உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / விவசாயிக்கு கைவிலங்கு: விசாரணைக்கு உத்தரவு

விவசாயிக்கு கைவிலங்கு: விசாரணைக்கு உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஹைதராபாத் : குற்றம் சாட்டப்பட்ட விவசாயியை கைவிலங்குடன் சிகிச்சைக்கு அழைத்து சென்றது ஏன் என்பது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும்படி, தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.தெலுங்கானாவில் முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையிலான காங்., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள கோடங்கல் சட்டசபை தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.,வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் முதல்வர் ரேவந்த் ரெட்டி. இந்த தொகுதிக்கு உட்பட்ட லகசார்லா கிராமத்தில், அரசு திட்டத்துக்காக நிலம் கையகப்படுத்தப்படுவது தொடர்பாக பொதுமக்களிடம் கடந்த நவ.,11ல் கருத்து கேட்கப்பட்டது.அப்போது ஏற்பட்ட மோதலில் அரசு அதிகாரிகள் சிலரை விவசாயிகள் சரமாரியாக தாக்கினர். இது தொடர்பாக ஹிரா நாயக் என்ற விவசாயி உள்ளிட்ட 25 பேரை கைது செய்த போலீசார், அவர்களை சிறையில் அடைத்தனர். இதையடுத்து சங்காரெட்டி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த விவசாயி நாயக்குக்கு, திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனால் அவர் கைவிலங்குடன் மருத்துவமனைககு அழைத்துச் செல்லப்பட்டார். இதனால் சர்ச்சை ஏற்பட்டது.இது, 'மனிதாபிமான மற்ற செயல்' என்று எதிர்க்கட்சியான பாரத் ராஷ்ட்ர சமிதியின் செயல் தலைவர் ராமாராவ் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்நிலையில், கை விலங்குடன், விவசாயியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதற்கு முதல்வர் ரேவந்த் ரெட்டி கண்டனம் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக முதல்வர் மேலும் கூறியதாவது: இதுபோன்ற சம்பவங்களை ஏற்க முடியாது. கைவிலங்குடன் விவசாயிக்கு சிகிச்சை அளித்தது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். இது தொடர்பாக சங்கா ரெட்டி போலீஸ் எஸ்.பி., விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்வார். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 13, 2024 12:10

கைவிலங்கு இடுதல்... ரொம்ப சிம்பிள் லாஜிக் என்னன்னா சட்டவிரோதமாகச் செயல்படும் வரலாறு கொண்ட ஒருவரை கைவலிங்கிடாமல் அழைத்துச் சென்றால் தாக்கிவிட்டு தப்ப வாய்ப்பு... மற்றவர்களுக்கு பெரும் ஆபத்தை விளைவிக்கவும் வாய்ப்பு.. அரசியலமைப்புக்கு எதிரானது.. மனித உரிமைக்கு எதிரானது என்றெல்லாம் சட்டங்கள் கூறினாலும் பல மாநிலங்களில் நடைமுறையில் கைவிலங்கிட்டு அழைத்துச் செல்லும் நடைமுறை தொடர்கிறது.. ஆகவே தொடர்ந்து அரசியலாக்கப்பட்டும் வருகிறது.. ஆக உறுதியான, இறுதியான சட்டமில்லை. நீடிக்கட்டும் சட்டத்தின் தெளிவின்மை.. வாளுக அம்பேத்கர் ......


Yes your honor
டிச 13, 2024 10:12

"உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது எழுவாரை எல்லாம் பொறுத்து" உன்னைப்போன்ற திராவிடியா கூட்டத்திற்கு உழவனெல்லாம் குறைவாகத்தான் தெரியும். உன்கருத்து இதுவானால் இப்பொழுது முதல் அரிசி காய்கறிகள் எதுவும் சாப்பிடாமல் திமுக போஸ்டரை மட்டும் சாப்பிட்டு உயிரோடு இரு.


வைகுண்டேஸ்வரன்
டிச 13, 2024 09:06

இதையெல்லாம் ஒரு செய்தி ன்னு போட்டு...


அப்பாவி
டிச 13, 2024 08:20

நேத்திக்கி ரஞ்சனி சீரியல் பாத்திருந்தா தெரியும் நம்ம சிரிப்பு போலீஸ் செயல்படும் விதம். எவனோ துட்டு இருக்குறவன் இன்னொருத்தன் மேலே கம்ப்ளைண்ட் குடுத்தா, உடனே எஸ்.ஐ சகிதம் போய் தூக்கிட்டு வந்து போட்டு அடிப்பாய்ங்களாம். கேட்டா, ஏண்டா எனக்கே சட்டம் சொல்லித்தர்ரீங்களான்னு பாய்வாங்களாம். இதுதான் நடைமுறையில் இருக்கு. நாளைக்கி சீரியலில் கம்ப்ளைண்ட் குடுத்தவனே பணத்த அமுக்கினதை காட்டுவாங்க. நம்ம சிரிப்பு போலிஸ் அசடு வழியும். பொய் கம்ப்ளைண்ட் கொடுத்தவனை துட்டு வாங்கிட்டு உட்டுரும்.


Raj
டிச 13, 2024 07:11

எதிர்த்து கேள்வி எழுப்பினால் கைதா? என்னடா அரசாங்கம். வாக்கு சேகரிக்கும் போது மட்டும் தான் கும்புடு. அமைச்சர் ஆனதும் வம்பு[டு].


Kasimani Baskaran
டிச 13, 2024 06:18

குற்றவாளி என்று ஒருவரை நீதிமன்றம் தீர்மானிக்காதவரை கைவிலங்கு போட காவல்துறைக்கு அதிகாரம் இருப்பதாக தெரியவில்லை


வைகுண்டேஸ்வரன்
டிச 13, 2024 09:04

தவறு. Èven a suspect can be hand-cuffed, in case it is anticipated that the said suspect is capable of harming officials and or public and capable of running away from custody.


புதிய வீடியோ