உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஐ லவ் யூ உணர்வின் வெளிப்பாடே பாலியல் நோக்கம் அல்ல: மும்பை உயர் நீதிமன்றம்

ஐ லவ் யூ உணர்வின் வெளிப்பாடே பாலியல் நோக்கம் அல்ல: மும்பை உயர் நீதிமன்றம்

மும்பை: 'ஒருவர், 'ஐ லவ் யூ' எனக்கூறுவது உணர்வுகளின் வெளிப்பாடே தவிர, பாலியல் நோக்கமாக இருக்காது' எனக் குறிப்பிட்ட மும்பை உயர் நீதிமன்றம் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் கைதான, 35 வயது நபரை விடுவித்துள்ளது.மஹராஷ்டிராவின் நாக்பூரை சேர்ந்த, 17 வயது சிறுமி, 2015ல் பள்ளியில் இருந்து வீடு திரும்புகையில், 35 வயது நபர் ஒருவர், அச்சிறுமியை இடைமறித்து, அவரது கையை பிடித்து, 'ஐ லவ் யூ' என தெரிவித்தார். இதை தன் தந்தையிடம் சிறுமி தெரிவித்தார். அவர் அளித்த புகாரின் பேரில், அந்நபரின் மீது போக்சோ சட்டத்தின்கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதுகுறித்து விசாரணை நடத்திய நாக்பூர் செஷன்ஸ் நீதிமன்றம், அந்நபருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.இந்த உத்தரவை எதிர்த்து, பாதிக்கப்பட்ட நபர் மும்பை உயர் நீதிமன்ற நாக்பூர் கிளையின் மேல்முறையீடு செய்தார். இது, நீதிபதி ஊர்மிளா ஜோஷி பால்கே அமர்வில் விசாரணைக்கு வந்தது. அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதன் விபரம்:'ஐ லவ் யூ' என்ற வார்த்தையை, பாலியல் நோக்கத்துடன் அணுகக்கூடாது. இந்த வார்த்தையின் உண்மையான நோக்கம் குறித்து ஆராய வேண்டும். இது, பாலியல் வன்கொடுமை அல்லது பாலியல் துன்புறுத்தலின் கீழ் குற்றச்செயலாக கருத முடியாது.பாலியல் சீண்டல், வலுகட்டாயமாக ஆடைகளை களைவது, அநாகரிகமான சைகைகள் அல்லது ஒரு பெண்ணை அவமதிக்கும் வகையில் ஆபாச கருத்துகளை பேசுவது ஆகியவை பாலியல் குற்றங்களாக கருதப்படும்.ஆனால், இவ்வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நபர், பாலியல் நோக்கத்துடன், 'ஐ லவ் யூ' எனக்கூறியதற்கு எந்த ஆதாரமும் இல்லை. எனவே, செஷன்ஸ் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

K V Ramadoss
ஜூலை 02, 2025 12:10

தரமற்ற தீர்ப்பு..


Subburamu Krishnasamy
ஜூலை 02, 2025 10:10

Judges must avoid giving explanation to the social behaviors. Let them thoroughly analyse the cases to give proper verdict as per the law of the land. The higher courts verdict on same sex relationship, extra marital relationship are spoiling the culture, tradition and family values. Freedom is completely misunderstood by the society. Even learned peoples are not going in right path


Mani
ஜூலை 02, 2025 09:41

I love you judge mam


Padmasridharan
ஜூலை 02, 2025 09:03

17 வயது சிறுமிக்கு 35 வயது நபர் எதற்காக இந்த மாதிரி வாக்கியத்தை சொல்லவேண்டும். அவரை விசாரித்தார்களா


GMM
ஜூலை 02, 2025 08:20

ஊசி இடம் கொடுக்க நூல் உள் நுழைய முடியும். பழக்கம் இல்லாத முன் பின் தெரியாத நபரை காதலிக்கிறேன் என்று கூற அஞ்சுவர். பாலியல் குற்றம், வன்கொடுமை, தீண்டாமை பழி வாங்க அதிகம் போலீஸ் பயன் படுத்துவர். விசாரணைக்கு கூட்டு அதிகாரம் தேவை. நீதிபதியும் பெண். சரியான முறையில் சிந்தித்தால் தீர்வு சரி என படும்.


நிக்கோல்தாம்சன்
ஜூலை 02, 2025 06:54

இன்று முதல் சாலையில் செல்வோர் அனைவரும் நீதிபதி ஊர்மிளா ஜோஷி பால்கே அவர்களுக்கு கையை பிடித்து ஐ லவ் யு சொல்லலாம் அல்லவா