உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பஞ்சாபில் விவசாயிகள் போராட்டம் முறியடிப்பு: ஹரியானாவில் தடுப்புகள் நீக்கம்

பஞ்சாபில் விவசாயிகள் போராட்டம் முறியடிப்பு: ஹரியானாவில் தடுப்புகள் நீக்கம்

சண்டிகர்: விவசாய சங்கங்கள், மாநில எல்லையில் அமர்ந்து கடந்த ஓராண்டாக நடத்திய போராட்டத்தை, பஞ்சாப் அரசு முறியடித்தது. விவசாயிகள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர். இதைத் தொடர்ந்து எல்லையில் அமைத்திருந்த தடுப்புகளை ஹரியானா அரசு நேற்று நீக்கியது.பஞ்சாபில் முதல்வர் பகவந்த் சிங் மான் தலைமையில், ஆம் ஆத்மி ஆட்சி அமைந்துள்ளது. ஹரியானாவில், முதல்வர் நயாப் சிங் சைனி தலைமையில் பா.ஜ., ஆட்சி அமைந்துஉள்ளது. பஞ்சாபைச் சேர்ந்த சில விவசாய சங்கங்கள், குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்ட அங்கீகாரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்தாண்டு பிப்., 13ல் டில்லி நோக்கி பேரணி செல்ல முயன்றனர்.இவர்களை பஞ்சாப் அரசு தடுத்து நிறுத்தியது. இதைத் தொடர்ந்து, பஞ்சாபை ஒட்டியுள்ள ஹரியானா அரசும், டில்லி நோக்கி செல்ல விடாமல் தடுக்க எல்லையில் தடுப்புகளை அமைத்தது. இதையடுத்து பஞ்சாப் எல்லையில் அமர்ந்தபடி, விவசாய சங்கங்கள் ஓராண்டாக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வந்தன. இதனால், பஞ்சாபிலிருந்து ஹரியானா வழியாக டில்லிக்கான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் பேச்சு நடத்த மத்திய அரசு குழு அமைத்துள்ளது. இதன்படி, மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில் சண்டிகரில் நேற்று முன்தினம் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த பேச்சில் பங்கேற்று திரும்பிய விவசாய சங்கங்களின் முக்கிய தலைவர்களான ஸ்வரண் சிங் பந்தேர் உள்ளிட்டோரை, மொஹாலி எல்லையில், பஞ்சாப் போலீசார் தடுத்து நிறுத்தினர். இதைத் தொடர்ந்து, எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகளை அங்கிருந்து வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர்.இதைத் தொடர்ந்து எல்லையில் அமைக்கப்பட்டிருந்த தடுப்புகளை அகற்றும் பணியில், பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில அரசுகள் நேற்று ஈடுபட்டன. புல்டோசர் உள்ளிட்டவை பயன்படுத்தி இந்தத் தடுப்புகள் அகற்றும் பணி தீவிரமாக நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

kulandai kannan
மார் 21, 2025 14:09

இதே வேலையை பா.ஜ.க அரசு செய்திருந்தால் மீடியா பொங்கியிருக்கும்.


Karthik
மார் 21, 2025 09:44

உண்மையான விவசாயிகள் யாராவது ஓராண்டுக்கும் மேலாக எல்லையில் அமர்ந்து தொடர் போராட்டம் நடத்துவது சாத்தியமா??. மெய்யாலுமே அவர்கள் விவசாயிகள் தானா?? எங்கியோ இடிக்கிதே..


sankaranarayanan
மார் 21, 2025 08:39

நல்ல செயல் தாமதம் ஆனாலும் இதை மக்கள் முழுவதும் அனைவரும் வரவேர்க்கிறார்கள் இனி இது போன்ற மக்களுக்கு இடையூரு விளைவிக்கும் யாராக இருந்தாலும் மத்திய மாநில அரசுகள் இரும்புக்கரம்கொண்டு செய்யப்பட்டு மக்களின் வாழவாரத்தை பேணிக்காக்க வேண்டும்ம்


Velan Iyengaar,Sydney
மார் 21, 2025 08:10

ஹும் அடுத்த தேர்தல் நேரத்துல மறுபடியும் பாத்துகலாம் போர் ஜரி வால்


Sampath Kumar
மார் 21, 2025 08:10

விவசாயிகளின் போராட்டம் முறியடிப்பு ?/ நீங்க முறியடிக்க முறியடிக்க விவசாய உன் வயிற்றில் அடிப்பான் அப்போ அழ கூட முடியாத நிலையில் நீ நிற்பாய் அப்போ தெய்ரயும் விவசாயின் வலியும் வேதனையும்


enkeyem
மார் 21, 2025 10:51

எந்த விவசாயியும் வருடக்கணக்கில் உட்கார்ந்து டென்ட் அடித்துக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட மாட்டான். இவர்கள் அனைவரும் கமிஷன் மண்டி உரிமையாளர்கள். சும்மா முட்டுக்கொக்க வேண்டி உருட்டவேண்டாம்


ஆரூர் ரங்
மார் 21, 2025 07:25

பைடன் சோரஸ் அடிவாங்கியதன் விளைவு . இனி அன்னிய வரும்படிக்கு வழியில்லை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை