உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / எக்ஸிம் வங்கியில் அதிகாரி ஆகணுமா: முதுநிலை பட்டதாரிகளுக்கு அருமையான வாய்ப்பு!

எக்ஸிம் வங்கியில் அதிகாரி ஆகணுமா: முதுநிலை பட்டதாரிகளுக்கு அருமையான வாய்ப்பு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: எக்ஸிம் வங்கியில், மேனேஜ்மென்ட் டிரெய்னி பதவிகளுக்கு 50 காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. விண்ணப்பிக்க கடைசி தேதி அக்டோபர் 7.மத்திய அரசுக்கு சொந்தமான இந்தியா எக்ஸிம் வங்கியில், மேனேஜ்மென்ட் டிரெய்னி எனப்படும் அதிகாரி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேனேஜ்மென்ட் டிரெய்னி- 50.50 பணியிடங்களில், எஸ்.சி., பிரிவினருக்கு 7 பணியிடங்களும், எஸ்.டி., பிரிவினருக்கு 3 பணியிடங்களும், ஓ.பி.சி., பிரிவினருக்கு 13 பணியிடங்களும், பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு 5 பணியிடங்களும், PwBD பிரிவினருக்கு 2 பணியிடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

கல்வி தகுதி என்ன?

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் வெளிநாட்டு வர்த்தகம் அல்லது சி.ஏ., ஆகியவற்றில் நிபுணத்துவத்துடன் முதுகலை பட்டம் (MBA / PGDBA / PGDBM / MMS) பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு

விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி., பிரிவினருக்கு மூன்று ஆண்டுகளும், PwBD பிரிவினருக்கு 15 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்ப கட்டணம்

விண்ணப்ப கட்டணம் ரூ.600. எஸ்.சி., எஸ்.டி., பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் மற்றும் பெண்களுக்கு ரூ.100.

விண்ணப்பிப்பது எப்படி?

https://www.eximbankindia.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். தமிழகத்தில் திருச்சியில் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்வது எப்படி?

விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ