 hour(s) ago
பெங்களூரு: பெங்களூரில் வெளிநாட்டு பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்தியதாக, கைதான துருக்கி பெண் பற்றி, பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.பெங்களூரில் வெளிநாட்டு பெண்களை வைத்து விபசாரம் நடத்திய, துருக்கியை சேர்ந்த பியோனஸ், 39, பெங்களூரு பீன்யா ஜிதேந்திர சாகு, 43.மஹாலட்சுமி லே - அவுட் பிரகாஷ், 32, லக்கரே வைசாக், 22, பரப்பன அக்ரஹாரா கோவிந்தராஜ், 34, நந்தினி லே - அவுட் அக் ஷய், 32, ஒடிசாவின் பிரமோத் குமார், 31, மனோஜ் தாஸ், 23 ஆகிய எட்டு பேரை, பையப்பனஹள்ளி, ஹலசூரு போலீசார் இணைந்து, கைது செய்தனர்.இவர்களில் கைதான பியோனஸ் பற்றி, பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. பியோனசும், பெங்களூரு தொழில் அதிபர் ரோகித் சுவாமி கவுடாவும், கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு, காதலித்து திருமணம் செய்தனர். இவர்களுக்கு 10 வயதில் மகன் உள்ளார். காசநோயால் ரோகித் பாதிக்கப்பட்டார். இதனால் அவரை விட்டு விலக, பியோனஸ் முடிவு செய்தார்.இதுபற்றி அறிந்த ரோகித், பியோனசின் பாஸ்போர்ட், விசாவை கிழித்து போட்டு உள்ளார். அவரால் வெளிநாடு செல்ல முடியவில்லை.இதற்கிடையில் ரோகித் இறந்தார். பணத்திற்கு வழியில்லாமல் இருந்துள்ளார். இந்த சூழ்நிலையில் தான் ஐ.டி., ஊழியரான கோவிந்தராஜ் பழக்கம் கிடைத்தது. இவர் ஆன்லைன் சூதாட்டத்தில், பணத்தை இழந்துள்ளார்.தனியாக செயலி ஒன்றை உருவாக்கி, அதன்மூலம் நண்பர்களை தொடர்பு கொண்டு பேசி உள்ளார். இந்நிலையில் அந்த செயலியை விபசாரத்திற்கு பயன்படுத்தும்படி, கோவிந்தராஜிக்கு, வைசாக் பிளான் போட்டு கொடுத்து உள்ளார். இதனால் தனக்கு ஏற்கனவே பழக்கமான, பியோனஸ் உதவியுடன், வெளிநாட்டு பெண்களை அழைத்து வந்து, இந்த செயலி மூலம், விபசாரம் நடத்தியது தெரியவந்தது.
3 hour(s) ago | 1
3 hour(s) ago
3 hour(s) ago