உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இதய அறுவை சிகிச்சை செய்த போலி டாக்டர்: ம.பி.,யில் 7 பேர் உயிரிழந்த சோகம்

இதய அறுவை சிகிச்சை செய்த போலி டாக்டர்: ம.பி.,யில் 7 பேர் உயிரிழந்த சோகம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

போபால்: ம.பி., மாநிலத்தில் இதய அறுவை சிகிச்சை செய்த போலி டாக்டரால் ஒரே மாதத்தில் ஏழு பேர் உயிரிழந்தனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் போலி டாக்டரை கைது செய்தனர்.ம.பி.,யின் தாமோ மாவட்டத்தில் கிறிஸ்டியன் மிஷினரி மருத்துவமனை உள்ளது. இம்மருத்துவமனை, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்திலும் சேர்ந்து பலனடைந்து வந்துள்ளது. இங்கு ஜான் கெம் என்ற பெயரில் இதய அறுவை சிகிச்சை செய்து வந்துள்ளார். பிரிட்டனை சேர்ந்தவர் என அவர் கூறி வந்துள்ளார். இவர், பலருக்கு இதய அறுவை சிகிச்சை செய்துள்ளார். அவர்களில் ஏழு பேர் ஒரே மாதத்தில் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து அப்பகுதி மக்கள் மத்தியில் பயம் ஏற்பட்டது.இது குறித்து தொடர்ந்து புகார்கள் வரவே, அந்த மருத்துவமனையில் மாவட்ட அதிகாரிகள் சோதனை நடத்தினர். அ தில், அறுவை சிகிச்சை செய்தது போலி டாக்டர் என்பது தெரியவந்தது. அவரின் உண்மையான பெயர் நரேந்திர விக்ரமாதித்யா யாதவ் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டதுடன், மருத்துவமனையில் சோதனை செய்து முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர். பிரிட்டனில் உள்ள டாக்டரை போன்றே போலி ஆவணங்களை அவர் தயார் செய்ததும், போலி டாக்டர் மீது ஐதராபாத்தில் கிரிமினல் வழக்கு நிலுவையில் உள்ளதும், அவர் பல சர்ச்சைகளில் சிக்கி உள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த போலி டாக்டர் கைது செய்யப்பட்டார்.இது தொடர்பாக தீபக் திவாரி என்ற வழக்கறிஞர் கூறியதாவது: அவரிடம் சிகிச்சை பெற சென்ற நோயாளிகளின் உறவினர்களை சந்தித்த போது பல உண்மைகள் வெளியே வந்தது. அவர்கள், சிகிச்சைக்காக உறவினர்களை அழைத்துச் சென்றோம். ஆனால், அவரின் நடவடிக்கையை பார்த்து பயந்து வேறு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம் என்றனர். தற்போது அவர், போலி டாக்டர் என்பது தெரியவந்துள்ளது. உண்மையான டாக்டர் பிரிட்டனில் உள்ளார். கைது செய்யப்பட்டவர் வேறு நபர். இவருக்கு எதிராக ஐதராபாத்திலும் வழக்கு உள்ளது. அவர் உண்மையான ஆவணங்களை யாரிடமும் காட்டியது கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.தேசிய மனித உரிமைகள் கமிஷன் உறுப்பினர் ஒருவர் கூறுகையில், ' இந்த மருத்துவமனை ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் பணம் பெற்று வந்துள்ளது தெரியவந்துள்ளது. இது முக்கியமான பிரச்னை. பிரச்னை குறித்து நாங்களே எடுத்து விசாரணை செய்து வருகிறோம்,' எனத் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Kamaraj TA
ஏப் 05, 2025 20:41

ம.பி.,யின் தாமோ மாவட்டத்தில் கிறிஸ்டியன் மிஷினரி மருத்துவமனை உள்ளது. இம்மருத்துவமனை, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்திலும் சேர்ந்து பலனடைந்து வந்துள்ளது. இங்கு ஜான் கெம் என்ற பெயரில் இதய அறுவை சிகிச்சை செய்து வந்துள்ளார். பிரிட்டனை சேர்ந்தவர் என அவர் கூறி வந்துள்ளார். இதெப்படி?


Ramesh Sargam
ஏப் 05, 2025 20:05

அவன் ஒரு போலி என்று அந்த மருத்துவமனையில் பணிபுரிந்த மற்ற மருத்துவர்களுக்கு சந்தேகமே வரவில்லையா? அதெப்படி ...? ஒருவேளை எல்லோருமே போலியா...?


சிட்டுக்குருவி
ஏப் 05, 2025 19:13

எந்த ஒரு மருத்துவமனையும் ஒரு மருத்துவரை வேளையில் அமர்தும்போது அவர் தேசிய அளவில் மருத்துவராக/அறுவை சிகிச்சை மருத்துவராக மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்தவர் என்பதை உறுதிப்படுத்தும் நடைமுறை ஏற்படுத்த வேண்டும்.மாநில அரசுகள் இதை உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டும் .


தமிழன்
ஏப் 05, 2025 17:25

கூமுட்டை கோஷ்டிகளின் சாதனை இது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை