வாசகர்கள் கருத்துகள் ( 1 )
உத்தரப்பிரதேசத்தில் ஒரு மாதமாக மின்வெட்டு உள்ளதாக அந்த மக்களே கூறுகின்றனர். ஆனால் நம்மூரில் அங்கு பாலாறும் தேனாறும் தெருக்களில் ஓடுகிறது என்று கதை விட்டுக் கொண்டு உள்ளனர்.
லக்னோ: உ.பி., மாநிலம் ஜான்சியில், கடும் வெயிலால் தவித்த குடும்பம் ஒன்று ஏ.டி.எம். மையத்தில் தஞ்சம் அடைந்தது. ஏடிஎம் மையத்திற்குள் ஓய்வெடுக்கும் உள்ளூர்வாசிகளின் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. உத்தரபிரதேச மாநிலத்தின் ஜான்சியில் கடும் வெயில், புழுக்கத்தால் பாதிக்கப்பட்ட ஒரு குடும்பம் அருகில் உள்ள ஏ.டி.எம்., மையத்தில் தஞ்சம் அடைந்தனர். தஞ்சம் அடைந்துள்ள குடும்பத்தின் வீடியோ தற்போது வைரல் ஆகி உள்ளது. மேலும் இந்த வீடியோ நெட்டிசன்கள் மத்தியில் கவனத்தை பெற்றுள்ளது.வீடியோவில் காணப்பட்ட ஒரு பெண் கூறியதாவது:நாங்கள் வசிக்கும் பகுதியில் கடந்த ஒரு மாதமாக நீண்டகால மின்வெட்டை எதிர்கொண்டோம். தடையற்ற மின்சாரம் மற்றும் ஏர் கண்டிஷனிங் உள்ள ஒரே இடம் ஏ.டி.எம்., மையமாக இருந்ததால், எங்களது முழு குடும்பமும் இங்கு வந்துவிட்டது.இதுவரை யாரும் எங்களை தடுக்கவில்லை என்றும். அவ்வாறு தடை செய்யப்பட்டால், நாங்கள் சாலையில் தூங்க வேண்டியிருக்கும்.இவ்வாறு அந்த பெண் கூறினார்.
உத்தரப்பிரதேசத்தில் ஒரு மாதமாக மின்வெட்டு உள்ளதாக அந்த மக்களே கூறுகின்றனர். ஆனால் நம்மூரில் அங்கு பாலாறும் தேனாறும் தெருக்களில் ஓடுகிறது என்று கதை விட்டுக் கொண்டு உள்ளனர்.