உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / விரிவடையும் இமயமலை ஏரிகள்: வெள்ள அபாயத்தில் வடமாநிலங்கள்

விரிவடையும் இமயமலை ஏரிகள்: வெள்ள அபாயத்தில் வடமாநிலங்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பருவநிலை மாற்றம் காரணமாக இமயமலை பிராந்தியத்தில் உள்ள பனி ஏரிகள் மற்றும் பிற நீர்நிலைகளின் அளவு கடந்த, 14 ஆண்டுகளில், 9.24 சதவீதம் அளவுக்கு விரிவடைந்துள்ளதாக மத்திய நீர்வள கமிஷன் அறிக்கை தெரிவிக்கிறது. மத்திய அரசின், 'ஜல்சக்தி' எனப்படும், நீர்வள அமைச்சகத்தின் கீழ் மத்திய நீர்வள கமிஷன் செயல்படுகிறது. இந்த கமிஷன், நாடு முழுதும் பேரிடர் அபாயம் உள்ள மற்றும் நீர் மேலாண்மைக்கு முக்கியமான பகுதி களை முறையாக கண்காணிக்கிறது. இமயமலை பிராந்தியத்தில் உள்ள ஏரிகள் மற்றும் நீர்நிலைகள் குறித்து இந்த கமிஷன் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த, 2011ல் இமயமலை பிராந்தியத்தில் உள்ள பனி ஏரிகள் மற்றும் நீர்நிலைகளின் மொத்த பரப்பளவு, 5.30 லட்சம் ஹெக்டேராக இருந்தது. தற்போது, 2025ல் இது, 5.79 லட்சம் ஹெக்டே ராக உயர்ந்துள்ளது. செயற்கைக்கோள் தரவுகளை அடிப்படையாகக் வைத்து, 'கூகுள் எர்த் இன்ஜின்' தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மொத்தம், 2,843 பனிமலை ஏரிகள் மற்றும் நீர்நிலைகள் கண்காணிக்கப்பட்டன. அவற்றில், 1,435 நீர்நிலைகளின் பரப்பளவு அதிகரித்தது தெரிந்தது. 1,008 நீர்நிலைகளின் பரப்பு சுருங்கி உள்ளது. நம் நாட்டில் உள்ள, 428 பனிமலை ஏரிகள் விரிவடைந்துள்ளன. அவற்றை பேரிடர் முன்னெச்சரிக்கைக்காக தீவிரமாக கண்காணிக்க வேண்டும். அவற்றில் லடாக்கில், 133; ஜம்மு காஷ்மீரில், 50; ஹிமாச்சல பிர தேசத்தில், 13; உத்தரகண்டில், 7; சிக்கிமில், 44; அருணாச்சல பிரதேசத்தில், 181 ஏரிகள் அமைந்துள்ளன. ஏரிகளின் பரப்பளவு அதிகரிப்பதால், பனிமலை ஏரி வெடிப்பு வெள்ள அபாயம் அதிகரிக்கும். இத்தகைய வெடிப்பு வெள்ளங்களை முன்கூட்டியே கணிக்க முடியாது. எனவே தொடர் கண்காணிப்பு அவசியம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

ஜெகதீசன்
அக் 24, 2025 08:39

ஒவ்வொரு பனி யுகங்களுக்கு இடையே நடக்கும் இயற்கையான நிகழ்வு. (Interglacial period warming). பனி யுகம் வெப்பமடைந்து தான் ஆயிரக்கணக்கான உயிரினங்கள் தோன்றி வாழ்கிறது. லட்சக்கணக்கான ஆண்டுகளில் நிலப்பகுதிகள் கடலில் மூழ்கும்,மீண்டும் பனியுகம் என மாறி மாறி வரும்.


அப்பாவி
அக் 24, 2025 07:55

கல்குவாரி ஏதாவது வெக்கணும்னா தமிழ்நாட்டில் நிறைய பேர் இருக்காங்க. அணுகவும். ஃப்ரீயா வெட்டி சமன்படுத்தி குடுப்பாங்க.


கனோஜ் ஆங்ரே
அக் 24, 2025 11:58

இப்படி பேசிப் பேசித்தாண்.. போன மாசம் உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசத்தில் இயற்கை... மண்ணையும் மக்களையும் மொத்தமா அள்ளிட்டு போச்சு... இன்னுமா திருந்த மாட்டீங்க? தமிழ்நாட்லதான் நீ உனக்கு பிடிக்காத, வயிறெரிய ஆட்சி நடக்குது. இங்கதான் கல்குவாரி... உத்தரகாண்ட்..ல உன்னோட கட்சிதான் ஆட்சி செய்யுது... பார்த்தியா, இறைவனுக்கே, நீ வணங்குற கடவுளுக்கே... உத்தரகாண்ட்ல நடக்குற அநியாயம் பிடிக்காம... நிலச்சரிவு, மேகவெடிப்பு தொடர்ந்து நடந்து... “மன்னன் செய்த பாவங்கள், அநியாயங்கள் மக்களை பாதிக்கும்” என்ற முறையில் மொத்தமா உத்தரகாண்ட் மக்கள் மண்ணுக்குள் புதைக்கப்பட்டார்கள், ஊரே மண்ணுக்குள்... “கடவுள் இருக்கான் குமாரு”... அதுனாலதான், தமிழ்நாட்டில் அதுபோல மேகவெடிப்போ, நிலச்சரிவோ, பூகம்பமோ நடைபெறவில்லை.... காரணம், கடவுள் பெயரால் தப்பு இங்கே நடப்பதில்லை...? ஜார்க்கண்ட், உத்தரகாண்ட், இமாசலபிரதேசம் ஆகிய மாநிலங்களில் உங்க கட்சி ஆட்சிதானே நடக்குது.. அங்கே கல்குவாரி அதிகமோ...?


தியாகு
அக் 24, 2025 13:38

தமிழ்நாட்டில் அதுபோல மேகவெடிப்போ, நிலச்சரிவோ, பூகம்பமோ நடைபெறவில்லை. காரணம், கடவுள் பெயரால் தப்பு இங்கே நடப்பதில்லை? ஹி...ஹி...ஹி...


தியாகு
அக் 24, 2025 07:48

விவரம் தெரியாத வட மாநிலங்கள். இதுவே இந்த ஏரிகள் டுமிழ்நாட்டில் இருந்திருந்தால் கட்டுமர திருட்டு திமுகவினர் ஆட்டையை போட்டு பட்டா ரெடி செய்து ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு விற்று காசு பார்த்திருப்பார்கள். கட்டடங்கள் கட்டியதும் தண்ணீர் எங்கிருந்து வரும். ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்திருப்பார்கள்


KOVAIKARAN
அக் 24, 2025 07:31

நம் நாட்டில் தண்ணீர் அதிகம் உள்ள வற்றாமல் ஓடும் நதிகளை, தண்ணீர் வற்றும் நதிகளுடன் இணைக்க மத்திய அரசு ஏற்கனவே திட்டம் தீட்டி வருகிறது. அது வடஇந்திய பிராந்திய மாநிலங்களிலிருந்து படிப்படியாக ஆரம்பித்து, தென்கோடியிலுள்ள வைகை வரை நீட்டிப்பதற்கான திட்டங்கள் உருவாகி வருகின்றன என்று முந்தைய செய்திகள் கூறுகிறன்றன. அதற்கு வேண்டிய நிதி பல லட்சம் கோடிகள் மற்றும் அந்தப் பணியை செய்து முடிக்க பல வருடங்கள் ஆகலாம் என்று முதல் திட்ட அறிக்கை தயாரித்தவர்கள் கூறுகிறார்கள். அந்த நிதியை முதலில் ஏற்பாடு செய்ய வேண்டும். அதற்காக நீண்ட வருடங்கள் கடனாக, உலக வங்கி அல்லது ஜப்பான் போன்ற நாடுகளை நமது நாடு நாடலாம். நதிகள் இணைப்பு என்பது ஒரு இமாலய முயற்சியாகும். எவ்வாறேனும், மோடி அவர்கள் 2029க்கு பிறகும் பிரதமராக நீடித்தால் நிச்சயம் இது சாத்தியமாகும். அவ்வாறு நடந்தால், நமது நாட்டில் தண்ணீர் பஞ்சமும் இருக்காது, நதிநீர் வெள்ளமும் இருக்காது. நாட்டில் நமது அடுத்தடுத்த பல தலைமுறை மக்கள் வெகுவாக பயனடைவார்கள்.


Ramesh Sargam
அக் 24, 2025 06:43

எது எதுக்கோ கோடிக்கணக்கில் திட்டம் தீட்டி மக்களின் வரிப்பணத்தை செலவழிப்பதுபோல, நம் நாட்டில் தண்ணீர் அதிகம் உள்ள வற்றாமல் ஓடும் நதிகளை, தண்ணீர் வற்றும் நதிகளுடன் இணைக்க ஏன் மக்களின் வரிப்பணம் பயன்படுத்தக்கூடாது. அப்படி இணைப்பதால் வறண்ட பிரதேசங்களுக்கும் என்றும் தண்ணீர் பிரச்சினை என்பதே இருக்காது. அப்படி செய்வதால் மக்கள் மீண்டும் விவசாயத்துக்கு திரும்புவார்கள். நாடு வளம்பெறும். ராணுவம், ஐடி, மற்ற தொழிச்சாலைகள் முக்கியம். இல்லையென்று சொல்லவில்லை. அவை எல்லாவற்றையும் விட மிக மிக முக்கியம் விவசாயம். இதை கவனத்தில் கொண்டு மத்திய அரசு மற்ற மாநில அரசுடன் கைகோர்த்து இந்த நதிகள் இணைப்பு திட்டத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.


Field Marshal
அக் 24, 2025 07:00

இன்னும் சில ஆண்டுகளில் விவசாய உற்பத்திக்கு தேவையே இருக்காது ..உணவு மாத்திரைகள் கடைகளில் கிடைக்கும் ..ஸ்பேஸ் ரிசர்ச் செய்பவர்கள் எப்படி சாப்பிடுகிறார்களோ அந்த மாதிரி காப்பி டி மாத்திரை இட்லீ தோசை மாத்திரை பரோட்டா மாத்திரை பிரியாணி மாத்திரை எல்லாம் விற்பனை செய்வார்கள்


Vasan
அக் 24, 2025 12:28

அட போங்க சார். தமிழ்நாட்டுக்கு அதெல்லாம் சரிப்பட்டு வராது.


முக்கிய வீடியோ