உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / எச்.எம்.பி.வி., பரிசோதனை கட்டாயமல்ல என விளக்கம்

எச்.எம்.பி.வி., பரிசோதனை கட்டாயமல்ல என விளக்கம்

பெங்களூரு: 'மாநிலத்தில் எச்.எம்.பி.வி., பரிசோதனை கட்டாயம் அல்ல' என, சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது.கர்நாடகாவில் எச்.எம்.பி.வி., பரவுவதாக பீதி எழுந்தது. சிலருக்கு இந்த தொற்று பாதிப்பு ஏற்பட்டதால், மக்கள் அச்சமடைந்துள்ளனர்.இதையே சாதகமாக பயன்படுத்தும் சில தனியார் மருத்துவமனைகள், தங்களிடம் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு, எச்.எம்.பி.வி., பரிசோதனை கட்டாயம் என கூறி, பரிசோதனை செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.தனியார் மருத்துவமனைகளில், எச்.எம்.பி.வி., பரிசோதனைக்கு 10,000 முதல் 12,000 ரூபாய் வரை, கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இத்தகைய மருத்துவமனைகளை சுகாதாரத் துறை கண்காணித்து வருகிறது.இதுகுறித்து, அதிகாரிகள் கூறியதாவது:அரசு மருத்துவமனைகளில், எச்.எம்.பி.வி., பரிசோதனை செய்யவில்லை. அது கட்டாயமும் இல்லை. இந்த வைரஸ் அபாயகரமானது அல்ல. முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும்.தும்மல் வரும்போதும், இருமல் வரும்போதும் கைக்குட்டை பயன்படுத்துங்கள். அவ்வப்போது கிருமி நாசினி அல்லது சோப் போட்டு, கைகளை நன்றாக கழுவ வேண்டும். மக்கள் நெரிசல் அதிகம் உள்ள இடங்களுக்கு செல்வதை, தவிர்ப்பது நல்லது.காய்ச்சல், இருமல் இருந்தால் வெளியே நடமாடாதீர்கள். வெந்நீர் அருந்துங்கள். ஊட்டச்சத்தான உணவு சாப்பிடுங்கள். உடல் நிலை பாதிப்பிருந்தால், உடனடியாக டாக்டரிடம் சென்று சிகிச்சை பெறுங்கள்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை