உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / துணை ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் அரசியல்: சந்திரபாபு நாயுடு காட்டம்!

துணை ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் அரசியல்: சந்திரபாபு நாயுடு காட்டம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ''துணை ஜனாதிபதி தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணனின் வெற்றிக்கான பெரும்பான்மை இருந்த போதிலும், ஏன் எதிர்க்கட்சிகள் வேட்பாளரை நிறுத்துகின்றன? இது அவர்களின் அரசியல்,'' என்று ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறினார்.துணை ஜனாதிபதி தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக மஹாராஷ்டிரா கவர்னர் சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டு உள்ளார். அவர் தமது வேட்பு மனுவை தாக்கல் செய்துவிட்டார். சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு தருமாறு பாஜ மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் அனைத்து கட்சிகளிடமும் கேட்டு வருகின்றனர். அதே போல மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னவிசும் ஆதரவு திரட்டி வருகிறார். இதுதொடர்பாக அவர், சிவசேனா (உத்தவ் பிரிவு) தலைவர் உத்தவ் தாக்கரே மற்றும் தேசியவாத காங்கிரஸ் (பவார் பிரிவு) சரத்பவார் ஆகியோரை சந்தித்து ஆதரவு கோரினார்.பின்னர் அவர் அளித்த பேட்டி: நான் உத்தவ் தாக்கரே, சரத் பவார் இருவரிடம் பேசினேன். மஹாராஷ்டிராவின் கவர்னர் சி.பி. ராதாகிருஷ்ணன் துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். தமது முடிவை ஆலோசித்து தெரிவிக்க இருப்பதாக உத்தவ் தாக்கரே கூறி உள்ளார். சரத் பவாரோ, மறுப்பு தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி வேட்பாளருக்கு தான் ஆதரவு என்று கூறி இருக்கிறார். இவ்வாறு பட்னவிஸ் கூறி உள்ளார்.லோக்சபாவில் சிவசேனாவுக்கு (உத்தவ் பிரிவு) 9 எம்பிக்கள் உள்ளனர். தேசியவாத காங்கிரசுக்கு(பவார் தரப்பு) 19 எம்பிக்கள் இருக்கின்றனர். ராஜ்யசபாவில் இரு கட்சிகளுக்கும் தலா 2 எம்பிக்கள் உள்ளனர். இதனிடையே பாஜ கூட்டணியில் இருக்கும் தெலுங்கு தேசம், தேஜ கூட்டணி துணை ஜனாதிபதி வேட்பாளரான சி. பி. ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அக்கட்சியின் தலைவரும், ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு கூறியதாவது: நாங்கள் பாஜ கூட்டணியில் இருக்கும் போது எதிர்க்கட்சியினர் அவர்களின் வேட்பாளருக்கு எப்படி எங்களிடம் ஆதரவு கேட்கலாம் (எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் சுதர்சன் ரெட்டி ஆந்திராவைச் சேர்ந்தவர்). அவரை (சுதர்சன் ரெட்டி) ஆதரிக்க வேண்டும் என்று எப்படி அவர்கள் எதிர்பார்க்கலாம்? தெலுங்கு தேசம் கட்சி தெலுங்கு மக்களுக்கானது. அது வேறு ஒரு விஷயம். நாங்கள் கூட்டணியில் இருக்கின்றோம். எங்கள் கட்சிக்கு என்று ஒரு கொள்கை, நம்பிக்கை இருக்கிறது. இந்த நம்பிக்கையை 50 ஆண்டுகளாக நாங்கள் மக்களிடம் கட்டமைத்து இருக்கிறோம்.துணை ஜனாதிபதி வேட்பாளர்களில் யார் சிறந்தவர் என்று கேட்டால், நான் சி.பி. ராதாகிருஷ்ணனைத் தான் சிறந்தவர் என்பேன். அவர் சிறந்த வேட்பாளர். அனைவரும் அவருக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று சொல்வேன். துணை ஜனாதிபதி பதவி என்பது கவுரவமான ஒன்று. அவரின் வெற்றிக்கான பெரும்பான்மை இருந்த போதிலும், ஏன் எதிர்க்கட்சிகள் வேட்பாளரை நிறுத்துகின்றன? இது தேவையா? அது அவர்களின் அரசியல். ஆனால் நாங்கள் இதில் எந்த அரசியலும் செய்யவில்லை. எங்களுக்கு பெரும்பான்மை இருக்கிறது. நாங்கள் எளிதில் வெற்றி பெறுவோம்.இவ்வாறு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

thewhistle blower1967
ஆக 22, 2025 23:14

ஆந்திராவில் முஸ்லிம்களின் ஓட்டில் ஜெயித்துவிட்டு இப்போ சங்கிகள் கூட சேர்ந்து ஆட்டம் போடுது இந்த பச்சோந்தி ..செருப்படி வாங்குற காலம் வெகு அருகில் ...


Sundar R
ஆக 22, 2025 20:32

Why Telugu Stalin didnt not support Shri CP Radhakrishnan in the Vice-Presidential Election?


அப்பாவி
ஆக 22, 2025 19:29

ஏன் ஒரே நேசன்.. ஒரே வேட்பாளர் கதையா?


Mahendran Puru
ஆக 22, 2025 19:14

இவர்தான் மற்றவர்களை கலக்கமடைய செய்வார். இந்த முறை இவரே கலங்கிப் போய்விட்டார் பாவம்.


Narayanan Muthu
ஆக 22, 2025 19:09

சந்திரபாபு நாயுடு தனது கட்சி ஆதரவு என்பது அவரின் நிலைப்பாடு. எதிர்க்கட்சி வேட்பாளர் குறித்து அவரின் விமரிசனம் தேவையற்றது. பட்டும் திருந்தாவன் பேச்சை ஒரு பொருட்டாகவே மதிக்க தேவை இல்லை.


vivek
ஆக 22, 2025 20:06

மகேந்திர புருடா. நீ உருட்டு


Karthik Madeshwaran
ஆக 22, 2025 18:54

அப்படி என்றால் திமுக கட்சி, தமிழரான ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு தரவில்லை என்று பாஜக கட்சி ஒப்பாரி வைக்க எந்த அருகதையும் இல்லை. இங்கே திமுக கட்சிக்கு டியூசன் எடுக்கும் முன்பு, ஆந்திரா சென்று தங்கள் கூட்டணியில் உள்ள சந்திரபாபுக்கு முதலில் டியூசன் எடுங்கள்.


மதுரை வாசு
ஆக 22, 2025 19:51

சுதர்சன் ரெட்டி தெலங்கானா மாநிலத்தை சேர்ந்தவர். அதனால் அவர் அங்கு சென்று ஓட்டு பிச்சை எடுக்கலாம்.


vivek
ஆக 22, 2025 20:07

இது வேற நடுநடுவுல.கொடுமை பண்ணுது


பேசும் தமிழன்
ஆக 22, 2025 20:19

அங்கே இருக்கும் ஆட்கள் அவர்களுக்கு டியூசன் எடுக்கட்டும்..... இங்கே இருக்கும் விடியல் தலைவருக்கு.... இங்கே இருப்பவர்கள் தானே டியூசன் எடுக்க முடியும் ???.... அதை தான் அவர்கள் செய்கிறார்கள்.


Easwar Kamal
ஆக 22, 2025 18:49

நாயுடுவுக்கும் ரெட்டிக்கும் சண்டை


Tamilan
ஆக 22, 2025 18:41

அரசியல் செய்வது மதவாத கூட்டாளிகளுக்கு மட்டுமே உரித்தானது இல்லை. இரண்டாடுகளுக்கு முன் இல்லாத தகுதி ராதாகிருஷ்ணனுக்கு இப்போது வந்துவிட்டதா?


Tamilan
ஆக 22, 2025 18:38

ஜனாதிபதி தேர்தல் என்பது கட்சிக்கு அப்பாற்பட்டது . எதிர்ப்பு தேவையில்லையெனில் ஆளும் கட்சி எதிர்கட்சிகளிடம் ஒருமித்த கருத்தை உருவாக்கியிருக்கவேண்டும்.


V Venkatachalam
ஆக 22, 2025 19:17

ஒருமித்த கருத்து உருவாக்குறதுல நம்ம ஜப்பான் முதல்வர் தான் கில்லாடி. மோடி அவர்கள் வந்த போது கருப்பு பலூன் பறக்க விட்டாரு..கனி முழி மோடி உயிரோடு திரும்பி போகமுடியாது ன்னு தலையை ஆட்டி ஆட்டி சொல்லிச்சு. பிறகு மோடி அவர்கள் வந்த போது ஜப்பான் முதல்வர் வெள்ளை குடை பிடிச்சாரு.. இரண்டாம் தடவை மோடி அவர்கள் வருவதற்குள் கருத்து ஒத்துமைய ஏற்படுத்திட்டாரு. அப்படிப்பட்ட ஒரு ஜெகஜால கில்லாடி..


புதிய வீடியோ