உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இன்றைய இந்தியா, 1975ம் ஆண்டு இந்தியா அல்ல; எமர்ஜென்சியை விமர்சித்த காங்., எம்.பி., சசி தரூர்

இன்றைய இந்தியா, 1975ம் ஆண்டு இந்தியா அல்ல; எமர்ஜென்சியை விமர்சித்த காங்., எம்.பி., சசி தரூர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ''எமர்ஜென்சியின் போது சித்திரவதை மற்றும் நீதிக்குப் புறம்பான கொலைகள் நடந்தது. இன்றைய இந்தியா 1975ம் ஆண்டு இந்தியா அல்ல'' என காங்கிரஸ் எம்.பி., சசி தரூர் விமர்சித்துள்ளார்.எமர்ஜென்சி தொடர்பாக, மலையாள தினசரி நாளிதழுக்கு காங்கிரஸ் எம்.பி., சசி தரூர் எழுதி உள்ள கட்டுரையில் கூறியிருப்பதாவது: எமர்ஜென்சியின் போது மனித உரிமை மீறல்களின் கொடூரமான சம்பவங்களை உலகம் எவ்வாறு அறியாமல் இருந்தது. சித்திரவதை மற்றும் நீதிக்குப் புறம்பான கொலைகள் நடந்தது. இன்றைய இந்தியா 1975ம் ஆண்டு இந்தியா அல்ல. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=1w2hnk6g&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்திரா கடுமையான நடவடிக்கைகள் அவசியம் என்று வலியுறுத்தினார். பத்திரிகையாளர்கள், ஆர்வலர்கள் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். 1975ம் ஆண்டு முதல் இந்தியா கணிசமாக வளர்ச்சி அடைந்துள்ளது. அதிக தன்னம்பிக்கை கொண்டதாக மாறி வருகிறது. பல விஷயங்களில் வலுவான ஜனநாயகமாக மாறி வருகிறது. https://www.youtube.com/embed/TzfYT_2R1scஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும். அனைத்து தலைவர்களும் விழிப்புடன் செயல்பட வேண்டும். குறிப்பாக ஜனநாயகத்தின் பாதுகாவலர்கள் எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும். இந்திய வரலாற்றில் ஒரு இருண்ட அத்தியாயமாக மட்டும் நினைவில் கொள்ளக்கூடாது, மாறாக அதன் சிக்கல்களையும், கற்றுக்கொடுத்த பாடங்களையும் முழுமையாகப் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு சசி தரூர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

தாமரை மலர்கிறது
ஜூலை 11, 2025 00:42

காங்கிரஸ் ஒருபோதும் ஆட்சிக்கு வரவாய்ப்பில்லை. அதனால் சசி தரூர் காங்கிரெஸ்ஸை தலைமுழுகி பிஜேபியில் விரைவில் ஐக்கியமாவார்.


சிட்டுக்குருவி
ஜூலை 10, 2025 20:00

ஐயா உங்கள் திறமை, கல்வியறிவு ,நாட்டுப்பற்று ,வாழ்க்கையில் நேர்மை இவை அனைத்திற்கும் தகுதி இல்லாத இடம் சேர்ந்து ,கரையில் தவிக்கும் மீன்போல தவிக்கிறீர்கள் .தங்கள் நல்ல உள்ளம் கொண்டு மக்களுக்கு தொண்டு செய்ய நினைக்கும் உங்களை போன்றோர் தடம் மாறிபோகாமல் நல்வழி எதுவோ அதை தயங்காமல் தேர்வு செய்து நாட்டிற்கு உங்கள் திறமையான பங்களிப்பை வழங்கிட தயங்காதீர் . சுயநலத்தைவிட நாட்டுநலனே பெரியது .


RAJ
ஜூலை 10, 2025 17:05

வேற லெவல் சார் நீங்க. உண்மையை உரக்க சொன்னதற்கு நன்றி.


Balasubramanian
ஜூலை 10, 2025 16:05

தமிழக முதல்வருக்கு நினைவுறுத்துகிறோம்! நீங்கள் மீசா சட்டத்தின் கீழ் ஜெயில் தண்டனை பெற்று துன்பம் அனுபவிக்க நேர்ந்த போது உங்கள் வயது இருபத்தி இரண்டு! ராகுல் காந்தி க்கு அப்போது வயது ஐந்து! ஒன்றும் தெரியாது ! ஆகவே அதை இப்போது நினைவில் கொண்டு அவருக்கு புரிய வைக்க காங்கிரஸ் க்கு ஐந்து தொகுதிகளுக்கு மேல் கிடையாது என்று திட்டவட்டமாக சொல்லி விடுங்கள்!


Ganapathy
ஜூலை 10, 2025 20:18

அருமை


Jack
ஜூலை 10, 2025 15:21

கங்கனா அருகில் அமர ஆசைப்படுகிறார்


Yes your honor
ஜூலை 10, 2025 16:52

கூடுவாஞ்சேரியில் நிலம் வாங்கி கொடுத்துவிடலாமா?


தஞ்சை மாமன்னர்
ஜூலை 10, 2025 18:40

யோவ் உன் குசும்பு ரொம்பவே ஜாஸ்தியா...பேசாமல் சி ஐ டீ காலனியில் இடம் வாங்கி குடுக்க சொல்லும்...


Ganapathy
ஜூலை 10, 2025 20:20

நம்ம மானாட மாராடன்னு செய்யாத விசயமா..இதுதான் திருட்டுதிராவிடம்.